முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 514 தமிழீழ மக்களின் கவனத்திற்கு போலி நபர்களின் கதைகளை வைத்து ஏமார வேண்டாம்,

 

தமிழீழ மக்களின் கவனத்திற்கு போலி நபர்களின் கதைகளை வைத்து ஏமார வேண்டாம்,எனது முகநூலில் #துவாரகாவின்_வருகை என்கின்ற மாபெரும் துரோக செயற்பாட்டிற்கு #எதிரான #நடவடிக்கைகளின் அவசியம் மற்றும் மக்களிற்கு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டியதன் தேவை என்பன குறித்து எனது ஆதங்கத்தையும், கருத்தினையும் காலத்தின் தேவை கருதி பதிவிட்டிருந்தேன். 


இந்த முகநூல் பதிவுகள் #எழுந்தமானமாக அல்லது #பொதுப்படையான #தகவல்களின்_அடிப்படையில் அல்லது இறுதியுத்தத்தில் தலைவரும், அவரது குடும்பமும் தங்களை அர்ப்பணித்து விட்டனர் என்ற #முடிவின் #அடிப்படையிலான #அனுமானங்களில் எழுதப்பெற்றவை அல்ல! தேசியத் தலைவரின் மகள் அதாவது துவாரகா என்று தன்னை அடையாளப்படுத்தி அலைபேசி ஊடாக புலம்பெயர் தேசங்களிலுள்ள முன்னாள் போராளிகளை, குறிப்பாக தலைமையுடன் நெருங்கி பணியாற்றியவர்களை இலக்கு வைத்து, அவர்களுடன் கடந்த சூலை மாதம் நடுப்பகுதியிலிருந்து செப்தெம்பர் வரை, இரண்டு மாதங்களாக உரையாடி வந்தவர் யார் 
என்பதை #சந்தேகத்திற்கு_இடமின்றி கடந்த செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் #உறுதிப்படுத்தி, குறித்த நபருடன் 24.09.2023 அன்று இறுதியாக WhatsApp ஊடாக நான் நேரடியாக கதைத்து, அவரது துரோக செயலுக்கு எனது #கடுமையான_எதிர்ப்பையும், #கடுமையான_கண்டனத்தையும் வெளிப்படுத்தி, அவரின் தொடர்ச்சியான ஏமாற்று நடவடிக்கைக்கு #முற்றுப்புள்ளி வைத்ததன்.


 அடிப்படையிலுமே இந்த துரோகத்தை, சதிச் செயலை வெளிப்படுத்தி, உண்மையை உரைக்கின்றேன். இந்த உறுதிப்படுத்தல், வெளிப்படுத்தல் செயற்பாட்டில் புலம்பெயர் தேசங்களிலுள்ள சில முன்னாள் போராளிகளும், புலம்பெயர் தேசங்களிலுள்ள சில செயற்பாட்டாளர்களும் #இணைந்து_பெரும் #பங்காற்றியிருந்தனர். 


இவ் உறுதிப்படுத்தலில் இடம்பெற்ற, கிடைக்கப்பெற்ற, சேகரிக்கப்பெற்ற ஆதாரபூர்வமான தகவல்கள் இன்னமும் எம்மிடம் உள்ளன. அவை #தேவைப்பட்டால் #வெளிப்படுத்தப்படும். குறித்த பெண் இந்த ஏமாற்று நாடகத்திலிருந்து தற்போது #வெளியேற்றப்பட்டு அல்லது #வெளியேறி #விட்டதால், எவ்வாறாகவெல்லாம் (எவ்வழிகளில்) உறுதிப்படுத்தினோம் என்ற தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.


 அவர் தொடர்ந்து இச்சதிச் செயலில் ஈடுபடுவாராயின், அத்தனை உண்மைகளும் வெளிப்படுத்தப்படும் என்பதையும் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த நபர் ஒரு போலி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள, ஒரு எளிமையான எடுத்துக் காட்டொன்றை குறிப்பிடுகின்றேன்.


 அதாவது ... இந்த போலி நபர் அலைபேசியில் உரையாடிய முன்னாள் போராளிகள் பலருக்கு தேசியத் தலைவனின் புதல்வியான, "தங்கை துவாரகா"வை #நன்கு_தெரியும் என்பதுடன், சில போராளிகளுடன் இரண்டு மாத கால இடைவெளியில் 10 மணித்தியாலங்கள் வரை WhatsApp ஊடாக உரையாடியுள்ள போதிலும் எவருக்கும் தனது முகத்தை காட்டவோ அல்லது காணொளி அழைப்பில் (Video call) வரவோ மறுத்திருந்தார்.


 ஏனென்றால் அது பாதுகாப்பு இல்லையாம்! WhatsApp ஊடாக எல்லாவற்றையும் உரையாட முடிகின்றது, ஆனால் முகத்தை காட்டுவது மட்டும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்...?? இந்த விடயத்தை 24.09.2023 அன்றைய அவருடனான உரையாடலில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்குரிய காரணத்தை அவரால் கூறமுடியவில்லை.


 உண்மையான காரணம் என்னவென்றால் தான் போலி என்பதை (துவாரகா இல்லையென்பதை) போராளிகள் இனங்கண்டு விடுவார்கள் என்பதேயாகும். இது ஒரு சாதாரண, இரகசியத்தன்மை அற்ற ஒரு விடயம் என்பதால் உங்களது தெளிவிற்காக பொதுவெளியில் குறிப்பிடுகின்றேன். இதனைவிடவும் இவர் 💥 யார் என்பதற்கும் 💥 தங்கை துவாரகா அல்ல என்பதற்கும் எம்மிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன.


 இனியும் இந்த துரோகச் செயற்பாடுகள் தொடருமாயின், அந்த ஆதாரங்கள் மற்றும் அவர்களின் பின்னணி தொடர்பாக பொதுவெளியில் பேசவுள்ளோம் என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த போலி நபரின் செயற்பாட்டையும், அவரின் பின்னணியில் இருப்பவர்களின் செயற்பாடுகளையும் சிலர் இன்னமும் உண்மை என்று நம்பி #ஏமாந்து_வருவதால், சற்று கூடிய விளக்கத்துடன் இந்த பதிவை வெளியிடுகின்றேன். உங்கள் கருத்துக்களை, சந்தேகங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றியுடன் 


உன்மையுள்ள போராளி Soori Sinnathurai

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?