முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 457 இந்தியாவின் ரோவை கடுமையாகக் கண்டிக்கும் தமிழர்கள் .

ராஜபக்ச அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக மீண்டும் விடுதலைப்புலிகளை உருவாகின்றார்கள் : தர்மலிங்கம் சுரேஸ் (Photos)
ராஜபக்ச அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவுக்கு உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காகவும் மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாகின்றார்கள் என்ற நிலையினை ஏற்படுத்த முனைவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு வாரத்தின் ஐந்தாவது நாள் இன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ. நாவின் பொறுப்புக்கூறல் என்ற விடயத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக புலிக்காய்ச்சல் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். ராஜபக்ச அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக மீண்டும் விடுதலைப்புலிகளை உருவாகின்றார்கள் : தர்மலிங்கம் சுரேஸ் (Photos) மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் 17தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட நினைவுத்தூபி அருகே இன்று முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது நினைவுத்தூபியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட பொதுமக்கள் ஈகச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்
கு.குணசேகரன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?