முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b400

அமெரிக்காவில் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அருட்தந்தை ஜோசப் மேரி விடுத்துள்ள பகிரங்க சவால் அமெரிக்காவிற்கு சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்தானது வெறும் கண்துடைப்பு மாத்திரமே. அதனை அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அருட்தந்தை ஜோசப் மேரி (Rev.Fr. Joseph Mary)தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இதற்கு முன்னிருந்த அரசாங்கம் மனித உரிமை மீறப்பட்டுள்ள வேளையில் நாங்கள் அதனை ஆவணம் செய்வோம் என்று ஐ.நாவில் கூறியிருந்தார்கள். அதுவும் கிடப்பில் கிடந்ததுடன், இந்த அரசையும் குற்றம்சாட்டியிருந்தார்கள் அத்துடன் எமது மக்களை விலைபேசி வந்துவிட்டார்கள். இதே பாணியில் ஜனாதிபதியும் அமெரிக்காவில் கூறியது பழைய அரசை போன்று வெறுமனே வாய் சொல்லே தவிர செயல்முறையில் நடக்குமா என்பது கேள்விக்குறி. ஆகவே கண்துடைப்புக்காக இதை செய்கின்றார்களா? மனதார உணர்ந்து செயற்படுகின்றார்களா? இந்த மக்கள் நிம்மதியாக வாழ சிங்கள மக்களுடன் கை கொடுத்து வாழ இவர்கள் செய்ய வேண்டியது காலத்தின் தேவை. ஆனால் வ

TAMIL Eelam news b399

சிறிலங்கா அரச அதிபரின் பகிரங்க அழைப்பிற்கு புலம்பெயர் தமிழர்களின் பதில் என்ன? வெளியான தகவல் தமிழ் மக்கள் தொடர்பில் சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்கள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழுகின்ற சில தமிழ் சமூகத்தினர் வரவேற்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக உள்ளக பொறிமுறை ஊடாக, நீண்ட காலமாக நிலவி வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு விடுத்துள்ள அழைப்பை புலம்பெயர்வாழ் தமிழ் சமூகத்தின் 95 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வரவேற்றுள்ளதாக ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் சிறைகளில் நீண்டகாலமாக இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை துரிதமாக விசாரணை செய்து விரைவாக விடுதலை செய்வதற்கு தான் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்வேன் என்று அரச தலைவர் அளித்த உறுதிமொழியை ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் வரவேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காணாமல் போனோர் விடயத்தில் ஆரம்பம் முதலே மிகவும் கரிசனையாகச் செயற்பட்டுவரும் அரச

TAMIL Eelam news b398

திடீரென தமிழர் தாயகப் பகுதிக்கு விஜயம் செய்யும் நாமல் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (22) திருகோணமலைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது, அமைச்சர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிக்க உள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது . இதன்படி, காலை 10 மணிக்கு திரியாய் பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகள் அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதோடு, காலை10:40 மணிக்கு மொரவெவ நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தை மேற்பார்வை செய்யவுள்ளார். பின்னர் குச்சவெளி சாந்திபுரம் யானை வேலிக்கான அடிக்கல் நிகழ்வு நடைபெற உள்ளதோடு, காலை 11. 45 மணிக்கு குச்சவெளி நாவற்சோலை கரப்பந்து விளையாட்டு மைதானம் திறந்து வைத்தல் மற்றும் கொங்ரீட் வீடமைப்பு தொகுதி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது. மாலை திருகோணமலையிலுள்ள டொக்கியாட் துறை மேற்பார்வை செய்யப்படவுள்ளதோடு, பிறகு வெள்ளை மணல் கரப்பந்து, கந்தளாய், சேருவில, வெருகல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரப்பந்து விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படவுள்ளதோடு, காணி உறுதிப்பத்திரம்

TAMIL Eelam news b397

பிரித்தானியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை சர்ச்சைக்குரிய முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து தனது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்திவரும் பிரான்ஸ், தற்போது பிரித்தானியாவுடனான பாதுகாப்பு பேச்சுக்களை மீளெடுத்துள்ளது. இதனிடையே குறித்த முத்தரப்பு உடன்படிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ள வடகொரியா, குறித்த உடன்படிக்கை அணு ஆயுதப் போட்டி வழிகோலும் என எச்சரித்துள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான புதிய முத்தரப்பு உடன்படிக்கையை அடுத்து தமது நாட்டுடனான நீர்மூழ்கி கப்பல் கொள்வனவு உடன்படிக்கையை அவுஸ்திரேலியா இரத்துச் செய்தமை தொடர்பிலும் பிரான்ஸ் தனது ஆத்திரத்தை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த உடன்படிக்கை குறித்து பிரான்ஸ் எந்தவொரு கவலையும் கொள்ள வேண்டிய தேவையில்லை என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் உடன் லண்டனில் நடைபெறவிருந்த பேச்சுக்களை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி இரத்துச் செய்துள்ளார். இதனிடையே முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை, நட்பு நாடுகளுக

TAMIL Eelam news b396

கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம் கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்த நிலையில் 27 வயதான இளம் தாயார் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரம் கிளிநொச்சியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது பிரசவத்திற்காக யாழ் போதனா மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு குழந்தையினை பிரசவித்த நிலையில் தாயார் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் (19.09.21) நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி தர்மபுரத்தில் வசித்துவந்த 27 அகவையுடைய துசி என்று அழைக்கப்படும் அஜந்தன் துஷ்யந்தினி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது உடலம் யாழ் போதான மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது. இவரது உயிரிழப்பு கிராமத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

TAMIL Eelam news b395

 கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈழத் தமிழர்களை இழிவு படுத்தும் படங்களில் நடிக்க மாட்டேன் : லாஸ்லியா இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் லாஸ்லியா. அதன்பின் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 3இல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்ட லாஸ்லியாவிற்கு, தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.சமீபத்தில் ஹர்பஜன்சிங், அர்ஜுன் ஆகியோருடன் லாஸ்லியா இணைந்து நடித்த பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி லாஸ்லியாவிற்கு நடிகர் ஆரியுடன் அடுத்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.   இந்நிலையில் பேட்டி ஒன்றில் லாஸ்லியாவிடம், ‘ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து படமாக்கப்படும் ஃபேமிலி மேன் போன்ற திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதற்கு பதிலளித்த லாஸ்லியா ‘இலங்கையில் என்ன நடந்தது என்பது எனக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து எடுக்கப்படும் எந்த ஒரு திரைப்படத்திலும் நான் நடிக்க மாட்டேன். இலங்கையில் நடந்த கொ

TAMIL Eelam news b394

 நள்ளிரவில் கைச்சாத்தான ஒப்பந்தம் - வெளிச்சத்திற்கு வந்த தகவல் கெரவலப்பிட்டிய மின் நிலையம் மற்றும் எரிவாயு குழாய் மற்றும் முனைய மின் நிலையம் என்பவற்றின் பங்குகளை 40வீதம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஒப்பந்தம் சனிக்கிழமை (18) அதிகாலை 12:06 மணிக்கு கையெழுத்தானது. அதிகாலை 2 மணியளவில் அமெரிக்க முதலீட்டாளர்கள் வெளியேறினர், அதன் பின்னர் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு பறந்தார் "என்று ஜேவிபி தலைவர் எம்பி அனுரகுமார திசாநாயக்க கூறினார். கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தற்போதைய ஆட்சியாளர்கள் அதிக அளவில் தேசிய வளங்களை வெளிநாட்டினருக்கு விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், எனினும் இந்த ஆட்சியை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கிய காரணியாக செயற்பட்டது தேசிய வளங்களை பாதுகாக்கும் எண்ணத்துடன் ஆகும். கெரவலபிட்டிய யுகடனாவி 300 மெகாவோட் மின்நிலையத்தை அமெரிக்காவை தளமாக கொண்ட நியுபோர்ட்டிரஸ் எனேர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளமைக்கு எதிராக ஜேவிபி நீ