முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b268

 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி வலிந்து தாக்குதலில் என்ன நடந்தது…?

மார்ச்09, 2018


■2009 மாசித்திங்கள் 25 ஆம் நாள். இரவு 7.30 மணி இருக்கும். திடீர் என்று வோக்கிகள் அழைக்கின்றன. குறித்த இடம் ஒன்றை குறிப்பிட்டு ஒன்று கூடுவதற்கான கட்டளை சங்கேத மொழியாக வருகின்றது. குறித்த நேரத்தில் அனைவரும் குறித்த பகுதியில் ஒன்று கூடுகின்றனர். ஒன்றுகூட்டப்பட்ட இளநிலை தளபதிகள் அணித்தலைவர்கள் முன்னிலையில் அந்த கம்பீரமான குரல் ஓங்கி ஒலிக்கிறது. ” ஒவ்வொரு மூத்த தளபதிகளையோ அல்லது போராளிகளையோ நாம் இழந்த போதும் எமது போராட்டம் கைவிடப்பட வில்லை. தொடர்ந்தும் போராடி வெற்றிப் பாதைகளில் நாம் பயணித்துள்ளோம். இது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடையம். ஆனால் இறுதி யுத்தம் என்று எதிரி எங்கள் மீது பாரிய நடவடிக்கைகளை சர்வதேசத்தின் முழுமையான பங்கோடு செய்து கொண்டிருக்கிறான்.


நாம் தென் தமிழீழம் தொடக்கம் இன்றைய களமுனை வரை பின்நகர்ந்து கொண்டே வருகிறோம். எம் போராட்டத்தின் பின்னடைவு எமது மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை களமாடி இந்த மண்ணில் வீழ்ந்த எங்கள் உறவுகளுக்கு நாம் கொடுக்கும் ஆறுதல் இது தானா? எமது நேசம் கொண்ட மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முடிவு இது தானா? அண்ணைக்கு என்ன பதில் கூறப் போகிறோம்? …. பல வினாக்களோடு தொடர்கிறது அந்த குரல்.


இப்போது மிக நெருக்கடியான நிலையில் நாமும் எமது மக்களும் இருக்கின்றோம். இந்த நெருக்கடியான சூழலை நாம் எவ்வாறு மாற்றப் போகின்றோம். என்பதை யோசிக்க வேண்டும். இராணுவம் முன்னேற முன்னேற பின் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இது தொடரக் கூடாது இதற்கு முற்றுப்புள்ளியிட எதாவது செய்ய வேணும். எப்படி, எப்ப செய்ய போறம் என்றத யோசிப்பம். அண்ண எங்களில நிறைய நம்பிக்கை வைச்சிருக்கிறார். அண்ணைக்காக, எங்கள் மாவீரர்களுக்காக எதாவது செய்ய வேணும்…


தொடர்கிறது அந்த குரல். அந்த குரலுக்கு சொந்தமானது சர்வதேசமே கேட்டு அஞ்சும் கட்டளைகளை ஓய்வின்றி தொய்வின்றி தொடர்ந்து வழங்கி சண்டைகளைச் செய்த வரலாற்று சொத்தாகிய மூத்த தளபதி சொர்ணம்.

“அண்ண சாளைப் பக்கத்தால ஒன்றை செய்யலாம் அண்ண” செய்தா தேவிபுரம் அணைய பிடிச்சு அப்பிடியே கடற்கரைப் பக்கமாக விரிச்சா எங்கட இடியனுகள போட்டு அவனுக்கு நல்லா குடுக்கலாம் அண்ண” சொல்லி முடித்தான் விசேட வேவு அணி போராளி லெப்டினன் கேணல் விந்தன். விந்தன் அண்ண சொல்லி முடித்த பாதைகள் திட்டங்கள் சொர்ணம் அண்ணாவால் திட்டமிடக்கூடியவாறு இருந்தது எனிலும் ஆபத்துக்கள் அதிகமாக இருந்தது.


ஆனாலும் வேறு பாதைகள் வேறு திட்டங்கள் இருக்கும் என்று சொர்ணம் அண்ண நம்பினார் அதனால் அதற்கான தரவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. உடனடியாக விந்தன் மற்றும் ஆதவன் தலமையிலான விசேட வேவுப் போராளிகள் சண்டைக்காக வேவுத்தரவுகளைத் திரட்டுகிறார்கள். அவசரமாக திரட்டப்பட்ட தரவுகளூடாக திட்டங்கள் வகுக்கப்படகின்றன.

அணிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன.


கணணிப்பிரிவின் சிறப்பு பொறுப்பாளராக இருந்த சார்ஸ் மற்றும் அவரது போராளிகள் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு தளபதி அஸ்வினி மற்றும் போராளிகள், மணலாறு கட்டளைப்பணியக போராளிகள், தமிழீழ வான்படையின் சிறப்பு அணி போராளிகள், திருகோணமலை மாவட்ட சண்டை அணி, ராதா படையணி, மாலதி படையணி, சோதியா படையணி, விசேட வேவுப் போராளிகள் மற்றும் புலனாய்வுத்துறைப்படையணி என பல அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது.


மூத்த போராளிகள் இளநிலை தளபதிகள் புதிய போராளிகள் என்று அனைவர் முகத்திலும் வெல்ல வேண்டும் என்ற உணர்வு வெளிப்படுகிறது. அவர்களது கரங்களில் தவழ்ந்த ஆயுதங்கள் உறுதியாக நிமிர்ந்து நின்றன. எதாவது செய்ய வேணும் இல்லை என்றா எங்கட தமிழீழம் அந்நிய அட்டூழியத்திற்கு சிதைந்து போகும். விடக்கூடாது நாங்கள் செத்தாலும் இந்த சண்டையை வெல்ல வேணும் அண்ணையின் நம்பிக்கையை நிர்மூலமாக்காது வெற்றி பெற வேணும். அனைவரும் இதைத்தான் ஆயுதத்தை பிடித்திருக்கும் உறுதியில் சொல்லி கொண்டார்கள்.

அணித்தலைவர்கள் தமது அணியை உறுதி குலையாது வைத்திருந்தார்கள். எதாவது செய்ய வேண்டும் என்ற உறுதி அனைவரிடமும் இருந்ததை மறுக்க முடியாது.


முல்லைக்கடலின் சாளைப்பகுதி இரவு பகல் என்ற வித்தியாசம் தெரியாத அளவுக்கு வெளிச்ச குண்டுகளால் நிரம்பி இருக்கும் ஒரு நிலாக்கால நேரம் அது. எப்போதும் தீவிர கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டிருக்கும் பகுதி. ஆனாலும் அணிகள் அங்குதான் நிலைப்படுத்தப்பட்டன. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் ஆனால் மிக முக்கியமானது மக்களோடு மக்களாக போராளிகள் ஒருங்கிணைக்கப்படும் சந்தர்ப்பத்தில் தகவல் கசிவுகள் அதிகமாகும். அதனூடாக போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதாக சிங்களம் மக்கள் மீது தாக்குதல் நடாத்தும். இதன் மூலமாக எழப்போகும் அழிவுகள் வெற்றி பெற்றாலும் பெரும் வலியைத் தரும் அதனால் போராளிகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.


கடற்புலிகளின் பிரதான தளங்களில் ஒன்று அமைந்த சாளை பகுதி அது. அதனால் எந்த நேரமும் தீவிர தாக்குதல்கள் வான்படையாலும், தரைப்படையாலும் செய்யப்படும் பகுதி. கடற்படை கலங்கள் தாக்க வருவதும், கடற்புலிகளின் படகுகளைக்கண்டு திகிலடைந்து ஓடுவதும், ஓடும் படகுகளில் ஏதோ ஒன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்படுவதும் இறுதி நாட்களில் நடக்கும் சாதாரண விடையங்கள்.


இவ்வாறான ஒரு களச்சூழலில் தான் ஒருங்கிணைப்புத்தளபதி சொர்ணம் அண்ணாவால் ஒருங்கிணைக்கப்பட்ட 750 ற்கும் மேற்பட்ட படையணிப் போராளிகள் அணிவகுத்து நின்றார்கள். வானத்தில் சுற்றி கொண்டிருக்கும் “வண்டு” க்கும் ( Beech craft- ஆளில்லா வேவு விமானம்) தரை வழி புகுந்திருக்கும் இராணுவ வேவாளர்களுக்கும் கண்ணில் மண்ணைத்தூவி அத்தனை போராளிகளும் உருமறைந்து வலிந்து தாக்குதலுக்காக காத்திருக்கின்றனர்.

தொடரும்….


கவிமகன்.இ

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?