முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 808 குளிர்காலத்தில் பேரிச்சை பழம் சாப்பிடலாமா?

  குளிர்காலத்தில் பேரிச்சை பழம் சாப்பிடலாமா? சுவாச நோயுள்ளவர்கள் தெரிஞ்சிக்கோங்க  By DHUSHI  1 மணி நேரம் முன்             விளம்பரம் பொதுவாக இயற்கையாகவே அதிக இனிப்புச் சுவை கொண்ட பழங்களில் பேரிச்சம் பழமும் ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள். “சூப்பர் ஃபுட்ஸ்” என அழைக்கப்படும் பேரிச்சம் பழத்தை குளிர்காலத்தில் எல்லோரும் சாப்பிட வேண்டிய ஒன்று கூட சொல்லலாம். அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. பேரீட்சைபழத்தை சாப்பிடுவதால் அப்படி என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றது என்பதனை தெளிவாக தெரிந்து கொள்வோம். பேரீட்சைபழம் 2024 சனி பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசியும் இருக்கானு பாருங்க 1. குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்து கொள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்து கொள்வது அவசியம். இப்படியான நேரங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை பேரீட்சைபழம் அதிகரிக்க வைக்கின்றது. 2. பேரிச்சை பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்

e 807 மெக்சிகோவில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி

  மெக்சிகோவில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி  By K. S. Raj  6 மணி நேரம் முன்             Report விளம்பரம் வடக்கு மெக்சிகோவில் மர்மநபர்களால் விருந்து நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 26 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலானது வடக்கு மெக்சிகோவிலுள்ள சோனோரா மாகாணம் சியுடாட் ஒப்ரெகன் நகரில் இடம்பெற்றுள்ளது. மேலும், பலியானவர்களில் 18 வயதுக்குட்பட்ட இரண்டு பேரும், காயம் அடைந்தவர்களில் 5  குழந்தைகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது. கனடா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையாகும் கட்டுப்பாடு பொலிஸ் தேடுதல் இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் சிகிச்சை பெறுபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்போது துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை பொலிஸார் தேடி வருவதோடு, சோனோரா மாகாணத்தில் போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

e 806 காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் :24 மணி நேரத்தில் 200 பேர் பலி

  காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் :24 மணி நேரத்தில் 200 பேர் பலி  By K. S. Raj  1 மணி நேரம் முன்             Report விளம்பரம் காசா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தொடர் தாக்குதலில்  24 மணி நேரத்தில் 200 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகர் மீது கடுமையான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் காசாவுக்குள் நுழைந்து ஹமாஸ் சுரங்கப்பாதை வளாகத்தை அழித்துள்ளது. கனடா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையாகும் கட்டுப்பாடு வான்வழித் தாக்குதல்கள் மேலும், பல உடல்கள் சுற்றுப்புறங்களின் இடிபாடுகளில் புதைந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுவதோடு மத்திய காசாவில் உள்ள நுசிராட் முகாம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக மருத்துவர்கள் மற்றும் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். காசாவில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் வீடு ஒன்றின் அடித்தளத்தில் உள்ள சுரங்கப்பாதை வளாகத்தை அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளதோடு, அல்-குத்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்த பால

e 805 தந்தை பணம் கொடுக்காததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு;

  தந்தை பணம் கொடுக்காததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு; பறிபோன உயிர்  By Kirushanthi  27 நிமிடங்கள் முன்             விளம்பரம்   யாழ் - அச்சுவேலி பகுதியில் 20 வயதுடைய இளைஞர் தந்தை பணம் கொடுக்காததால் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் (29.12.2023) பதிவாகியுள்ளது. இராதாகிருஷ்ணன் சுதாந்தன் என்ற இளைஞனின் தந்தை அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில் குறித்த இளைஞன், தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயில்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். டிசம்பரில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தந்தை காசு கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்றைய தினம் (29.12.2023) குறித்த இளைஞன் வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். குறித்த இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் இன்றையதினம்  (30.12.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

e 804 விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை : பிரேமலதாவின் கோரிக்கை!

  விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை : பிரேமலதாவின் கோரிக்கை!  By Eunice Ruth  7 மணி நேரம் முன்             விளம்பரம் மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்குமாறு தமிழக அரசிடம் தேமுதிக பொதுச் செயலாளரும், அவரின் மனைவியுமான பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார். கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று அவரது குடும்பத்தினர் மரியாதை செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பேசிய பிரேமலதா, விஜயகாந்தின் நினைவிடத்தில் தினந்தோறும் பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். பொது மக்கள் அஞ்சலி அத்துடன், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் குறித்த இடத்தில் அஞ்சலி செலுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். காசாவில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா! விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின் பேது பாரிய ஒத்துழைப்பு வழங்கிய தமிழக அரசு, முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், நேரிலும், தொலைபேசி மூலமாகவும் இரங்கல்

e 803 அதிபர் தேர்தலில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர்: பின்னணியில்

அதிபர் தேர்தலில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர்: பின்னணியில் சர்வதேச வர்த்தகர் (இந்தியவின் விடியோ இணைப்பு)  By Dilakshan  39 நிமிடங்கள் முன்             விளம்பரம் எதிர்வரும் அதிபர் தேர்தலில் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன்  தமிழ் வேட்பாளரை  களமிறக்க சர்வதேச வர்த்தகர் சுபாஷ்கரன் அல்லிராஜா செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சர்வதேச வர்த்தகரும், லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளருமான சுபாஷ்கரன் அல்லிராஜா, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசியல் கட்சி ஒன்றின் உரிமையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிபர் தேர்தலுக்கு தயார் : தகவல் தெரிவித்துள்ள மொட்டு கட்சி உறுப்பினர்! கட்சி அவர் பொறுப்பேற்றுள்ள அரசியல் கட்சி "அருணலு மக்கள் கூட்டணி" என்ற பெருந்தோட்ட அரசியல் கட்சியாகும். அத்தோடு, குறித்த கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் வைத்தியர். ஏ.ஆர்.கிரிஷான் என்றும் கூறப்படுகிறது. புலம்பெயர் தமிழ் மக்கள் புலம்பெயர் தமிழ் மக்களுடன் நெருக்கமாக அரசியல் செய்துவரும் சுபாஷ்கரன் அல்லிராஜா எதிர்வரும் அதிபர் தேர்தலில் வடக்கு மற்