முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 634 பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது

 

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது: கோவிந்தன் கருணாகரம் காட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது: கோவிந்தன் கருணாகரம் காட்டம் | Batticalo Press Meet Govindan Karunakaram
 By P.Sasikaran 5 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

எங்கள் மக்களது உணர்வுகளை இந்த அரசோ அல்லது அரசாங்கமோ மழுங்க அடிக்கலாம் என நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கடும் தொணியில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இன்றைய தினம் (18.12.2023) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

35 ரூபாவிற்கு முட்டைகள்: நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

35 ரூபாவிற்கு முட்டைகள்: நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட எங்களது உணர்வாளர்களை பார்ப்பதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று இருந்தேன்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் நகுலேஷன் மற்றும் முனைக்காட்டை சேர்ந்த பேக்கரியில் கேக் விற்பனை செய்தவர் இவ்வாறாக11 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கின்றார்கள்.


உண்மையில் நகுலேஷ் இறந்த மாவீரர்களது குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை கொடுத்து அவர்களை கௌரவிப்பதற்காக அவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

அதே போன்று மோசேஸ் என்கின்ற பையன் பேக்கரியில் ஒரு கேக் விற்பனை செய்வதற்காக கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

அதுபோல வாடகைக்கு வண்டி செலுத்துபவர் தரவை மாவீரர் உயிலும் இல்லத்திற்கு ஒலிபெருக்கி போன்ற பொருட்களை ஏற்றி சென்றதற்காகவும் அதைவிட இன்னும் ஒரு மோசமான நிகழ்வு கறுவாக்கேனியிலே இடம்பெற்றிருக்கின்றது. 

வடக்கு - கிழக்கு மழைவீழ்ச்சி தொடர்பில் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வெளியிட்ட தகவல்

வடக்கு - கிழக்கு மழைவீழ்ச்சி தொடர்பில் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வெளியிட்ட தகவல்


இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவர் பொலிஸ் நிலையம் சென்று மாவீரர் துயிலும் இல்ல நிகழ்வுக்காக பணம் கேட்டதாக முறைப்பாடு ஒன்றை வேண்டுமென்று செய்திருக்கின்றார்.

அவருக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டம் பாய்ந்து இருக்கின்றது. அந்த வகையில் இந்த முறை பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு உள்ளே கைது செய்தது ஒரு திட்டமிட்ட செயலாகத்தான் நான் பார்க்கின்றேன்.

ஏனென்றால் இந்த முறை 12 பேரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிணையில் வெளிவராத முறையில் கைது செய்து சிறையில் அடைத்தால் அடுத்தடுத்து வரும் தினங்களில் இந்த மாவீரர் நினைவு நாட்களை செய்வதற்கு மக்களை பயம்முறுத்தும் ஒரு செயலாக பொலிஸார் இந்த வேலைகளை செய்து இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது: கோவிந்தன் கருணாகரம் காட்டம் | Batticalo Press Meet Govindan Karunakaram

ஏனென்றால் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவரது படத்தையோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமான பதாகைகள் எதையுமே வைத்திருக்காமல் அவர்கள் தங்களுடைய உறவுகளை நினைவு கூர்வதற்காக சென்ற வேளையிலே அல்லது பங்கு பற்றிய வேளையிலே அவர்களை கைது செய்திருப்பது என்பது உண்மையிலேயே ஏற்க முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது.

இந்த நாட்டில் வடகிழக்கில் மாத்திரமல்ல முழு நாட்டிலுமே பிரச்சினைகள் உருவாகி இருக்கின்றது. தெற்கில் இரண்டு தடவை கிளர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது.

அதேபோன்று வடகிழக்கில் தங்களது உரிமைகளை பெறுவதற்காக மக்கள் போராடியிருக்கின்றார்கள் மரணித்திருக்கின்றார்கள்.

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது: கோவிந்தன் கருணாகரம் காட்டம் | Batticalo Press Meet Govindan Karunakaram

அந்த வகையில் எங்களது மக்களது உணர்வுகளை இந்த அரசோ அல்லது அரசாங்கமோ அல்லது பாதுகாப்புப் படையோ மழுங்க அடிக்கலாம் என நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம்.

இந்த வருடம் 10 பேரை கைது செய்திருக்கின்றீர்கள் அடுத்த வருடம் நீங்கள் விருப்பமென்றால் இதைவிட அதிகளவான கைதுகளை செய்யலாம். 

ஆனால் ஒன்று கைது செய்வதை மிகவும் அநியாயமான கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். எந்த வித வாழ்வாதாரமும் அற்ற வகையிலே அவர்களது குடும்பம் நிற்கதியாகியுள்ளது. 

அவர்களது உறவினர்கள் மரணித்திருக்கின்றார்கள் அவர்களை நினைவு கூர்ந்ததற்காக அவர்களை நிர்கதியாக்கி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை அடைத்து வைத்திருப்பது என்பது ஏற்க முடியாத விடயம்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி வடகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிற்பகல் 3 மணிக்கு சந்திக்க இருப்பதாக இன்று(18) மதியம் செய்தி அனுப்பியிருக்கின்றார். 

நிச்சயமாக 21ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஜனாதிபதியை சந்திப்போம். அவரிடம் நாங்கள் இந்த பிரச்சினையை மிகவும் ஆணித்தரமாக கூறுவோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது: கோவிந்தன் கருணாகரம் காட்டம் | Batticalo Press Meet Govindan Karunakaram

அவரது கூற்று மற்றும் உத்தரவுகள் பாதுகாப்பு படையினாலும் மற்றும் அரசு அதிகாரிகளினாலும் நிறைவேற்றப்படுவதாக கடந்த காலங்களிலே எமக்கு தெரியவில்லை. 

இருப்பினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் இந்த உறவுகள் சம்பந்தமாக 21ஆம் திகதி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவோம் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?