முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b28

 தவறுகளைத் திருத்தி முன்னோக்கி பயணிப்போம் -கோட்டாபய சூளுரை

கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு முன்நோக்கிப் பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.


நாட்டு மக்களுக்கு இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கை மக்கள் அன்று மதரீதியிலான அடிப்படைவாத அச்சத்தில் உறைந்திருந்தனர். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ஸ்ரீலங்காவின் பாதுகாப்புக் கட்டமைப்பு வீழ்ச்சிகண்டதனை மக்கள் அவதானித்தார்கள். கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிழையான தீர்மானங்கள் காரணமாக எமது புலனாய்வுப்பிரிவு பலவீனமடைந்ததோடு, பாதுகாப்புப் பிரிவு சர்வதேசத்திற்கு முன்பாக அகௌரவப்பட்டது.


எமது புராதன இடங்கள், தொல்பொருள் பகுதிகள் பகிரங்கமாக அழிக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு நாங்கள் முடிவுறுத்திய ஆயுதப் போராட்டம் மிகவும் பயங்கரமான தோற்றத்தில் மீண்டும்உருவாகியது. தேசிய பாதுகாப்பு குறித்து தற்போதுவரை பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றோம்.


பொறுப்புடைய பதவிகளுக்கு தகுதியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு துன்புறுத்தல்களினால் வீழ்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவின் மனநிலையை மீண்டும் நாங்கள் உறுதிப்படுத்தினோம். அன்று பலவீனமடைந்த புலனாய்வுப் பிரிவை மீண்டும் மறுசீரமைத்துள்ளோம்


. கடந்த ஆட்சிக்காலத்தில் மறக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். பாதாள உலகை கட்டுப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் கடத்தல், பாவனையையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளோம். எமது கலாசாரம் உட்பட அனைத்தையும் அவமானப்படுத்தும் யுகத்தை நிறுத்தினோம்.


அனைவரினதும் அடையாளங்களைப் பாதுகாத்து, மற்றவர்களுக்கு இடையூறு அற்ற சமாதானமான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். கடந்த காலத்தில் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அம்பாறை பொத்துவில் கடலோர விகாரை, தீகவாவி போன்ற கலாசார மத உரிமைகளை நாங்கள் பாதுகாத்துள்ளோம்.


இன்று எமது நாட்டு மக்கள் இனியும் ஒற்றையாட்சி குறித்து அச்சமடையத் தேவையில்லை. எமது நாட்டு உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு எமது அரசாங்கம் எந்த வகையிலும் இடமளிக்காது. தேசிய பாதுகாப்பை எனது அரசாங்கம் உறுதிசெய்துள்ளது” கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய தருணத்தில் செலுத்த முடியாமற் போகும் என்று எதிர்க்கட்சியினர் வெளியிட்ட ஆருடங்களை தகர்த்தெறிந்து ஸ்ரீலங்காவினால் கடன்களை சரியான நேரத்தில் செலுத்த முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


பல்வேறு சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு இடங்கொடுக்கப்படவில்லை. தனிப்பட்ட ரீதியில் சில விம்பங்களை பெரிதுபடுத்திய போதிலும் அரசாங்கத்தின் உண்மையான பக்கங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவது தடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அதனால் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது பொய்யான விம்பமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.


தனது ஆட்சியில் எந்த அரசியல் நியமனங்களும் மேற்கொள்ளவில்லை என்றும் நீதித்துறையிலும் அதேபோன்ற கொள்கையையே பின்பற்றியதாகவும் குறிப்பிட்ட அரச தலைவர் கோட்டாபய, கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு முன்நகர்ந்து பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கம் இன்று பலவீனமடைந்திருப்பதாகவும், தோல்வியடைவதாகவும் விமர்சனம் வெளியிடுபவர்கள், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தனிப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்ததோடு, அவை இன்று நிறைவேற்றப்படாத காரணத்தினாலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?