முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 957 சுவிஸ் வாழ் மருமகனிடம் ஏமாந்த யாழ்ப்பாண மாமியார்;

சுவிஸ் வாழ் மருமகனிடம் ஏமாந்த யாழ்ப்பாண மாமியார்; பரிதவிக்கும் மகள்!
யாழ் நாவலர் வீதியில் வசித்துவரும் 64 வயதான இரு பெண் பிள்ளைகளின் தாயாரை ஏமாற்றி அவரது பெருமதியான யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டினை சுவிஸ்வாழ் மருமகன் அபரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட தாயாரின் மூத்த மகள் 14 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் முடித்து சுவிஸ்லாந்து சென்று வாழ்ந்து வருகின்றார். மற்றைய மகள் திருமணம் முடிக்காத நிலையில், அரச நிறுவனம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக உள்ளார். சுவிஸ் வாழ் மருமகனிடம் ஏமாந்த யாழ்ப்பாண மாமியார்; பரிதவிக்கும் மகள்! | Jaffna Mother In Law Cheated On Swiss Son In Law நீண்டநாட்களின் பின் ஒன்று சேர்ந்த குடும்பம் மூத்த மகள் காதலித்து திருமணம் முடித்ததால் நீண்டகாலம் மகளுடன் தொடர்பில் இல்லாதிருந்த தாயார் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னரே மகள் யாழ்ப்பாணம் வந்த போது தொடர்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தனது மகளின் பிள்ளையின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக சுவிஸிற்கு வருமாறு அழைத்த மருமகன் , மாமியாரின் பெறுமதிமிக்க யாழ்ப்பாண வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளார். சுவிஸ் வாழ் மருமகனிடம் ஏமாந்த யாழ்ப்பாண மாமியார்; பரிதவிக்கும் மகள்! | Jaffna Mother In Law Cheated On Swiss Son In Law சுவிஸ்லாந்திற்கு செல்வதற்கான விசாவைப் பெறுவதற்காக சொத்து மதிப்பினை சுவிஸ்துாதரகத்திற்கு காட்டுவதற்காக மாமியார் தனக்கு சொந்தமான வீட்டை பெறுமதியிட்டு குறித்த துாதரத்திற்கு விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில் சுவிஸ் சென்ற மாமியாரை அங்கு நிரந்தரமாக தங்குவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும், இளைய மகளையும் அங்கு அழைப்பதாகவும் மாமியாருக்கு மருமகன் உறுதியளித்துள்ளார். ஆசைவார்த்தைகூறி மோசடி அதற்கு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளதாக கூறி மாமியாரை விசா முடிவடைவதற்குள் கொழும்பு கொண்டு வந்து ஆங்கிலத்தில் உறுதி ஒன்றைத் தயாரித்து மாமியாரின் யாழ் நாவலர் வீதியில் உள்ள 3 பரப்பு காணியுடன் கூடிய வீட்டினை தனக்கும் மனைவிக்குமாக சீதனமாக ஏமாற்றி பதிவு செய்துள்ளார். சுவிஸ் வாழ் மருமகனிடம் ஏமாந்த யாழ்ப்பாண மாமியார்; பரிதவிக்கும் மகள்! | Jaffna Mother In Law Cheated On Swiss Son In Law வீட்டை தனது தாயிடம் ஏமாற்றி எழுதி வாங்கிய விடயம் மனைவிக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள மகளுக்கோ தெரியாது. காணியை எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் இரு நாட்களில் மருமகனுடன் மாமியார் சுவிஸ் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த பின் விசா முடிவடையும்போது இலங்கை செல்லுமாறும் அங்கு சென்ற பின்னரே நிரந்தர விசா எடுக்கலாம் என கூறி மாமியாரை, மருமகன் இலங்கைக்கு அனுப்பியுள்ளார். சுவிஸ் வாழ் மருமகனிடம் ஏமாந்த யாழ்ப்பாண மாமியார்; பரிதவிக்கும் மகள்! | Jaffna Mother In Law Cheated On Swiss Son In Law மாமியார் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து ஓரிரு மாதங்களின் பின்னரே தனது சுவிஸ் மாப்பிளை தன்னை ஏமாற்றிய விடயம் சுவிஸ் மகள் ஊடாக தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியுள்ள தாயார் தனது மகளுக்கு முன்னால் தானும் யாழ்ப்பாணத்தில் உள்ள மற்றைய மகளும் தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த சுவிஸ் மகள் அயலவர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் தாயாரிடம் ஆறுதல் வார்த்தைகள் கூறி வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் குறித்த வீட்டை தனது கணவரிடம் கையெழுத்து வாங்கி மீண்டும் தருவதாகவும் கூறி தாயாரை சமாதானப்படுத்தியுள்ளாராம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?