முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b603

முல்லைத்தீவிலிருந்து வவுனியா சென்ற மனைவியை காணவில்லையென கணவர் முறைப்பாடு முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் இருந்து வவுனியாவுக்கு கடந்த 05-11-2021 அன்று சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லையென கணவனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகுமார் ஜெயந்தி எனும் 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு இன்று வரை வீடு திரும்பாத நிலையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் தாயை காணாது தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தனது மனைவி தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்றும், பொலிஸாரும் தனது மனைவியை தேடி தர அக்கறை காட்டவில்லை என்றும், தாயை காணாத நிலையில் பிள்ளைகள் தவித்து வருவதாகவும், தெரிவிக்கும் கணவன் தன்னுடைய மனைவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தனது 0765350421 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறும் கோரியுள்ளார். இதேவேளை பொலிஸார் தனது மனைவியை தேடித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,15 வயதுடைய ஆண் மகன் மற்றும் 12 வயதுடைய மகள் மற்றும் 7 வயதுடைய மகள் ஆகியோர் தாயை காணாது மி

TAMIL Eelam news b602

கனவில் வந்த சிவபெருமான்: யாழ்.நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு! பொதுமக்கள் நீண்டகாலமாக குடியிருந்த காணியை தன்னுடையது என்றும் சிவபெருமான் கனவில் வந்து குறித்த காணியை காண்பித்தார் என காணியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். யாழ்.நீதிமன்றமொன்றில் இடம்பெறும் காணி வழக்கில், பிரதிவாதிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழில் உள்ள சைவ ஆலயமொன்றின் பரம்பரை தர்மகர்த்தாவினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. யாழ்.புறநகர் பகுதியொன்றில் உள்ள காணியொன்றில் பொதுமக்கள் நீண்டகாலமாக குடியிருந்து வருகின்றனர். அந்த காணி தம்முடையதென குறிப்பிட்டு, பரம்பரை தர்மகர்த்தாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TAMIL Eelam news b601

எட்டு பெண்கள் உள்பட இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் இந்தியாவில் எட்டு பெண்கள் உள்பட 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பெண்கள் உள்பட 10 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக இந்தியா சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் வெளியான தகவலானது, இரகசிய தகவலின் அடிப்படையில், சுங்க அதிகாரிகள் குறித்த அனைவரையும் சனிக்கிழமை மாலை கைது செய்ததாக IANS தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-171 இல் 140 பயணிகளுடன் பயணித்துள்ளனர். தங்கத்தை தங்களது உடலில் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பானது சுமார் 10 கோடி மதிப்பாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMIL Eelam news b600

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையென கூறும் அரசாங்கம் தமது இருப்பை தக்கவைக்கவும், வாக்கு வங்கியை பாதுகாக்கவும் பாதுகாப்புப்படைகளை பலப்படுத்துகின்றது. யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து தற்போது வரையில் பாதுகாப்புக்கு மாத்திரம் 3790.8 பில்லியன் ரூபா நிதி ஒடுக்கப்பட்டுள்ளது என்பதை சபையில் சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (charles nirmalanathan), பாதுகாப்புப்படைகளே இந்த நாட்டின் உண்மையான சுமை எனவும் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (22), வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு கோவிட் தொற்று ஒரு காரணமாக இருந்தாலும் கூட நாட்டின் தவறான பொருளாதார கொள்கையும் முகாமைத்துவமுமே பிரதான காரணமாகும். பாதுகாப்பிற்காக மிகப்பெரிய தொகையை ஒதுக்குவதே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாகும். யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து பாதுகாப்பிற்கு 3790.8 பில்லியன் ரூபா நிதி ஒடுக்கப்பட்டுள்ளது. அரச சேவையாளர்கள்

TAMIL Eelam news b599

சிங்களத்தின் அறிவிக்கப்படாத வெளிநாட்டு அமைச்சர்கள் இவர்கள் இருவர் தான்: பாருங்கள் எத்தனை பீலா சிங்கள அரசாங்கத்தின் வெளிப்படுத்தப்படாத வெளிவிவகார அமைச்சர்களாக தமிழரசுக்கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல, சுமந்திரன் மற்றும் சாணக்கியன் தான் என்பது தமிழர்கள் நன்கு அறிந்த விடையம். தமிழர்கள் துயருறும்போது அந்த துயரங்களில் துளியும் பங்குபெறாதவர்கள். தமிழர்களின் வலியறியா மேட்டுக்குடிகளின் கைகளில் தமிழர்களின் எதிர்காலத்தை எப்படிக் கொடுப்பது ? இதனைத் தான் வலையத் தளத்தில் உள்ள லட்சக் கணக்கான தமிழர்கள் கேள்வியாக முன் வைக்கிறார்கள். அமெரிக்க அரசு தம்மை அழைத்ததாக பொய் கூறி, அமெரிக்கா சென்று அங்கே ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து விட்டு ஜெனிவா கிளம்புகிறார் சுமந்திரன். கனடாவில் வாங்கிக் கட்டியது போதாது என்று, ஜெனீவாவில் இருந்து நாளை லண்டன் வருகிறார் சுமந்திரன். லண்டனில் என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ… அவனே அறிவான். கனடா தமிழர்கள் போல லண்டன் தமிழர்கள், பொறுமையாக நடந்து கொள்வார்களா ? என்பதில் பெரும் சந்தேகம் இருக்கு… பெரும் தேர் திருவிழா ஒன்று நாளை லண

TAMIL Eelam news b598

“கை மலர்கொண்டு கார்த்திகை மலர்களை பூசிக்க வாருங்கள்” காத்திருந்து காத்திருந்து கார்த்திகை வந்ததும் கார்த்திகைமலராய் பூத்திருந்து எமை பார்த்திருக்கும்-எம் கார்த்திகை மலர்களை கைதொழ வாருங்கள் -உங்கள் கைமலர் கொண்டு வையகம் எங்கிலும் வாழும்தமிழரே கார்த்திகைமலர்களை பூசிக்க வாருங்கள் ஈழம்மலரும் வேளையிலே – தம் இதயதாகம் தீர்ந்ததென ஈழத்தாயினை வாழ்த்திடவே கல்லறையில் கண்விழித்துக் காத்திருக்கும் எம்காவல் தெய்வங்களை போற்றிடவே வாருங்கள் போற்றியே போற்றியே தீபம் ஏற்றிட வாருங்கள். ஏற்றிவைக்கும் தீபத்தின் ஒளியாய் நின்று எம்மினத்தின் இருளகற்றி ஓளியேற்ற வேண்டி போற்றிடவே வாருங்கள் கண்ணீர்ப்பூக்கள் தூவி கரம் கூப்பிட வாருங்கள் – கரம் கூப்பிட வாருங்கள் கல்லறைத் தெய்வங்களின் புனிதம் போற்றி -அதை காணும் எம் மனங்களிலே மனிதம் ஏற்று அல்லல்கள் அவலங்கள் அனைத்தும் வெல்ல அகிலத்தில் வாழும் தமிழர்களே அன்பால் இணைந்து ஒன்றுகூடியே வாருங்கள் கை ஒன்று சேரவே வாருங்கள். கவிதை : ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

TAMIL Eelam news b597

இலங்கையின் வடக்கில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...உருவாகும் புதிய தாழமுக்கம் இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (23) உருவாகும் தாழமுக்கம் நிலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு இலங்கையில் வங்கக்கடலில் புதிய தாழமுக்கம் நிலை உருவாகி உள்ளது. இந்த பணிவு எப்போது, ​​எங்கே? எல்லை மீறுவது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். எவ்வாறாயினும், நாளை 24ஆம் திகதி தொடக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படிப்படியாக மழைவீழ்ச்சி அதிகரிக்கும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென்கிழக்கு இலங்கையில் வங்கக்கடலில் புதிய தாழமுக்கம் நிலை உருவாகி உள்ளது. நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீனவர்கள் எதிர்வரும் 28ஆம