முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 174

யாழ் நினைவு தூபி விடையம் பல வெளிநாட்டு தூதுவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது எப்படி ?




யாழ் பல்கலைக் கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிப்பு விடையம், கொழும்புல் உள்ள பல வெளிநாட்டு தூதுவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கை தீவே கொரோனா கொடூரத்தில் ஆட்டம் கண்டுள்ள நிலையில். போதாக் குறைக்கு மழை வெள்ளம் என்று அல்லாடி வரும் நிலையில். ஏன் முள்ளிவாய்க்கால் தூபியை இடிக்க வேண்டும் என்பது,  முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்க தூதரகம், இந்திய (யாழ்) தூதரகம், இங்கிலாந்து என்று பல தூதரகங்கள் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோட்டபாயவின் செல்வாக்கு தென்னிலங்கையில் வெகுவாக சரிந்து வருகிறது. பால் தொடக்கம் பாணின் விலை சொல்ல முடியாத அளவு அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கான எந்த ஒரு சரியான நடவடிக்கையையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. சிங்களவர்கள் பெரும் அதிருப்த்தியில் உள்ளார்கள். ஏன் கோட்டாவுக்கு வாக்கு போட்டோம் என்ற நிலையில் அவர்கள் இருக்கும் போது. எதில் கை வைத்தால் தமிழர்கள் பொங்கி எழுவார்களோ. அதிலும் குறிப்பாக மாணவர்கள் பொங்கி எழுவார்களோ அதில் கோட்டா கை வைத்தார்.


அது தான் நினைவுத் தூபி. தமிழர் பகுதியில் வெடிக்கும் போராட்டங்களை சிங்கள பகுதிக்கு போட்டு காட்டி புலிகள் மீண்டு விட்டதாக பூச்சாண்டி காட்டி. குறைந்த தனது செல்வாக்கை அதிகரிக்க போட்ட திட்டம் இந்த நினைவு தூபி இடிப்பு.  ஆனால் முஸ்லீம்களாலும் சில நல்ல உள்ளம் கொண்ட சிங்களவர்களாலும் தவிடு பொடியாகிவிட்டது இந்த திட்டம். அது என்னவென்றால் இறந்த மக்களுக்காக கட்டப்பட்ட சின்னத்தை ஏன் அழிக்க வேண்டும் என்று, இம் முறை சிங்களவர்களே கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். ஒருவரின் கல்லறையை உடைத்தால்,  உறவுகள் பார்த்துக் கொண்டு இருப்பார்களா ?


அவர்களுக்கு கோபம் வரும் தானே என்று சிங்களவர்களே கூற. நடந்த கடை அடைப்புக்கு முஸ்லீம் சகோதரர்கள் ஒட்டு மொத்த ஆதரவை தர. ஆடி விட்டார் கோட்டபாய. அவர் இதனை சற்றும் எதிர்பார்கவில்லை.


ஆனால் உலகத் தமிழர்கள் இதனை நன்றாக அறுவடை செய்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். எப்படி லக்ஷ்மன் கதிர்காமரை வைத்து புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்கிறார்கள். புலிகள் தற்கொலை படையை பாவிக்கிறார்கள் என்று கூறி. மேற்குலக நாடுகளிடம் இருந்து புலிகளை அன்னியப் படுத்தியது சிங்களமோ. இன்று அதே பாணியை கையில் எடுத்து,  இறந்த மக்களின் கல்லறைகளை சிங்களம் உடைக்கிறது என்று கூறிய உலகத் தமிழர்களின் குரல், பல நாட்டு அரசாங்கத்தின் காதுகளில் விழுந்துள்ளது.


அமெரிக்கா கொழும்பில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவரை வைத்து முறையாக இச்சம்பவம் தொடர்பாக கேட்டு அறிந்து அறிக்கை தயாரித்துள்ளது. அது போல இந்தியா பிரித்தானிய தூதுவர்களும் இச் சம்பவம் தொடர்பாக தமது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள் என்ற செய்திகள் வெளிநாட்டு அமைச்சு ஊடாக கசிந்துள்ளது. எனவே தற்போது கோட்டபாயவின் சாயம் மெல்ல மெல்ல வெளுக்க ஆரம்பித்து விட்டது. இவர் பருப்பு இனி வேகாது என்பதே உண்மை.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?