முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b408

மீண்டுமொருமுறை வாடா திலீபா…
திலீபா! குடல் கொடுத்தாய் குரல் கொடுத்தாய் உயிர் கொடுத்தாய் உடல் கொடுத்தாய் உனைக் கொடுத்தாய் – அட எத்தனை ஈகமடா முடித்தாய் அத்தனைக்கும் கட்டணமாய் விடுதலையே நீ விதித்தாய் மீண்டுமொரு முறை வாடா திலீபா வானத்தில் நின்று நீ வாழ்த்தும் தமிழீழம் வந்து சேரும் அந்த நேரம் வரும் வரைக்கும் வந்திறங்கி ஒரு வரம் தா நாங்கள் விடுதலை நீர்குடிக்க உணர்வுக் கடப்பாரையால் உனது வயிற்றிலே கிணறு வெட்டினாய் பசியின் கரங்களை முறித்துச் சிறகாக்கி சுதந்திரப் பசிக்கு நீ இரைதேடிப் பறந்தாய் மீண்டுமொருமுறை வாடா திலீபா விடுதலைத் தென்றல் நீ வெந்துகொண்டிடுந்தாய் தாயாகத் திசைகளெங்கும் புயல் அடித்துக்கொண்டது வானைத் துளைத்துந்தன் ஈகமும் எங்கள் சோகமும் உயர உயர நேசித்த மனங்கள் எங்கும் பூகம்பம் நடந்தது. சாவு வந்துன்னைக் காவு கொள்ளுமெனக் காத்துக் கிடந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்க சாவுந்தன் காலடியில் வாழ்விழந்து விழுந்தது… அது ஆயிரம் ஆயிரம் வீரர்கலாய்ப் பிறந்தது மீண்டுமொருமுறை வாடா திலீபா வந்திறங்கி ஒரு வரம் தா. உரிமைப் பசியெடுத்து நாங்கள் உயிரைக் கொடுக்கையில் உணவுப்பொதி விழுத்தி உள்ளே நுழைந்தவர்கள் உதவிக் கரங்களிற்குள் ஒளித்து வருவது குரல்வளை நெரிக்கும் குறடுகள் என்பதைப் பறையடித்தவன் நீயடா வல்லரசொன்றின் வஞ்சகம் உடைத்து – தனியொரு வீரனாய் களத்தினில் ஆடினாய் நீ ஒரு மாபெரும் படையடா உன் ஈகத்திற்கேது உலகில் இல்லையடா – உன் உறுதிக்குவமை தேடி தோல்வியடா – நாம் யாருக்கும் பணியும் இனம் இல்லையடா – அதைப் புரியவைத்தது உன் வலிமையடா மீண்டுமொருமுறை வாடா திலீபா…. ஈழதாகம் நெஞ்சினில் ஏற நீரின் தாகம் நீ வெறுத்தாய் அட வானமாகி எங்கள் கண்கள் நீர் சரிக்க – இந்தியன் ஏனடா பார்க்க மறுத்தான் அந்த வஞ்சகச் சதியரின் வலையினைக் கிழிக்க விழ்ந்ததைக் தாங்கிடா வீரமா வேந்தன் வேறறுத்தல்லவா அவர்களைக் கலைத்தான் ஒரு காலமும் கலங்காப் பிரபாகரன் படை முடங்கா – இதை புரியாதவன் சரிவான் அடிவாங்கியே பகைவன் உயிர் மடிவான் மீண்டுமொருமுறை வாடா திலீபா…. கோட்டைக்கு முன்னாள் நீ குரல் எழுப்பியபோது காற்சட்டையோடு நின்றவர் எல்லாம் – வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டார்கள் எதிரிக்கு சாட்டையடி கொடுக்காது அவர்கள் சரியமாட்டார்கள் வெட்டரிவாளோடு எங்கள் வீதி வந்தவர் எவரும் தங்கள் வீட்டினிற்குத் திரும்பிப் போகமாட்டார்கள். மீண்டுமொருமுறை வாடா திலீபா வந்திறங்கி ஒரு வரம் தா கரைந்துகொண்டிருந்தபோது உனக்கு முன்னே தங்கள் கண்களைக் கரைத்துக்கொண்டிருந்த உறவுகளின் உதிரிப்பூக்கள் இப்போ எங்கள் உயிர் எடுத்தவரின் உயிர் எடுப்பதற்காய் உயிர் கொடுப்பதற்காய் பெயர் கொடுக்கிறார்கள் மில்லரின் பல்லவிக்கு இங்கே ஏராளம் சரணங்கள் காத்திருக்கிறன – ஒய்விலுள்ள போர்ப்பாட்டு ஒருநாள் ஒலிக்கும்போது மீதியுள்ள பாசறைகள் மீதெரியும் நெருப்பாக இந்த வரிப்புலிகள் வளர்கிறார்கள். மீண்டுமொருமுறை வாடா திலீபா வந்திறங்கி ஒரு வரம் தா நீ முழங்கிய குரலின் எதிரொலியாய் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எங்கள் மண்ணில் ஒலிக்கிறது. மக்கள் படை – அது வெல்லும் தடையென்று உனது மந்திரம் வலுக்கிறது – அட பகையே உனக்கென்ன வேலை எங்கள் மண்ணில் கிடக்கிறது ஓயாத அலைகளிற்கு வலுக்கொடுத்த அந்த சாயாத படை இதைக் கேட்கிறது. பாயாது புலி எனும் நப்பாசை ஆகாது எம்மண்ணில் வாழ்வது வாயாது பகையே தப்பாசை அதுவென்று உன் தாக உணர்வேற்று உரம்கொண்ட பெருஞ்சேனை திரண்டிங்கே எழுகின்றது மீண்டுமொருமுறை வாடா திலீபா…. கொழும்புதான் எமை ஆளுமாம் – அட இதற்கா எங்கள் குழந்தைகள் செத்தார்கள் – நீயுருகிய மேடயில் காசி பாடிய வரிகள் தூசிபடியாமல் இன்னும் துடிப்போடு இருக்கிறது. கொழும்புதான் எமை ஆளுமேன்ர கொழும்பு இப்போதும் இருக்குமென்றால் எலும்புதான் அவர் படைகளிற்கு மிஞ்சும் என்பதை எப்போதோ தலைவன் எழுதி வைத்துவிட்டான் வெறுங்கையோடு வரும் வேங்கைகளைச் சுட்டுவிட்டு சண்டைக்கு நாம் அஞ்சமாட்டோமெனச் சண்டித்தனம் விடும் சண்டாளர்களை எங்கள் முதல்வனின் மூச்சுக் காற்றே சுட்டெரிக்கும் என்பதை பேச்சுக்கள் சொல்லாது வால்வீச்சுக்களே சொல்லும் மீண்டுமொருமுறை வாடா திலீபா…. எரிமலைக் குழம்பாய் குமுறிக் குமுறி ஏற்றிய மெழுகாய் உருகி உருகி பணிந்திடாப் புலியாய் உறுமி உறுமி பார்த்தீபன் தந்தது உறுதி உறுதி.
கவியாக்கம்: லெப். கேணல் செந்தோழன்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?