யாழில் தூக்கிட்டுக் கொள்வேன் என பாசாங்கு செய்து பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ் - நெடுந்தீவுப் பகுதியில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது.
இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்று (17.11.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்துக்கொண்டிருந்த போது மனைவி அதனைக் கண்டு கேலி செய்துள்ளார்.
உயிரிழந்த நபர்
பின்னர் அந்தக் குடும்பஸ்த்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட வேளை வேப்ப மரக் கிளை முறிந்தமையால் தூக்கில் அகப்பட்டுளள்ளார்.
இதன்போது அவர் அதில் இருந்து தப்ப முடியாது தவித்த வேளை அவரைக் காக்கும் நோக்கில் மனைவி காலைப் பிடித்தவாறு அவலக் குரல் எழுப்பியபோதும் அருகில் எவருமே இல்லாத நிலையில் உடன் எவரும் அவ்விடத்துக்குச் செல்லவில்லை.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்