முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 530 தமிழீழப் பகுதியில் தொடரும் சிங்கள வெறியர்களின் கட்டகாசம்?

 

சித்தங்கேணி இளைஞன் மரணம்: குடும்பத்தினர் கண்ணீர் மல்க வெளியிட்ட தகவல்!

சித்தங்கேணி இளைஞன் மரணம்: குடும்பத்தினர் கண்ணீர் மல்க வெளியிட்ட தகவல்! | Chittakeni Youth Died Family Released Information
Sri Lanka PoliceJaffnaSri Lanka Police Investigation
 58 நிமிடங்கள் முன்
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

வட்டுகோட்டை பொலிஸாரின் சித்தரவதைக்குட்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் தொடர்பில் அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

வீட்டுக்கு அண்ணாவை அழைத்து வந்த போது, அண்ணா குடிக்க தண்ணீர் கேட்டார். செம்பிலை தண்ணீர் கொடுத்த போது, அதனை அவரை குடிக்க விடாது, பொலிஸார் செம்மை பறித்து தண்ணீரை வெளியே ஊற்றி விட்டார்கள் என உயிரிழந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனின் சகோதரனே அவ்வாறு தெரிவித்துள்ளார்.


உயிரிழந்த இளைஞனின் சகோதரர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 08-11-2023 ஆம் திகதி மாலை 4 மணியளவில் மர கடத்தல் வழக்கு ஒன்று தொடர்பிலான விசாரணைக்கு என அண்ணாவை முச்சக்கர வண்டியில் அழைத்து சென்றனர். அதன் போது, தாம் இளவாலை பொலிஸார் என்றே எமக்கு கூறி இருந்தனர்.

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு சினிமாவில் வாய்ப்பு: நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு சினிமாவில் வாய்ப்பு: நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

நான் இளவாலை பொலிஸ் நிலையம் சென்ற போது, தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என மறுத்து விட்டனர்.

பிறகு நான் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்று விசாரித்த போதும் தாமும் யாரையும் கைது செய்யவில்லை. இங்கே யாரையும் கூட்டி வரவில்லை என கூறினார்கள்.

சித்தங்கேணி இளைஞன் மரணம்: குடும்பத்தினர் கண்ணீர் மல்க வெளியிட்ட தகவல்! | Chittakeni Youth Died Family Released Information

இருப்பினும், நான் வீடு திரும்பாமல் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாகவே காத்திருந்தேன். இரவு 7 மணி போல இங்கே தான் அண்ணா இருக்கிறார் என்றார்கள். அதனால் தொடர்ந்து பொலிஸ் நிலையம் முன்பாக காத்திருந்தேன்.

இரவு 10 மணி போல அண்ணாவின் அவல குரல் கேட்டது. அண்ணாவிற்கு அடிக்கிறார்கள் என தெரிந்து உள்ளே போய் கேட்டேன். களவு வழக்கொன்றில் சந்தேகத்தில் கைது செய்திருக்கிறோம். விசாரணை முடிய நாளை விடிய விடுவிப்போம் என கூறினார்கள். எங்களை வீட்ட போக சொல்ல நாம் வீட்ட வந்து விட்டோம்.

இலங்கையில் மீண்டும் நீண்ட நேர மின்வெட்டா? மின்சார சபை வெளியிட்ட தகவல்!

இலங்கையில் மீண்டும் நீண்ட நேர மின்வெட்டா? மின்சார சபை வெளியிட்ட தகவல்!

இரவு 11 மணி போல அண்ணாவை பொலிஸார் வீட்டை அழைத்து வந்தனர். அப்போதே அண்ணாவிற்கு கை ஏலாது. நடக்கவும் சிரமப்பட்டார். ”குடிக்க தண்ணி தா” என கேட்டார்.

நான் செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது, பொலிஸார் அதனை பறித்து நிலத்தில் ஊற்றி விட்டார்கள். தண்ணீர் குடுக்க வேண்டாம் என எம்மை மிரட்டினார்கள்.

பின்னர் சுமார் ஒரு மணித்தியாலம் எமது வீட்டை சோதனையிட்டனர். பின் மீண்டும் அண்ணாவை அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்று விட்டனர்.

சித்தங்கேணி இளைஞன் மரணம்: குடும்பத்தினர் கண்ணீர் மல்க வெளியிட்ட தகவல்! | Chittakeni Youth Died Family Released Information

மறுநாள் 09-11-2023ஆம் திகதி நாம் பொலிஸ் நிலையம் சென்று கேட்ட போது, உரிய முறையில் பதில் சொல்லவில்லை. நாம் பொலிஸ் நிலையம் முன்பாக காத்திருந்த போது, நீண்ட நேரத்தின் பின்னர் எம்மை பொலிஸ் நிலையத்திற்குள் அழைத்து, அவரை விசாரணைக்காக வெளியே அழைத்து சென்றுள்ளார்கள்.

நீங்கள் போட்டு பிறகு வாங்க என எம்மை அனுப்பி வைத்தார்கள். அதற்கு அடுத்த நாள் 10ஆம் திகதி போன போதும் அண்ணாவை விடவில்லை. அதனால் நாம் 10ஆம் திகதி மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தோம். பிறகு 11ஆம் திகதி இரவு 07 மணி போல அண்ணாவை விடுகிறோம் என சொன்னார்கள்.

சாய்ந்தமருது வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்: மரணத்தில் எழுந்த சந்தேகம்!

சாய்ந்தமருது வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்: மரணத்தில் எழுந்த சந்தேகம்!

அப்ப நான் மாலை 4 மணியளவில் பொலிஸ் நிலையம் சென்றேன். அப்போது குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி என்னை அழைத்து ஏன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறையிட்டாய் என மிரட்டும் தொனியில் விசாரணை செய்தார்.

அண்ணாவை இனி விடுவிக்க முடியாது எனவும் கூறினார். பின்னர் என்னை வெளியே அனுப்பி விட்டு, சிறிது நேரம் கழித்து என்னை மீள உள்ளே அழைத்து, அண்ணாவோடு போன் ஒன்றை தந்து அண்ணா அழைப்பில் உள்ளார் கதை என்றார்.

சித்தங்கேணி இளைஞன் மரணம்: குடும்பத்தினர் கண்ணீர் மல்க வெளியிட்ட தகவல்! | Chittakeni Youth Died Family Released Information

போனில் கதைத்த போது , ”எப்ப என்னை விடுவார்கள் என கேள்” என அண்ணா சொன்ன போது போன் கட் ஆகிட்டு. அவர்கள் போனை பறித்தார்களா? அல்லது தானாக கட் ஆகிட்டா என தெரியவில்லை. பிறகும் நாம் தொடர்ந்தும் காத்திருந்த போது, இரவு 08 மணியளவில் அண்ணாவை கூட்டி வந்து காட்டினார்கள்.

அப்போது அண்ணாவின் கைகளில் காயங்களும், வீக்கங்களுக்கு இருந்தன. கையில் என்ன காயம் என கேட்ட போது, பின்னுக்கு கையை இழுத்து விலங்கு போட்டு இழுத்ததால் ஏற்பட்ட காயம் என சொன்னார். அதற்கு பிறகு 12ஆம் திகதி விடிய 11 மணி போல நீதிமன்றுக்கு அழைத்து செல்வோம் அப்ப வாங்க என எம்மை அனுப்பி வைத்தனர்.

நாம் மறுநாள் 12ஆம் திகதி காலை 10 மணிக்கே பொலிஸ் நிலையம் சென்று விட்டோம். காலை 11 மணிக்கு பிறகு அண்ணாவையும் மற்றயவரையும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றி நீதிமன்றுக்கு அழைத்து செல்வதாக சென்றனர். நாம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்தோம்.

வட்டுக்கோட்டையில் இருந்து சங்கானை வந்து, அங்கிருந்து சித்தங்கேணி வந்து, சித்தங்கேணியால் மல்லாகம் போய், மல்லாகத்தால் சுன்னாகம், மருதனார் மடம் எல்லாம் போய் மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் வைத்தியசாலைக்கு சென்று கொண்டனர்.

வைத்தியசாலையில் சுமார் ஒன்றரை மணித்தியாலம் வைத்திருந்த பின்னர் மீண்டும் அங்கிருந்து மருதனார் மடத்தில் உள்ள மல்லாகம் நீதவானின் இல்லத்திற்கு அழைத்து சென்றனர். நீதவான் இல்லத்திற்கு அருகில் எம்மை விடவில்லை.

அண்ணாவின் சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகி இருந்தவர். நீதவான் இருவரையும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சட்டத்தரணியின் விண்ணப்பத்தை அடுத்து, நீதவான் அண்ணாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு கட்டளையிட்டார்.

அதையடுத்து கடந்த 12ஆம் திகதி மாலை 06 மணியளவில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அண்ணாவை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்து உள்ளோம்.

அவரால் ஏலாது. நீங்கள் யாராவது அவருக்கு உதவியாக வந்து நில்லுங்கள் என கூறினார். அதனை அடுத்து, நான் வைத்தியசாலை சென்று அண்ணாவிற்கு உதவியாக நின்றேன் என்றார்.

அதேவேளை உயிரிழந்த இளைஞனின் பெரியம்மா தெரிவிக்கையில்,

வைத்தியசாலையில் இருந்தவனுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்த போது, அவன் பெரியம்மா சாப்பிட விருப்பமா தான் இருக்குது. சாப்பிட்டா சத்தி வருகுது என்றான். றோல் ஒன்றை கொடுத்தேன். அதனை சாப்பிட்டு சத்தி எடுத்தான்.

பிறகு கொண்டு போன ஆப்பிளில் இரண்டு துண்டை வெட்டி கொடுத்தான். அதை சாப்பிட்டான். நான் பார்க்கும் போது அவன் ஏலாது தான் இருந்தான். எப்படியாவது குணமாகி வந்துடுவான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவன் மீள வர முடியாத தூரத்திற்கு போய்விட்டார் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவிக்கையில்,

வைத்தியசாலையில் 28ஆம் இலக்க விடுதியில் தான் மகனை அனுமதித்து இருந்தார்கள். அவனை பார்த்தேன். கை கால்களை கூட அசைக்க முடியாத அளவுக்கு சுகவீனமாக இருந்தான். எழும்பி இருக்க கூட முடியாத அளவில் இருந்தான்.

நான் இரண்டு நாளாக அவனை தூக்கி இருந்தி பார்த்தேன். பின்னர் புதன்கிழமை அவன் குணமடைந்து விட்டான் என கூறி சிறைச்சாலைக்கு அழைத்து சென்று விட்டார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மகன் உயிரிழந்த விடயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. சிறைச்சாலையில் இருந்து கொண்டு வரும் போதே உயிரிழந்தார் என சொன்னார்கள்.

ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அவன் சிறைச்சாலையிலையே உயிரிழந்து விட்டான் என கூறினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?