முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b552

குழுக்கல் ரீதியாகடத்தல் வேலைகளில் ஈடுபடும் அனைவரும் சிறிலங்கா புணாய்வு முகவர்கள் என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு வந்த வெளிநாட்டு மாப்பிள்ளை; யாழில் கடத்தப்பட்ட இளம் யுவதி! யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இளம் யுவதியொருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக, உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் யுவதி, பணிக்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டார். குறித்த யுவதி அவரது சகோதரனின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வாகனத்தில் வந்த இளைஞர் குழுவினர், சகோதரனை தாக்கி விட்டு, யுவதியை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, யுவதியின் குடும்பத்தினரால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, காதல் விவகாரம் ஒன்றை தொடர்ந்தே இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அத்துடன் வைத்தியசாலையில் பணிபுரியும் யுவதியை, ஏழாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரே கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞன் ஒரு தலை காதலன் என்றும், யுவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், பலவந்தமாக கடத்திச் சென்றதாகவும், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சகோதரனை தாக்கி, யுவதியை ஏற்றிச் சென்றதால், அது கடத்தல் வழக்காக பொலிசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட இளைஞன் தரப்பினர், யுவதியும், தானும் காதலர்கள் என்றும், நேற்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாவோம் என்றும் குறிப்பிட்டிருந்த போதும் , நேற்று அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகவில்லை. எனினும் இன்று காலை அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுவதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண்ணிர்கு பெற்றோர் வற்புறுத்தி வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்த நிலையில் , வரும் 15ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதெவேளை , நிச்சயிக்கப்பட்ட வெளிநாட்டு மாப்பிள்ளை ஓரிரு தினங்களின் முன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?