முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b535

கனடாவில் தமிழருக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்!
கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வாங்கிய லொட்டரி டிக்கெட் மூலம் சுமார் $100,000 (இலங்கை மதிப்பில் 1,62,51,236 ரூபாய்) கனடிய டாலர்களை வென்று ஒரே நாளில் பணக்காரராக மாறியுள்ளார். கனடாவில் உள்ள மிசிசாகா பகுதியில் வசித்து வருபவர் கோபாலநாதன் சதாசிவம்(56). இவர் வால்மார்ட்டில் உள்ள சீஎன்ஐபி கியோஸ்க்கில் 1 கனடிய டாலர் செலவு செய்து லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து அவர் வாங்க லாட்டரி டிக்கெட்டிற்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதாவது அவர் வாங்கிய லொட்டரிக்கு சுமார் $100,000 கனடிய டாலர்கள் பரிசு தொகை விழுந்துள்ளது. 59 வயதான கோபாலநாதன் சதாசிவம் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். மேலும் இது குறித்து அவர் தெரிவித்தது, இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்று தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான செய்தியை முதலில் எனது மனைவியிடம் கூறியதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளிடம் கூறினோம். அவர்கள் எங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். லொட்டரி மூலம் வென்ற பணத்தை வைத்து தனது சில பில்களை கட்டுவதோடு மீதமுள்ள பணத்தை குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்ய உள்ளதாக கோபாலநாதன் சதாசிவம் தெரிவித்தார். மேலும் பாதுகாப்பான சூழல் நிலவும் பொழுது குடும்பத்துடன் விடுமுறைக்கு பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் புன்னகையுடன் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?