முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b283

 கொரோனாவை குணப்படுத்த மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை! கொரோனா குணப்படுத்துவதற்கான மருந்துகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர் ஒருவர் சமூக ஊடகங்களில் கொரோனாவிற்கு கிசிச்சை என வெளியாகும் தகவல்களை நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மேலும், கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் பிரியதர்ஷினி கலப்பதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கொரோனா வைரசிற்கான மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை ஆராய்ச்சிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன தடுப்பூசி மாத்திரமே தற்போதுள்ள ஒரேயொரு சிகிச்சை என அவர் தெரிவித்துள்ளார்.  மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளின் அடிப்படையில் விட்டமின் சி, டி,ஜிங் ஆகியவற்றில் எடுப்பது பிரச்சினையில்லை என தெரிவித்துள்ள அவர் பலர் சமூக ஊடகங்களில் பல மருந்துகளை பரப்புகின்றனர் அவற்றை நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் காய்ச்சல் இருந்தால் பரசிட்டமோலை பயன்படுத்தலாம், மருத்துவர்கள் தெரிவித்த அளவிற்கே பரசிட்டமோலை பயன்படுத்தவேண்டும்,பெரியவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்று தடவை இரண்டு குளிசை வீதம் எடு

TAMIL Eelam news w1

  விடுதலைப்புலிகளுடன் தலிபான்களை ஒப்பிட முடியுமா? 1 hour ago             1 SHARES விளம்பரம் தலிபான்களும் தமிழீழ விடுதலைப்புலிகளும் பல வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் அவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் ஒப்பிடத்தக்கவை என ஊடகவியலாளர் கோபிரட்ணம் தெரிவித்தார். எமது ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறினார். இதன்போது,விடுதலைப்புலிகளுடன் தலிபான்களை ஒப்பிட முடியுமா? என ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில் பின்வருமாறு,

TAMIL Eelam news b282

 தமிழர்களுக்கான தீர்வு விவகாரம் - சர்வதேசத்தை நாடும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையில் நீண்டகாலமாக காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்கு சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசாங்கம் இதுவரை தேசிய பிரச்சனை தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள நிலையில், இனிவரும் எந்தவொரு பேச்சுக்களையும் சர்வதேச நடுவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகள் காரணமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் 1மில்லியனுக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பதை பதிவு செய்ய விரும்புவதாக பதிவு செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில் தாம் தாயகத்திற்கு திரும்புவதற்கான தமது உரிமையை வலியுறுத்த விரும்புவதாகவும் புலம்பெயர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே இலங்கையில் பல்லின மற்றும் பல மத சமூகங்களின் நீடித்த அமைதியையும் சகவாழ்வையும் கொண்டுவருவதற்கான எந்தவொரு

TAMIL Eelam news b281

 உலக தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் புதிய கட்டடம் - அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை உலக தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (25) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபொர்ட் பகுதியில் நூற்று எட்டு (108) ஏக்கர் நிலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்குபற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்வு ஏற்பாட்டு குழுவினர். உலகத் தமிழர் வரலாற்று மையமானது முழுமையாக பிரித்தானிய கம்பெனி சட்டம் 2006இற்கு அமைவாக இலாபநோக்கமற்ற அமைப்பாக 18. 06. 2015 பதிவு செய்யப்பட்டு பின்னர் தொண்டு நிறுவன சட்டங்களுக்கு அமைவாக ஒரு தொண்டு நிறுவனமாக பதியப்பட்டு பொறியியலாளர்கள், சட்டவாளர்கள், கணக்காளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் கொண்ட 11 அறங்காவலர்களுடன் செயற்பட்டு வருகின்றது. உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்திற்குள் மாவீரர் பணிமனை, தமிழர் பண்பாட்டு நடுவம், மக்கள் நலன் காப்பகம், தமிழர் விடுதலை நடுவம், அற்புத விநாயகர் ஆலயம், அற்புத அந்தோணியார் ஆலயம் மற்றும்

TAMIL Eelam news b280

 இலங்கையில் புதிதாக ஒரே நாளில் 4,427 பேருக்கு ஏற்பட்ட நிலை இலங்கையில் இன்று இதுவரை 4,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 398,782 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 346,767 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,750 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

TAMIL Ealam news b279

  மங்களவின் மரணமும்... ராஜபக்ஷர்களின் அதிர்ஷ்டமும்! இலங்கையின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருந்த, அரசியல் வாதியும், சிந்தனையாளருமான மங்கள சமரவீரவையும் corona கொரோனா காவுகொண்டது. ”குழந்தைகளே, உங்கள் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் வணங்குங்கள் என சிரேஸ்ர ஊடகவியலாளர் நடராஜா குருபரன் தனது முகநுால் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்.... ஆனால், அரசியல்வாதிகளை வணங்காதீர்கள். அவர்களை நீங்கள் வழிபட தேவையில்லை.” Children, Worship your parents and teachers. But, do not worship politicians. You do not need to worship them. கூறிய மங்கள சமரவீரவும் இல்லாதவர்களின் பட்டியலில் இணைந்துகொண்டார். மங்களசமரவீரவுடனான அனுபவப் பகிர்வுகளும், அவரது அரசியல் செயற்பாடுகளுமே இன்றைய ஊடகபரப்பை, சமூக வலைத்தளப் பதிவுகளை ஆக்கிரமித்துள்ளன. 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa) ஜனாதிபதியாக அரியாசனம் ஏறுவதற்கு காரணமாணவர்களில் முன்னாள் அமைச்சர் மங

TAMIL Eelam news b278

 தன்னைத் தானே எரியூற்றிக்கொண்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்து வந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே எரியூற்றியதில் மரணமடைந்துள்ளார். கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவருக்கு வயது 38.  ஒரு துப்புரவு தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த அவர் தனது மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கி வந்திருந்தார். திருகோணமலையைச் சேர்ந்த கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவரின் குடும்பம் இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளானதால் அவர் சிறு குழந்தையாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக அறியப்படுகிறது. இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரினார். இவர் தற்காலிகமாக இங்கே தங்குவதற்கு, Bridging Visa வழங்கப்பட்டிருந்தது என்றும், எட்டு ஆண்டுகளாக நிரந்தர பாதுகாப்பு தனக்குக் கிடைக்குமா என்ற ஏக்கத்துடனும் கேள்வியுடனும் வாழ்ந்த அவர், பல மன உழைச்சலுக்கு உள்ளாகியிருந்தார் என்றும் தெரியவருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை தன் உடல் ம