முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b352

 இந்தியாவிற்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!



இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவராக மிலிந்த மொரகொடாவின் நியமனத்தை ஏற்க வேண்டாம் என இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மிலிந்த மொரகொடாவின் ( credentials ) தகுதிச்சான்றை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“அமைச்சுத் தகுதிநிலையுடன் தூதுவராக மொரகொடா நியமனம் செயப்பட்டிருப்பதனை சுட்டிக்காட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இவ்வாறு அமைச்சர் தகுநிலை வழங்குவதானது தூதுவர்களை நியமிக்கும் மரபில் இல்லை என்றும், இது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புவதாக உள்ளதெனவும் சுட்டிக்காட்டியது.


இலங்கைத்தீவின் இறுதிப்போரின் முடிவுக்கு பின்னராக 2009 மே – 2020 ஏப்ரல் காலப்பகுதியில் சிறிலங்காவின் நீதி மற்றும் சட்டச் சீர்திருத்த அமைச்சராக மொரகொடா இருந்தவர் என்பதோடு, அக்காலத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம் ( Internally Displaced People (IDP) camps ) என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மனிதத் தன்மையற்ற முறையில் தள்ளப்பட்டிருந்தனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிகாட்டியுள்ளது.


 

குறிப்பாக புனர்வாழ்வு முகாம்களில் 'புனர்வாழ்வு' என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், ஆதரவாளர்களாகக் கருதப்பட்டவர்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாஙகம், 1960களில் சீனக் கலாசாரப் புரட்சிக் காலத்தில் அங்கு அமைக்கபட்ட 'புனர்கல்வி மையங்களைப் போன்றவையாக' இவைகள் அமைந்திருந்தன எனச் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் கடும் சித்திரவதைகளுக்கும், ஏற்றுக் கொள்ளமுடியா பெருங் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என நம்பகமான சான்றுகளின் அடிப்படையில் சர்வதேச மனித உரிமையாளரும், ஐ.நாவின் வளஅறிஞராக முன்னராக இருந்தவருமாகிய ஜஸ்மின் சுக்கா அவர்களது International Truth and Justice Project அமைப்பு தெரிவித்திருந்ததனையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.



 

சிறிலங்காவின் தற்போதைய சிறையமைப்பிலும் மொரகொடாவுக்குப் பாரிய பங்கு இருக்கின்றது எனத் தெரிவித்தள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்தச் சிறையமைப்பில்தான் தமிழ் அரசியல் கைதிகள், தமிழ்ப் போர்க்கைதிகள் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கும் வலிந்து காணாமலாக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.


சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களமும் நீதித்துறை அமைச்சர் என்ற முறையில் மொரகொடாவின் மேற்பார்வைக்கு உட்பட்டதே என்றும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்( PTA ) கீழ் நடந்த துன்புறுத்தல்கள், சிறைக்காவல், சித்திரவதை யாவற்றுக்கும் இவரே பொறுப்பாகிறார் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.



 

சிறிலங்காவின் பயங்கரகவாத தடுப்புச்சட்டம் (PTA) மேன்மைகொண்ட சட்டநெறிகளில் படிந்த கறை என பன்னாட்டுச் சட்டவாளர் ஆணையம் (ஜசியே) கூறியுள்ளதனையும் சுட்டிக்காட்டியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மட்டுமல்லாமல் மனிதவுரிமைப் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவும் இச்சட்டத்தை சிறிலங்கா நீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர் என்பதனையும் தெரிவித்துள்ளது.


மொராகொடாவினால் நிறுவப்பட்டுள்ள Pathfinder Foundation எனும் அமைப்பு, அமைதிக்காகவும் மதங்களிடையே நல்லெண்ணத்துக்காகவும் பாடுபடுவதாகக் கூறிக் கொள்கிற போதும், சீனாவுடனான அதன் நெருக்கத்தை அந்நிறுவனம் வெளிப்படுத்தவதாக அமைந்துள்ளது என இந்தியாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


 

சீனாவின் ஆசிர்வாதத்துடன் மொரோகொடாவின் பங்களிப்புடன் சிறிலங்காவில் ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய அரசாங்கத்துக்கு அமைதியையோ மதங்களிடையே நல்லிணக்கத்தையே ஊக்கிவிப்பதில் நம்பிக்கை கிடையாது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.


யாழ்ப்பாணத் தீவுகளில் இந்தியாவுக்கு வழங்குவதாக இருந்த காற்றலை மின்திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்கம் செய்து அதனை சீனாவுக்கு வழங்கியிருந்ததோடு, வட பகுதியில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களை சீர்குலைந்து வருவது தொடர்பில் ஈழத்தமிழ் மக்கள் கவலை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்தியாவை தொடர்ந்து சிறிலங்கா உதாசீனம் செய்து சீற்றங் கொள்ள வைப்பது தொடர்பிலும் கவலை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.


சீனாவுடன் நெருக்கமான உறவினைக் கொண்டுள்ள மொரகொடா தூதுவராக நியமனம் செய்திருப்பதானது, ஈழத் தமிழர்களின் அக்கறை கொண்டுள்ள இந்தியாவுக்கு தடைக்கல்லாக அமைவது மட்டுமல்லாது இலங்கைத் தீவில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவும் அமைந்து விடும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது.


கீழ் வரும் சம்பவங்களையும் முன்னுதாரணங்களாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


2020ம் ஆண்டு கனடாவுக்கு தனது தூதராக சிறிலங்கா நியமனம் செய்திருந்த ஏர்மர்செல் விமானப்படை தளபதி சுமங்கல டயசை 'கனடா' நிராகரித்தது. 2010ம் ஆண்டு ஈரான் நியமித்த தூதரை கனடா மறுதலித்தமையும் பாகிஸ்தான் அமர்த்திய தூதரை சவுதி அரோபியா மறுதலித்தமையும் இவ்வாறான முன்னுதாரணங்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.



 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?