முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 521 மாவீரர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு:

 

மாவீரர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு: கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு

மாவீரர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு: கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு | Arrangements For Maaveerar Memorial
 By Erimalai 54 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

அனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு, அவ்வந்த இடங்களில் நினைவேந்தலிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

குறித்த குழுவினர்  வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கனகபுரம் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உப தலைவர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவிக்கையில்,

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தினுடைய மாவீரர் நாள் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை 27ம் நபள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

யாழில் மாவீரர் நினைவேந்தலை குழப்பும் முயற்சி: பொதுமக்களின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட நிறுவனம் (Photos)

யாழில் மாவீரர் நினைவேந்தலை குழப்பும் முயற்சி: பொதுமக்களின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட நிறுவனம் (Photos)

மாவீரர்களின் பெயர் பட்டியல்

கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் போது,மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்குள்ளே மிகுந்த மக்கள் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

சுடர்களை ஏற்றுவதில் மாவீரர் குடும்பங்கள் பங்குகொள்ள முடியாத அளவிற்கு மக்கள் திரழ் அதிகமாக இருந்திருக்கின்றது. அதனை ஒழுங்கு படுத்தும் முகமாக, 2009ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையில் மாவீரர் துயிலுமில்லங்களில் விளக்கேற்ற செய்ய வேண்டும் என்ற எமது பணிக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக இம்முறை துயிலுமில்ல வளாகம் 2007ம் ஆண்டு வரை மாவீரர்களாக இருந்த மாவீரர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டு “அ“ தொடக்கம் “ஈ“ வரையான வலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த கல்லறைகள் மற்றும் நினைவு கற்கள் என்பவற்றினுடைய பெயர் விபரங்கள் குறித்த வலையங்களில் பெயரிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.


ஆகவே பெற்றோர்கள், உரித்துடையவர்கள் 2 மணித்தியாளங்களாவது முன்பாக வருகை தந்து தங்களது பிள்ளைகளின் பெயர் எந்த வலையங்களிற்குள் உள்ளடங்கப்பட்டிருக்கின்றதோ, அந்த வலையங்களிற்குள் சென்று சுடரேற்றுவதற்கு தயாராகுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

2007, 2008, 2009ம் ஆண்டு வரையும் மாவீரர்களானவர்களது பெயர் விபரங்கள் இதுவரையும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அத்தைகைய விபரங்கள் தலைமைச் செயலகத்தினால் உத்தியோகபுர்வமாக வெளியிடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவையும் எதிர்வரும் காலங்களில் ஒழுங்குபடுத்தப்படும்.

இந்த வருடம் அப்படியாக மாவீர்ர்களிற்காக “உ”வலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வலையத்தில் பெயர் குறிப்பிடப்படாத மாவீர்ர்களிற்கான சுடர்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதி மற்றும் கொழும்பிலிருந்தும் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் (Video)

தமிழர் பகுதி மற்றும் கொழும்பிலிருந்தும் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் (Video)

துயிலுமில்லத்திற்கான பேருந்து சேவை

இது தவிர, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தவிர்ந்த ஏனைய துயிலுமில்லங்களிற்கு செல்ல முடியாதவர்கள் விளக்கேற்றுவதற்காக “ஊ“ வலையம் ஒழுங்கமைக்கப்பட்டள்ளது.

ஆகவே, இந்த வலையங்களின் அடிப்படையில், பெற்றோர்கள், உரித்துடையவர்கள் நேர காலத்தோடு வருகை தந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைப்புக்கு அமைவாக அஞசலி செலுத்த முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மாவீரர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு: கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு | Arrangements For Maaveerar Memorial

மேலும், துயிலுமில்லத்தின் பிரதான வீதியானது 3 மணியுடன் இடை மறிக்கப்பட்டு, மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாற்று வழியை பயன்படுத்த சாரதிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், அதேவேளை, துயிலுமில்ல வளாகத்திற்கு இரு பகுதியிலும் வானகனங்களை தரிப்பிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

மேலு்ம, துயிலுமில்ல வளாகத்தின் புனிதத்துவத்தை பேணும் வகையில் அனைவரும் கலாச்சார உடைகளை அணிந்து அந்த புனிதத்தை பாதுகாக்க ஒத்துழைக்க முன்வர வேண்டும் எனவும், அஞ்சலி செலுத்தப்படும் நேரத்தில் செல்பி எடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை தவிர்த்து அஞ்சலிக்கு ஒத்துழைக்கும் வகையில் இளைஞர்கள் முன்வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், டிப்புா சந்தியிலிருந்து துயிலுமில்லத்திற்கான குறுந்தூர சேவைகள், தனியார் பேருந்து சேவையினர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அதற்கு அமைவாக குறித்த சேவையினையும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், வெளி இடங்களில் இருந்து வருகை தரும் மக்கள் டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்காவில் இருந்து குறித்த பேருந்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?