முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 923 இந்த விசாவிற்கு அனைத்து நாட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்

Temporary Skill Shortage (subclass 482) விசா
வெளிநாட்டிலிருந்து வந்த முதியோர் பராமரிப்பு பணியாளர்களுக்கு துரிதகதியில் நிரந்தர விசா ஆஸ்திரேலிய அரசின் முதலாவது ' Aged Care Labour ஒப்பந்தத்தின்' கீழ், செவிலியர் ஆதரவு பணியாளர்கள், தனிப்பட்ட பராமரிப்பு உதவியாளர்கள், முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு பணியாளர்களுக்கான விசா சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர் ஆங்கிலப் புலமை மற்றும் post-qualification பணி அனுபவம் ஆகிய நிபந்தனைகள் நீக்கப்படும் அதேநேரம் பராமரிப்புப் பணியாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும். visa.jpg கடந்த மாதம் ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்திய புதிய Aged Care Labour ஒப்பந்தத்தின்கீழ், முதியோர் பராமரிப்பு துறையில் பணிபுரிய, வெளிநாட்டிலிருந்து தகுதியான பராமரிப்பு பணியாளர்களை வரவழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, வெளிநாடுகளிலுள்ள செவிலியர் ஆதரவு பணியாளர், தனிப்பட்ட பராமரிப்பு உதவியாளர் மற்றும் முதியோர் பராமரிப்பாளர் அல்லது ஊனமுற்றோர் பராமரிப்பாளர் போன்ற பராமரிப்புப் பணியாளர்களை, முதியோர் பராமரிப்பு சேவை வழங்குநர்கள், Temporary Skill Shortage (subclass 482) விசாவின் கீழ் வரவழைக்க முடியும். இவ்வாறு வரவழைக்கப்படும் வெளிநாட்டுப் பணியாளர்கள் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு, Employer Nomination Scheme (subclass 186) விசா திட்டத்தின் கீழ் முதியோர் பராமரிப்பு சேவை வழங்குநர்கள் sponsor செய்ய முடியும். Advertisement இதற்கு ஏதுவாக standard skilled விசா நிபந்தனைகளிலிருந்து முக்கிய சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படுகிறது: Employer Nomination Scheme மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு. நெறிப்படுத்தப்பட்ட விசா nomination மற்றும் முன்னுரிமை விசா விண்ணப்ப பரிசீலனை. Post-qualification பணி அனுபவம் தேவையில்லை. தொடர்புடைய சமூக மொழி திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ஆங்கில மொழிப் புலமை தொடர்பான சலுகைகள். ஆண்டுச் சம்பளம் குறைந்தபட்சம் $51,222 அல்லது ஆஸ்திரேலிய Market Salary Rate- எது அதிகமோ அது. பராமரிப்புப் பணியாளர்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்புடைய நேரடி பராமரிப்புத் தொழிலில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முழுநேரப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசு கூறுகின்றபோதிலும், இரண்டு வருட பணி அனுபவம் ஒரு குறிப்பிட்ட முதலாளி அல்லது விசா துணைப்பிரிவுடன் இணைக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தம் ஊடாக வெளிநாட்டு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் விசா செயல்முறைகள் நெறிப்படுத்தப்படுவதால், முதியோர் பராமரிப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும் ஒன்று என முதியோர் பராமரிப்புத்துறை அமைச்சர் Anika Wells கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்புப் பணியாளர்களின் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் வகையில், இந்தப் புதிய முயற்சி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?