முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 257 உடல், உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில்

  உடல், உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தாய்! இலங்கையில் சம்பவம்  By Shankar  10 நிமிடங்கள் முன்             விளம்பரம் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 51 வயதுடைய நபரொருவரின் சடலம் களனி ஆற்றங்கரையில் இருந்து வியாழக்கிழமை (செப்.28) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. டி.ஜி பிரதீபா என அடையாளம் காணப்பட்ட இறந்தவர், தலை துண்டிக்கப்பட்டு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார். இறந்தவரின் உறவினர்கள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். பிரதீபாவின் மகள் புதன்கிழமை (செப். 27) தனது தாய் காணாமல் போனதாக முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். விசாரணையின் போது கிடைத்த சிசிரிவி காட்சிகளில், இறந்தவர் 55 வயதுடைய சந்தேக நபரை, கடுவெல நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே சந்தித்ததாகவும், அதனைத் தொடர்ந்து KI 3030 என்ற இலக்கத் தகடு கொண்ட அவரது காரில் இருவரும் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சியமபலபே பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் சுதீர வசந்த என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர

e 256 விளித்துக்கொண்ட தமிழர்கள்

  முல்லைத்தீவு நீதிபதியின் பதவி துறப்பு - மிகப்பெருமெடுப்பில் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த தீர்மானம்  By Vanan  7 மணி நேரம் முன்             விளம்பரம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. இன்று (29) யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி இந்த முடிவை எடுத்தனர்.  மனிதச்சங்கிலி போராட்டம் இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிகப்பெருமெடுப்பில் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை புறக்கணிக்குமாறு தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு மருதனார்மடத்திலிருந்து யாழ். நகர் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது. பின்னர் முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவ

e 255 சிறிலங்கா மீதான சர்வதேசத்தின் கடுமையான முடிவுகள்! எதிர்காலத்தில் வரலாம்?

  சிறிலங்கா மீதான சர்வதேசத்தின் கடுமையான முடிவுகள்! திரிசங்கு சொர்க்க நிலை..  By Vanan  2 மணி நேரம் முன்             விளம்பரம் சிறிலங்கா அரசாங்கம் திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கிறது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச நாணய நிதியத்தின் குழு நாட்டுக்கு வருகை தந்து இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கேட்கிறது. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இப்பொழுது 3.6 பில்லியன் டொலர்கள் மத்திய வங்கியிடம் கையில் இருக்கின்றன. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தினால் இந்தத் தொகை குறையும். இறக்குமதிகள் அதிகரிக்கும். சர்வதேச நாணய நிதியமும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தச் சொல்லியே கூறுகிறது. அப்படிச் செய்யும் பட்சத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினுடைய நிலைமை குறிப்பாக டொலர் பற்றாக்குறை ஏற்படலாம். மீண்டும் நெருக்கடி வரலாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு சி

e 254 இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video)  By Kajinthan  1 மணி நேரம் முன்             Report விளம்பரம் இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது அது குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்திலே நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக பதவி விலக நேர்ந்துள்ளது.  யாழ்ப்பாணம் - சுதுமலையில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடரும் சீரற்ற காலநிலை: சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்தும் தெரிவிக்கையில், முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்திலே நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுற

e 253 நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன?

  நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன?  By Sulokshi  3 மணி நேரம் முன்             விளம்பரம்   கொலைமிரட்டல் காரணமாக ஒரு  நீதிபதி தப்பிச் செல்லும் நிலை க்குத் தள்ளப்பட்டால் நாட்டு மக்களின் நிலை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மேலும் சனல் 4 இல் வெளியான தகவல்கள் குறித்து விசாரணை கோரி எஸ்.எம்.மில் பதிவிட்ட பல இளைஞர்களுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ள போதும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை இடம்பெறவில்லை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். நாட்டைவிட்டு வெளியேறிய நீதிபதி குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அது தொடர்பிலேயே மேற்படி கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பியுள்ளார்.