முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b582

யார் இந்தே ஈழத்தின் சொந்தக்காரன் எதிரியே அடை யாழப் படுத்துகின்றேன் ஞாவத்தில் வையுங்கள்
முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டது தடை எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி சரவணராஜா இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம் ஆகிய ஏழு காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையின் விண்ணப்பத்தின் அடிப்படையில் குறித்த 47 பேருக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி சரவணராஜா தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். முல்லைத்தீவு காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR /868/21 வழக்கினூடாக முல்லைத்தீவு காவல் நிலையபிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன்,சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா(கரன்),முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் ,நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன்(முல்லை ஈசன்),சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா , முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி ,சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் ,நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,சமூக செயற்பாட்டாளர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டது. முள்ளியவளை காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/869/21 வழக்கினூடாக முள்ளியவளை காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பதினொரு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் திருச்செல்வம் இரவீந்திரன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கனகையா தவராசா, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், இரத்தினம் ஜெகதீஸ்வரன் , தவராசா அமலன் , சமூக செயற்பாட்டாளர்களான சுமித்கட்சன் சந்திரலீலா, காளிமுத்து சண்முகலிங்கம்,இராசசேகரம் இராசம்மா,பகீரதன் ஜெகதீசன், ஞானதாஸ் யூட்பிரசாத் ஆகிய பதினொரு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டது. ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/874/21 வழக்கினூடாக ஒட்டுசுட்டான் காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் மூன்று பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் ,சமூக செயற்பாட்டாளர்களான தர்மலிங்கம் ஜீவரத்தினம் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன்)உள்ளிட்ட மூன்று பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது மாங்குளம் காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/872/21 வழக்கினூடாக மாங்குளம் காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் ஒன்பது பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா ,சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன், ரகுநாதன் துஷ்யந்தன் ,குஞ்சிதபாதம் ரவீந்திரன்,ராசமணி சிவராசா,மகாதேவன் ஆனந்த் ,சுப்பிரமணியம் பரமானந்தம் உள்ளிட்ட ஒன்பது பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/873/21 வழக்கினூடாக புதுக்குடியிருப்பு காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பதின்நான்கு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான கணபதிப்பிள்ளை விஜயகுமார்,கனகசுந்தரசுவாமி ஜனமேஜெயந், சிவபாதம் குகனேசன் ,சமூக செயற்பாட்டாளர்களான தம்பையா யோகேஸ்வரன்(முல்லை ஈசன்), இசிதோர் அன்ரன் ஜீவராசா,பேதுருப்பிள்ளை ஜெராட்,தவராசா கணேஸ்வரன் ,சபாரத்ணம் யோகநாதன், ஜேசுதாசன் பற்றிக் யூட் ,வேலுப்பிள்ளை தியாகராசா , முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி ,பதின்நான்கு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது ஐயன்கன்குளம் காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/871/21 வழக்கினூடாக ஐயன்கன்குளம் காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா ஐயன்கன்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுஜன்சன் சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துயன் ,சங்கரப்பிள்ளை நாகரத்தினம் ,காசிப்பிள்ளை கருணாகரன் ,கந்தசாமி சந்திரசேகரன்,தங்கராசா நிறஞ்சன் உள்ளிட்ட எட்டு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது மல்லாவி காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/870/21 வழக்கினூடாக மல்லாவி காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மல்லாவி காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் ஏழு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் அருட் தந்தை நேசன் குலாஸ் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா,துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுஜன்சன் ,சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன்,தங்கராசா நிறஞ்சன் பத்மநாதன் ஸ்ரீகரன் ,மகாதேவன் ஆனந்த் , உள்ளிட்ட ஏழு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?