முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 962 பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ்

பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன சோதனையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆபிரிக்க வம்சாவளி சிறுவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அது வன்முறையாக வெடிக்க, தொடர்ந்து இரண்டாவது நாளாக பாரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமைதியை நிலைநாட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆபிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ் | Riots Broke Out In France Burning About Paris ஆபிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள அதிபர் இமானுவேல் மக்ரோன், "இது மன்னிக்கமுடியாத குற்றம். சட்டம் தனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டதால் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரிஸ் நகரின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை இரவு சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காரை காவல்துறையினர் நிறுத்த உத்தரவிட்டும் அது நிறுத்தப்படாததால் காவல்துறையினர் அதனை விரட்டி சுற்றி வளைத்துள்ளனர்.
பாரிஸ் மக்களை கொதிப்படையச் செய்த சம்பவம் பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ் | Riots Broke Out In France Burning About Paris பின்னர் காரில் இருந்த ஆபிரிக்க சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அச்சிறுவன் உயிரிழந்தார். இது பாரிஸ் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. பாரிஸ் இன ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. இங்கே பல்வேறு இனத்தவர், கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் கருப்பின இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது. கார்கள், காவல்துறை வாகனங்கள் தீக்கிரை பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ் | Riots Broke Out In France Burning About Paris வடக்கு நகரான லில்லி, டோலூஸ், தென்மேற்கு நகரங்களான அமியன்ஸ், டிஜோன், எஸ்ஸோன் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். குப்பைத் தொட்டிகளுக்குத் தீவைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். எஸ்ஸோன் பகுதியில் பேருந்து ஒன்றை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அதற்கு தீ வைத்தனர். இன்னும் சில பகுதிகளில் கார்கள், காவல்துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தெளிவான சட்டவிதிமீறல் பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ் | Riots Broke Out In France Burning About Paris
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட காவலரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் தரப்பு வழக்கறிஞர், "நடந்த சம்பவம் சிசிடிவி கமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது பதிவாகியுள்ளது. இது தெளிவான சட்ட மீறல்" என்று கூறியுள்ளார் . முன்னதாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பிரதமர் எலிசபெத் போர்ன் கூறுகையில், "இது தெளிவான சட்டவிதிமீறல்" என்றார். தாயாரின் வேண்டுகோள் பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ் | Riots Broke Out In France Burning About Paris இதற்கிடையில் சிறுவனின் தாய் டிக்டொக் சமூக வலைத்தளம் மூலமாக பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் ஏற்பாடு செய்துள்ள நினைவஞ்சலிப் பேரணியில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?