முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMAI Eelam news 199

 “விடுதலை போராளி என்ற தளத்தில் இருந்து உருவான ஒழுக்க சீலன்!”

விடுதலை போராளி என்ற தளத்தில் இருந்து ஒரு இனத்திற்காக ஒரு தலைவன் உருவாகின்றபோது அந்த தலைவனை எந்த வல்லாதிக்க சக்திகளாலும் நேர் வழியில் வீழ்த்த முடியாமல் போகின்றமைக்கு காரணம் அந்த தலைவனின் ஒழுக்கம். அவ்வாறு ஒழுக்கமிக்க தலைவன் இந்த உலகில் உண்டென்றால் அது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களாக மட்டுமாகத்தான் இருக்க முடியும்.


அன்று நடந்த ஒரு சுவார்சிய நிகழ்வு பற்றி போர்போம். அன்றைய சமாதன கலகட்டத்தில் (எந்த வருடம் என்பது எனக்கு நினைவில் இல்லை) சர்வதேச ஊடகத்துறையான அல்ஜீரா ஊடகத்தில் இருந்து முதன் முறையாக ஒரு ஊடகவியலாளர் தலைவர் பிரபாகரன் அவர்களை பேட்டி எடுப்பதற்காக கிளிநொச்சி வந்திருந்தார்.


கிளிநொச்சி வந்திருந்த அந்த ஊடகவியலாளர் மனதில் ஆயுத குழுவின் தலைவன் என்றால் வாயில் புகையிலையுடனும் ஆணவ திமிருடனும் தான் வருவார் அவர் சொல்வதுதான் சரி என்றும் கூறுவார் பேட்டி எடுப்பதற்கு தயாரானார்.


இதற்கிடையில் ஊடகவியளாலருக்கும் ஒளிப்பட பதிவாளருக்கும் அவர்களின் கலாச்சார முறையிலையே உணவு பரிமாறப்பட்டது இது அவர்களை ஆச்சரியப்பட வைத்தது. இந்நிலையில்


வாகனத்தில் இருந்து தலைவர் பிரபாகரன் இறங்கியதை கண்ட அந்த ஊடகவியலாளருக்கு மேலும் ஆச்சரியம் அந்த ஊடகவியலாளர் நினைத்ததற்கு எதிர்மறையாக தலைவர் இருந்தார். குறித்த ஊடகவியளாலரை நோக்கி வந்த தலைவர் இரண்டு பேரும் சாப்பிட்டிங்களா? என்று கேட்டதும் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமடைந்தனர். ஆம் உணவு அருந்திவிட்டோம் என பதிலத்தனர் இருவரும் (அந்த இரு ஊடகரும் இரகசியமாக பேசிக்கொண்டனர் நாம் பல ஆயுதக்குழு தலைவர்களை சந்தித்திருக்கின்றோம் ஆனால் இவர் முற்றிலும் மாறாகவும் சிறந்த மனிதராகவும் இருக்கின்றார் என்று.)


பேட்டி எடுக்க தயாரானார் அந்த ஊடகவியளாலர்.

பல கேள்விகளை தலைவரிடம் அந்த ஊடக வியளாலர் கேட்க தலைவரும் புன் சிரிப்புடன் பதிலளிக்க தொடங்கினார்.


இறுதியா தலைவரிடம் அந்த ஊடகவியளாலர் இரண்டு கேள்விகளை கேட்டார்.

மூன்று எந்த விடுதலை இயக்கத்தையோ ஆயுத குழுக்களையோ வழி காட்டுதலாக கொண்டு போராடுகிறீர்கள்? இவ்வளவு ஒழுக்கத்துடன் உங்கள் இயக்கம் இருக்க காரணம் என்ன?


அதற்கு தலைவர் கொஞ்சமும் யோசிக்காது நான் எந்த போராட்ட இயக்கங்களையும் முன்னோடியாக கொண்டு போராடவில்லை மாறாக உலக போராட்ட வரலாறுகளையும் படித்து வருகின்றேன் மேலும் எனது போராட்ட முன்னோடிகளாக எமது மக்களையே பார்க்கின்றேன் எமது மக்களுக்கு எது தேவை என்பதை அவர்களிடத்தில் இருந்தே எடுத்து கொள்கின்றேன்.விடுதலைக்காக போராடும் வீரனின் வெற்றி அந்த மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து செயற்படுவதே. இப்பொழுது எமது மக்களுக்கு தேவை சுகந்திரமான எமது தேசம் விடுதலை பெற வேண்டும் அதற்காக போராடுகின் ஒரு போராளி நான். நான் ஒழுக்கமாக இருக்கும் பட்சத்தில் எமது இயக்கம் ஒழுக்கமாக கண்ணியமாக இயங்கும் எமது இயக்கம் ஒழுக்க சீலர்களாக விளங்கும் பட்சத்தில் எமது தேசம் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒழுக்கமும் கண்ணியமும் இருக்குமாயின் அந்த மக்கள் விடுதலை பெறுவதை யாராலும் தவிர்க்க முடியாது.


இரண்டாவது கேள்வியாக

நீங்கள் எப்போது விடுதலை பெறுவீர்கள்? என ஊடகவியளாலர் கேட்டார். நாம் போராளிகள் எமது இலக்கு தெரியும் ஆனால் அந்த இலக்கை அடைய நிறைய தடைகள் உள்ளது அந்த தடைகளை தகர்த்துதான் அந்த இலக்கை அடையவேண்டும் அதற்கு பல பெறுமதிகளும் கொடுக்க வேண்டும் அதில் காலமும் ஒன்று எனவே எமது இலக்கை அடைவது உறுதி ஆனால் எப்போது என்று என்னால் கூற முடியாது என்றார் தலைவர்.


அடுத்த கேள்வியாக உங்கள் சீருடை வித்தியாசமா இருக்கிறதே ஏன் என்றார் அந்த ஊடகர்?


அதற்கு தலைவர் நான் முன்னர் கூறுயது போன்றுதான் போராடுகின்ற இருக்கின்ற இனம் விடுதலை அடைய வேண்டுமாயின் அவர்களின் கலாச்சார விழுமியங்களை கொண்டு போராட வேண்டும் எனவே எமது சீருடையும் எமது தேசிய அடையாளத்தில் இருந்து பெறப்பட்டதுதான். இது உலக வரலாறுகளில் பதிவு செய்யும்போது விளங்கிக் கொள்வீர்கள் என தெரிவித்தார்.


இந்த பேட்டியின் பின்னர் ஆச்சரியத்துடன் தலைவரை பார்த்து எந்த மக்களுக்குமே கிடைக்காத ஒரு போராளியை இந்த இனம் பெற்று இருக்கின்றது இந்த இனத்தில் நான் பிறக்க வில்லையென வேதனையடைகின்றேன் அதேவேளை உங்களை பேட்டி எடுத்ததற்காக வாழ்நாள் சாதனையாக கொள்கின்றேன் என்றார் அந்த ஊடகவியளாலர்.


இந்த சம்பவத்தை குறித்த ஊடகவியளாலர் நினைவு கூறியதோடு அல்ஜீரா ஊடகம் பின் நாட்களில் ஆவண பிரதியாக வெளியிட்டு இருந்தது அத்தோடு விடுதலைப்புலிகளின் போர்களை உலக அரங்கில் செய்திகளாக கொண்டுபோய் சேர்தமையும் இங்கு சுட்டிக்காட்ட தக்கது.


வரும் காலங்களில் உலக ஏடுகளில் ஒழுக்கத்தின் குறியீடாக ஒரு வீரனின் பெயர் பதிவு செய்யப்படும் அது பிரபாகரனியமாக உலகெங்கும் வியாபிக்கும்!…



ஈழம் புகழ் மாறன்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?