முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 896 தொடர்ந்து கோமாளியாகும் தமிழ் தலைவர்கள்,

தமிழரின் இனப்பிரச்சினை தீர்வு -வரும் ஆனா வராது
தென்னிந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சென்னைக்கு செல்லவேண்டும் வண்டி வருமா என என்னத்தை கண்ணையா என்பவரிடம் கேட்பார். அவரும் வண்டி வரும் ஆனா வராது என பதிலளிப்பார். இந்த நகைச்சுவை இன்று வரை பிரபலமாக உள்ளது.இந்த நகைச்சுவை எமது தமிழ் மக்களுக்கும் சாலப்பொருந்தும். முப்பது வருட இரத்தம் சிந்திய ஆயுதப்போராட்டம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவிற்கு வந்த நிலையில் இன்று வரை புரையோடிப்போயுள்ள தமிழருக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. மைத்திரி -ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கு தமிழரின் இனப்பிரச்சினை தீர்வு -வரும் ஆனா வராது | It Comes But It Doesnt Come கடந்த மைத்திரி -ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கு ஐந்து வருடமாக முண்டு கொடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. அந்த காலகட்டத்தில் தமிழ் மக்களை சிங்களத் தலைமைகள் தான் ஏமாற்றும் காலம் போய் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் ஏமாற்றினார். அதாவது பொங்கலுக்கு தீர்வு,தீபாவளிக்கு தீர்வு என வானவேடிக்கையை கொளுத்திப் போட்டார். இறுதியில் நல்லாட்சி தனது காலத்தை செவ்வனே நிறைவு செய்து அடுத்த தேர்தலை எதிர்கொண்டது நாடு. ஆனால் வெறுங்கையுடன் நின்றனர் தமிழ் மக்கள். அடுத்த தலைவராக கோட்டாபய தமிழரின் இனப்பிரச்சினை தீர்வு -வரும் ஆனா வராது | It Comes But It Doesnt Come அடுத்த தலைவராக கோட்டாபய வந்தார்.இவர் ஜே.ஆரின் பாணியில் போர் என்றால் போர் என்ற சாரப்பட தனது ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வெறுத்துப்போன சிங்கள மக்கள் பொங்கியெழுந்து அவரை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றினர். அப்போதும் தமிழ் மக்கள் வெறும் கையுடன் தான் நின்றார்கள். தற்போது அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் வென்றவர் போல அதிபர் ஆகினார் ரணில். அவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்றார்.சுதந்திர தினமும் முடிந்து அடுத்த வருட சுதந்திர தினமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அதிபர் தேர்தலை நடத்தி அடுத்தமுறை மீண்டும் அந்த ஆட்சிக்கதிரையில் அமரும் முனைப்பில் நிற்கிறார் ரணில். இப்போதும் தமிழ் மக்கள் வெறும் கையுடன் தான் நிற்கிறார்கள். காலாதிகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி பிழைப்பதுதான் சிங்கள ஆட்சியாளர்களின் நரித்தந்திர மூளை.இதனை தம்மை சட்டமேதைகளாக காட்டிக்கொண்டு அரசியலில் ஈடுபடும் தமிழ் தலைவர்கள் விளங்கி கொள்ளாததுதான் பெரும் கவலை. ரணிலின் ஆட்சியில் தமிழர் பகுதியில் நில அபகரிப்புகள் தமிழரின் இனப்பிரச்சினை தீர்வு -வரும் ஆனா வராது | It Comes But It Doesnt Come என்றுமில்லாதவாறு தற்போதுதான் ரணிலின் ஆட்சியில் தமிழர் பகுதியில் நில அபகரிப்புகள் மிகவும் வேகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழர் தாயகம் என்பதே இருக்கக்கூடாது என்பதை அவர் மிகவும் கச்சிதமாக செயற்படுத்தி வருகின்றார். இது தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்கு போட்டும் என்ன பயன்? இதற்கு சிறந்த உதாரணம் குருந்தூர் மலை விவகாரம்.நீதிமன்ற தடையையும் மீறி அங்கு வேகமாக கட்டி எழுப்பப்படுகிறது விகாரை. எனவே தமிழருக்கான தீர்வு விடயத்தில் வாயால் அறிக்கைகளை விடுவதை விடுத்து உருப்படியான செயலில் களமிறங்குமா தமிழ் தலைமைகள்? நாடாளுமன்றில் ஆவேசமாக பேசுவது மட்டும் தமிழருக்கான தீர்வை கொண்டு வராது என்பது சாதாரண சாமானியனுக்கு விளங்கும் நிலையில் படித்த சட்ட மேதைகளுக்கு விளங்காதது ஏன் என்று புரியவில்லை. இதைத்தான் அறப்படிச்ச பல்லி கூழ் பானைக்குள் விழுவது என்பதோ?

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?