முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b421

விரல்கள் மேலே சக்கரம் சுழல்வது போல தெரிகிறதே இதுதான் “கடவுளின் கை”
நாசா வெளியிட்ட 1986ம் ஆண்டு கால்பந்தாட்ட உலக கோப்பை தொடரில், மரடோனா அடித்த ஒரு கோல் இந்த வார்த்தையை பொது வெளியில் பிரபலப்படுத்தியது. அதன்பிறகு, இப்போது, நாசா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் கடவுளின் கை என்ற வார்த்தையை பொது வெளியில் பேச வைத்துள்ளது. 1986 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு மரடோனா தலைமைவகித்தார். அந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தியது அர்ஜென்டினா. கோப்பையை வென்றதோடு, தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை மரடோனா பெற்றார். அதேநேரம், அந்த தொடரின் காலிறுதிப் போட்டியில் ஒற்றையாளாகப் பந்தை பாஸ் செய்து எடுத்துச் சென்று கோல் அடித்தார் மரடோனா. அந்த கோல்தான், கடந்த நூற்றாண்டின் சிறந்த கோலாகக் கருதப்படுகிறது. ஆனால், அதே போட்டியில் நடுவர் பார்க்கத் தவறிய நிலையில், மரடோனாவின் கையில் பட்டுச் சென்ற பந்து கோல் ஆகியிருந்தது. அதை கடவுளின் கை என்று வர்ணித்தனர். இப்போது நாசா விஷயத்திற்கு வருவோம். நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் அலுவல்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப்படத்தில்தான் தங்க கை காணப்பட்டதாக நெட்டிசன்களால் கூறப்படுகிறது. ஏனெனில் ஒரு பிரமாண்ட கை விரல்களை விரித்து காட்டுவதை போல அந்த காட்சி உள்ளது. ஆசி வழங்குவதற்காக ஞானிகளால் கை காட்டப்படுமே அதுபோல இருக்கிறது. கோபத்தில் இருக்கும் ஒருவர், வேண்டாம் என்று கையால் காட்டுவதை போல அந்த கை தெரிகிறது என்கிறார்கள் சிலர். இதற்கு முன்பு திரைப்படங்களில் பார்த்த, சிவபெருமானின் கை போல தெரிகிறது என்கிறார்கள் சிலர். விரல்களுக்கு மேலே சக்கரம் போன்ற அமைப்பு இருப்பதை பார்த்தால், அது ஸ்ரீகிருஷ்ணரின் கரங்கள் என்கிறார்கள் விஷ்ணு பக்தர்கள். இதைத்தான், ‘கடவுளின் கை’ (Hand of God) வானில் தெரிந்தது என்கிறார்கள் நெட்டிசன்கள். நாசாவும் கூட, இதற்கு கடவுளின் கை என்று பெயர் என கூறியுள்ளது. அதேநேரம், கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்தும் நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, விண்மீன் வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் ஒன்றால் உருவான ஆற்றல் மற்றும் துகள்களின் மூட்டம் என்கிறார்கள். அதாவது, இதை துடிப்பு விண்மீன் என்கிறார்கள். தங்க நிறத்தில் கை போன்ற உருவமாக தெரிகிறது. PSR B1509-58 என்று பெயரிடப்பட்ட இந்த பல்சர் பின் மூலம் சுமார் 19 கிலோ மீட்டர் குறுக்களவு (விட்டம்) கொண்டது. அது நொடிக்கு சுமார் ஏழு முறை சுழல்கிறது என்று நாசாவின் சந்திரா ஆய்வகம் தெரிவிக்கிறது. துடிப்பு என்பதற்கு ‘pulse’ என்று கூறுவோம் அல்லவா. அந்த மூலச் சொல்லில் இருந்து உருவானதுதான் ‘pulsar’ என்கிறார்கள். எனவே கடவுளின் கை தோன்ற பின்னணி இது என்கிறார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?