முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 978

 உண்மைகளை மூடி மறைத்த சீனா!! களமிறங்கியது அமெரிக்கா



சீனாவின் குவாங்டாங் பகுதியில் உள்ள அணு உலையில் கசிவு ஏற்பட்டதாக குறித்த அணு உலையை நிர்வகிக்கும் பிரான்ஸ் நிறுவனம் அமெரிக்காவிடம் புகார் தெரிவித்துள்ளது.


இதனால் இது தொடர்பான ஆலோசனையில் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.


சீனாவின் இந்த அணு உலையை சீன அரசும் ஃபிரேமாடோம் என்று பிரான்ஸ் தனியார் நிறுவனமும் சேர்ந்து நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில், இங்கு கசிவு ஏற்பட்டுள்ளதாக ஃபிரேமாடோம் நிறுவனம் தெரிவித்துள்ளது.


கதிரியக்க அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பிரான்ஸ் நிறுவனம் அமெரிக்காவிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளது. இந்த அணு மின் நிலையத்தில் இருந்து அணுக்கதிர் வீச்சு அதிகரிப்பதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.


இந்த விஷயம் வெளியே தெரியக் கூடாது என்பதால், அணுக்கதிர் வீச்சு தாங்கு திறன் அளவை சீனா அதிகரித்துள்ளதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. அதாவது மக்களால் தாங்க கூடிய அணுக்கதிர் வீச்சின் அளவை சீனா உயர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.


இந்த அணுமின் நிலையத்தில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளதால், இந்த அணு மின் நிலையத்தை மூட வேண்டிய நிலை வரலாம். அந்த நிலை வரக் கூடாது என்பதால், மக்களின் அணுக் கதிர் வீச்சு தாங்கு திறனை அளவை சீனா உயர்த்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கசிவு குறித்து புகார் எழக்கூடாது என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலையத்திற்கு வெளியே அணுக்கதிர் வீச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக அந்த பிரான்ஸ் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.


இந்த நிலையில் தான் அமெரிக்காவின் உதவியை பிரான்ஸ் நிறுவனம் நாடியுள்ளது. அணு கசிகிறது, உதவி செய்யுங்கள் என்று தொழில்நுட்ப ரீதியாக பிரான்ஸ் உதவி கோரியுள்ளது.


இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தி அவசர கலந்துரையாடல் நடத்தப்பட்டிருக்கிறது.


சீனாவின் இந்த அணுமின் நிலையம் குறித்து அமெரிக்க அரசு இன்னும் எச்சரிக்கை எதனையும் வெளிப்படையாக விடவில்லை. முறைப்படி அமெரிக்கா இதில் சீனாவிற்கு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா தொடர்ந்து இதில் ஆலோசனை மட்டுமே நடத்தி வருகிறது. எந்த எச்சரிக்கையும், அறிவிப்பும் வெளியாகவில்லை.


அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த அணு உலை குறித்து அடுத்தடுத்து பல கலந்துரையாடல்களை நடத்தியது பெரிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.


இதுவரை இந்த அணு உலை குறித்து சீனா எதுவும் வாய் திறக்கவில்லை. கசிவு குறித்து பிரான்ஸ் நிறுவனம் அமெரிக்காவை உதவிக்கு அழைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் சீனா எந்த விஷயத்தையும் பேசாமல் அமைதியாக இருக்கிறது.


அணுக்கசிவு குறித்து அப்படியே மூடி மறைக்க சீனா முயற்சி செய்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


அதேபோல் ஃபிரேமாடோம் என்ற பிரான்ஸ் தனியார் நிறுவனமும் ஏன் சம்பந்தமே இல்லாமல் சீனாவை விட்டுவிட்டு அமெரிக்காவை நாடுகிறது. ஏன் அமெரிக்காவின் உதவியை கேட்கிறது என்றும் கேள்வி எழுந்துள்ளது.


ஒருவேளை சீனாவால் உதவக் கூடிய அளவை விட நிலைமை மோசமாகிவிட்டதால் அமெரிக்காவின் உதவியை பிரான்ஸ் நாடி உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


ரஷ்யாவில் 1986இல் செர்னோபில்லில் இதேபோல் அணு உலை விபத்து ஏற்பட்டது. அப்போதும் ரஷ்யா இதேபோல் வெளியே எதுவும் சொல்லாமல் அமைதி காத்தது. அணு கசியவில்லை, கசியவில்லை என்றது.


ஆனால், செர்னோபில் அணு உலை வெடிப்புக் காரணமாக மொத்தமாக அந்தப் பகுதியே வாழ தகுதியற்றதானது. தற்போது சீனாவில் ஏற்பட்டு இருக்கும் அணுக் கசிவு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?