முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b139

ஜேர்மனியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஈழத்தமிழ் இளைஞர் உயிரிழப்பு!                             ஜேர்மனியில் கடந்த சில நாட்களாகவே கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கு அனர்த்தத்தில் சிக்கி, ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். பெரும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தின் euskirchen என்ற இடத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளது தந்தையான இராசரத்தினம் இலக்குமணன் (36) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். கடந்த 15 ஆம் திகதி அவர் வெள்ளத்தில் சிக்குண்டார் என்பது தெரியவந்துள்ளது. வீட்டில் தனித்திருந்த சமயம் வெள்ளம் பெருகி வருவது கண்டு அவர் தனது முக்கிய சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு பாதுகாப்புத் தேடுவதற்காக வீட்டுக்கு வெளியே ஓடிவந்தார் என்றும் அச்சமயம் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கார் ஒன்றுடன் மோதுண்ட அவர் பின்னர் காணாமற் போனார் என்றும் சம்பவத்தை நேரில் கண்ட சிலர் கூறியுள்ளனர். வெள்ளப் பகுதி ஒன்றில் இருந்து மறுநாள் அவரது சடலம் கண்டெடுக்கப் பட்டது. அவரது கையில் பச்சை குத்தி இருந்தமையால்

TAMIL Eelam news b138

 பூமியை கடக்கப்போகும் சிறுகோள்…. இதை விட 3 மடங்கு பெரியதாம்…. தகவல்  பூமியை வரும் 24 ஆம் தேதி நள்ளிரவில் சிறுகோள் ஒன்று கடக்கப்போவதாக நாசா தெரிவித்துள்ளது. நமது பூமியானது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒன்றாகும். இந்த சூரிய குடும்பத்தில் கோள்கள் சுழன்று வருவதைப் போலவே சிறு கோள்களும் சுற்றி வருகின்றன. இவைகள் கோள்களின் உருவாக்கத்தின் போது உடைந்த சிறு பகுதிகளாகும். அந்த மாதிரி ஒரு சிறு கோளானது  பூமியை கடக்க உள்ளதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறு கோளுக்கு “2008 Go20” என்று பெயரிடப்பட்டுள்ளது.   இந்த சிறு கோளானது மணிக்கு 1800 மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் வரும்  24 ஆம் தேதியன்று இந்தியநாட்டு நேரத்தில் இரவு ஒரு மணி அளவில் பூமியை கடக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது. இதனை அடுத்து சிறுகோளின் நகர்வை நாசா தொடர்ந்து கண்காணித்து வருவருவதாக தெரிவித்துள்ளது. இந்த சிறுகோளின் நகர்வினால் பூமிக்கு எந்தவித சேதமுமில்லை என்று நாசா கூறியுள்ளது. மேலும் குறிப்பாக இந்த சிறு கோளானது தாஜ்மஹால் போன்று மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.

TAMIL Eelam news b137

 இலங்கை ஓர் சவாலான நாடு: அமெரிக்கா வெளியிட்ட தகவல் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை சவாலான நாடு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உறுதிசெய்ய முடியாத பொருளாதார கொள்கை,அரசாங்க சேவைகளின் திறனற்ற சேவைகள், வெளிப்படையற்ற அரசாங்கத்தின் கொள்வனவு நடவடிக்கைகள் போன்றவற்றால் பரிவர்த்தனை செலவுகள் அதிகமாக காணப்படுகின்றன என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. மேலும் ஒப்பந்தங்களை மதிக்காதிருத்தல் அதிகாரிகளாக நண்பர்கள் சகாக்களை நியமித்தல், போன்றவற்றின் காரணமாக முதலீட்டார்கள் கரிசனைகளை வெளியிடுகின்றனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்தோடு ஊழலிற்கு எதிராக போராடுவதற்கு போதிய சட்டங்கள் உள்ளபோதிலும் அதனை நடைமுறைப்படுத்துவது பலவீனமாக உள்ளது என்றும் 2021 முதலீட்டு சூழல் குறித்த அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

TAMIL Eelam news b136

 அதிகரிக்கும் ஆட்கடத்தல் கடும் கவலையில் பெற்றோர்கள். முல்லைத்தீவு யுவதி ஒருவரைக் காணவில்லை; தாயார் முறைப்பாடு முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யுவதி காணாமல்போனமை தொடர்பில் அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

TAMIL Eelam news b135

 ஜப்பான் நாடு சின்னாபின்னமாகும்.. சீன அரசு பகிரங்க எச்சரிக்கை..!! சீனாவை எதிர்த்து ஜப்பான் அரசு ஒரு ராணுவ துருப்பை தைவான் நாட்டிற்கு அனுப்பினால் கூட ஜப்பான் ஒட்டுமொத்தமாக தகர்க்கப்படும் என்று காணொளி மூலமாக எச்சரித்துள்ளனர். சீன ராணுவம் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் ஒரு குழுவினர் இந்த காணொளியை உருவாக்கியுள்ளார்கள்.   இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஜப்பான் நாட்டை எச்சரிக்கும் இந்த காணொளி வெளியிடப்பட்டது.  இதற்கு மில்லியன் கணக்கான சீன மக்கள் ஆதரவு தெரிவித்தார்கள். எனினும் இணையதளத்திலிருந்து இந்த காணொளி சில பிரச்சனைகளால் நீக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் சீனாவின் அதிகாரிகள் அதே காணொளியை மீண்டும் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

TAMIL Eelam news b134

 கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு ஈழத்தமிழரின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாகவும் அழிக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும் அமைந்துள்ள கறுப்பு ஜூலை படுகொலையை சம்பூர் பொலிஸ் பிரிவில் நினைவுகூர தடை உத்தரவு வழங்கி நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டுள்ளது. சம்பூர் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்த பின், ஒரு குழுவினருக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலை நடத்த ஒரு குழுவினர் தயாராகி வருகின்றனர் என்று பொலிசார் மன்றுக்கு தெரிவித்தனர். பொலிசாரின் விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர் மூதூர் நீதவான் பாஸ்மிலா பானு, வெருகல் பிரதேச சபையின் துணைத்தலைவர் வேதநாயகம் சங்கர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேசபிள்ளை குகன், உள்ளிட்ட பலருக்கு தடை உத்தரவுகளை வழங்கினார். 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார் - காயப்ப

TAMIL Eelam news b133

 யாழில் சிறீலங்கா புலாநாய்வாளர்கள் அட்டகாசம் யாழில் மீண்டும் ஒரு வாள்வெட்டு சம்பவம்: பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி யாழ்.காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது அடாவடி குழுவினர் சிலர் தீமுட்டியுள்ளனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை நிலவி வருகின்றது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  கடை உரிமையாளரும் அவரது மனைவியும் மனைவியாரது தம்பியும் கடையிலிருந்து தமது கடையின் பின்புறத்தே உள்ள வீட்டிற்கு கடையில் உள்ள பொருட்களை கொண்டு சென்ற நேரம் கடை முன்பாக வந்த அடாவடி குழுவினர் பெற்றோல் போத்தலை எறிந்து தீமூட்டியதுடன் கடை உரிமையாளரின் மனைவியின் மீது வாளால் வீச முற்பட்டுள்ளனர். இருப்பினும் தெய்வாதீனமாக குறித்த பெண் எதுவித காயமுமின்றி தப்பித்துள்ளார். அலறல் சத்தத்தையறிந்து கடையின் பின்புறம் நின்றவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டபோது தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொறுப்பாதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். இச்சம்பவத்தால் கொக்குவில் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து