முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b126

 இன அழிப்பு வியுகம் மாற்றப்பட்டுள்ளது முதல் துவக்கு இப்பொழுது வாள் இன அழிப்பு ஒரே  சமநிலையில் உள்ளது துரோகம் செய்த இந்தியாவிடம் செல்லுங்கள்! வெல்லுங்கள்!



  இந்தியாவிடம் செல்லுங்கள், சொல்லுங்கள், வெல்லுங்கள்! அமெரிக்கா ஜனதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முறை கூறினார், “நீங்கள், எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களில் எல்லரையும் மடையர் ஆக்க முடியாது” என்று. அதே போல் நாமும், “எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும் திருப்திப்படுத்த முடியும். ஆனால் எல்லா நேரங்களில் எல்லரையும் திருப்திப்படுத்துவது இயலாத காரியம்” எனஅரசியல் ஆய்வாளர் ச.வி.கிருபாகரன் தனது கட்டுரையில்  தெரிவித்துள்ளார்.


குறித்த கட்டுரையில் மேலும்,


யதார்தம், உண்மை, நடைமுறை சாத்தியங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட ஒரு ஆய்வையும் ஆலோசனையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன். இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்களின் இன்றைய நிலை என்ன?


சில வருடங்களுக்கு முன்னர் - வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயாகம்; இலங்கை தீவில் சிங்களம், தமிழ் என இரு தேசிய இனங்கள் இருப்பதாகவும் கூறி வந்தோம். இவ் சரித்திர ரீதியான உண்மையை - ஆதாரங்களுடன், முள்ளிவாய்க்கால் நிகழ்வு வரை ஈழத்தமிழர் மட்டுமல்ல, தமிழீழ பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட மேற்கு நாட்டு முக்கிய புள்ளிகள் உட்பட சகல இன மக்களும் ஏற்றுக் கொண்டனர்.



 

ஆனால் இன்றைய நிலை என்ன? சிலர் கூறுகிறர்கள், முப்பது வருட கால தமிழீழ போராட்டம் இறுதியில் ஏமாற்றத்தை தவிர வேறு எதையும் தமிழ் மக்களுக்கு கொண்டுவரவில்லையென. வேறு சிலர் கூறுகிறார்கள், 1987ம் ஆண்டு கைச்சாத்தான இலங்கை - இந்தியா ஒப்பந்தம் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒப்பந்தமாக இருந்ததுடன், தமிழ் சிங்கள மக்களின் பெரும்பான்மையானோர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், அன்று அவ் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டவற்றில் பத்து வீதமான விடயம் கூட இன்று நடைமுறையில் இல்லை என்கிறார்கள்.


தமிழ் மக்களின் தாயாக பூமியான வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழ் முதலாமைச்சர், அத்துடன் தமிழீழத்தின் தலைநாகரான திருகோணமலையில் வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதான செயலாகும்.



குட்டிக் குழுக்கள் தமிழீழப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் இன்று எங்கு? தமிழீழப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களது கட்டுமானம் மிகவும் பிரமாண்டமானது மட்டுமல்லாது, ஓர் மாபெரும் மக்கள் சக்தியை கொண்டது.


ஆனால் இன்று புலம் பெயர் வாழ்வில் பல குட்டிக் குழுக்கள் மாறி மாறி தமக்குள் சண்டை செய்வதும் ஒருவருக்கு ஒருவர் தூரோகி பட்டமும் வழங்குகிறார்கள். இதனால் ஒடுக்கு முறையாளனால் இவர்களை மிக இலகுவாக கண்கணித்து அடக்கி ஒழிக்க வழிவகுக்கிறது.


உண்மையில் ஒர் ஒடுக்கப்பட்ட இனம் இவ் வழிகளினால் தமது அரசியல் உரிமைகள் சாதிக்கவோ, வெற்றி கொள்ளவோ முடியாது. சிலவேளைகளில் சில தனி நபர்களுக்கு இது ஓர் பொழுது போக்காக இருக்கலாம்.


நாம் இவ் பரிதாபகரமான நிலையிலிருந்து எப்படியாக எம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்? நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு அங்குலமாக எமது தாயாக நிலம் பறிபோய் கொண்டிருப்பதுடன், எமது சமூக, பொருளாதார, காலாச்சாரங்களும் நசமாகிக் கொண்டிருக்கிறது.


சிலர் எம்மை ஒடுக்குபவர் ஓர் அரசு என்பதை மறந்து விடுகிறார்கள். ஓர் ஒடுக்கப்பட்ட இனம், தமது விடுதலைக்காக சர்வதேச ரீதியாக செய்கின்ற வேலை திட்டங்கள் யாவும், தம்மை ஒடுக்குபவரை விட பல மடங்கு திறமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அல்லது சரிசமனனாதாக இருக்க வேண்டும்.

 

இது தவிர்ந்த எந்த வேலை திட்டங்களும் எந்த விதத்திலும் பயன் தரமாட்டாது. இன்று நாம் சரியான பாதையில் செல்வதற்கு எவற்றை நடைமுறைபடுத்த முடியும்? முதலாவதாக நாம் யாவரும் ஐக்கியப்பட வேண்டும்.


ஐக்கியம் என்பது தமிழ் இனத்தின் எதிர்காலம் பற்றிய சகல விடயங்களிலும் இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் சேறு பூசுவதை நிறுத்தி ஓர் பொது வேலை திட்டத்தை உருப்படியாக செய்ய முன்வர வேண்டும்.


இரண்டாவதாக, எமது பொது வேலை திட்டத்தை, தேவையை பொறுத்து ஒழுங்கு செய்ய வேண்டும். மனித உரிமை மீறல்களான – கைது, அரசியல் கைதிகள், படுகொலை, காணமல் போனோர் போன்றவற்றுடன், எம்மீதான திட்டமிட்ட இனஅழிப்பு ஆகிய விடயங்களில் யாவரும் முன் வந்து செய்ய வேண்டும்.


மூன்றவதாக, மிகவும் அவதானமாகவும், நிதனாமாகவும், உண்மையாகவும் ஓர் நிரந்தர தீர்வுக்கான ஆரம்ப வழிமுறைகளை தேட வேண்டும்.


நான்காவதாக, எதிர்காலங்களில் மேல் கூறப்பட்ட மூன்று விடயங்களும் எம்மால் இனிமேலும் தனித்து நின்று செய்ய முடியாது. இவற்றை நடைமுறை படுத்துவதற்கு ஓர் அரசின் ஆதரவு நேரடியகவோ மறைமுகமாகவோ தேவைப்படுகிறது. இல்லையேல் மீண்டும் நாம் தோல்விகளையே தொடர்ந்து சந்திக்க நேரிடும்.


ஜே ஆர் ஜயவர்த்தனாவும் இந்தியாவும்


பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து, 1957ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ம் திகதி பாதயாத்திரையை மேற்கொண்ட ஜே ஆர் ஜயவர்த்தனவே 1987ம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்.


அதாவது, தமிழ் மக்களின் தாயாக பூமியான வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழ் முலாமைச்சர், அத்துடன் தமிழீழத்தின் தலைநாகரான திருகோணமலையில் வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதான செயலாகம். இவ் ஒப்பந்தந்தை தெற்கில் இருந்த எதிர் கட்சிகள் யாவும் எதிர்த்தனர்.


ஜே வி பி தொண்டர்கள் அரச கட்டிடங்கள, போக்குவரத்து வண்டிகள் யாவற்றுக்கு தீவைத்து நாசமாக்கினார். இவ்வேளையில், ஜே ஆர் ஜயவர்த்தன தெற்கு வாழ் மக்களுக்கு கூறியதை நாம் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது, “அன்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பாதயாத்திரையை மேற்கொண்டவன் நான் தான். ஆனால் இன்றைய நிலை அன்று இருந்தது போல் இல்லை. மிக அண்மை காலங்களில் எமது நட்பு நாடுகள் பலரிடம் பல உதவிகளை வேண்டி நின்றோம்.


 

ஆனால் அவ் நாடுகள், இந்தியாவின் நிலை என்னவென வினாவுகிறார்கள். அவர்கள் எமக்கு உதவி செய்ய மறுப்பதுடன், எம்மை இந்தியாவின் உதவியை நாடுமாறு வேண்டுகிறார்கள்.


இதன் காரணமாகவே இவ் ஒப்பந்தத்தை நீண்ட காலத்தில் சிறிலங்காவின் நன்மையை கருதி ஏற்றுக் கொண்டுள்ளேன்” என கூறினார்.


இதன் மூலம், ஓர் அரசு அயல் நாடான இந்தியாவை அலட்சியம் செய்து எதையும் சாதிக்க முடியது என்பதை நாம் அறியக் கூடியதாகவுள்ளது. ஓர் அரசின் நிலை இப்படியானால்........


அதேவேளை பிரதமர் ராஜிவ் காந்தி இவ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக சிறிலங்காவிற்கு விஜயம் செய்த சமயம், மாரியாதை அணிவகுப்பு நடைபெறும் வேளையில், சிறிலங்கா கடற்படை சிப்பாய் ஒருவர் தனது தூப்பாக்கியினால் ராஜிவ் காந்தியை தாக்கினார்.


இத் தக்குதலின் பின்ணனியில் இலங்கை-இந்தியா ஒப்பந்தத்திற்கு எதிரான சிறிலங்காவின் மேல்மட்ட அரசியல்வாதிகள் இருந்தனர். ஆனால் தெற்கில் உள்ள திறமை மிக்க அரசியல்வாதிகளின் திட்டமிடப்பட்ட ராஜதந்திரத்தினால், இந்தியாவினுடனான தமது பகைமையை வளர்க்காது, தமிழிழ விடுதலைப் போராட்டத்தை நிர்மூலமாக்குவதற்கு இந்தியாவின் உதவியை மிக கெட்டித்தனமாக பெற்றுக்கொண்டனர்.


இவ்வேளையில் ஈழத் தழிழராகிய நாம், எமது சரியான ராஜதந்திர அணுகுமுறை மூலம் இந்தியாவின் நட்பை மீண்டும் பெற்றுக்கொள்வதா, அல்லது தொடர்ந்து அவர்களை பகைப்பதன் மூலம் எமது இனத்தின் எதிர்காலத்தை மேலும் நாஷம் செய்வதா என்பதை முடிவு செய்ய வேண்டிய காலம் இது!


தொடர்ந்து யாரையும் நிரந்தர எதிரியாக கொள்வதை விட, சரியான அணுகுமுறை மூலம் இந்தியாவின் நட்பை நாம் பெற்றுக்கொள்ளலாம்.


நட்பை மீண்டும் பெற வேண்டும்


தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தனது 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் தின உரையின் போது, “எமது விடுதலை இயக்கமும், மக்களும் என்றும் சர்வதேச சமூதாயத்துடனும், அயல் நாடான இந்தியாவுடனும் நல்ல உறவை பேண விரும்புகிறார்கள்.


இந்த அடிப்படையில் நாம் எமது நல்ல சகிம்சைகளை வெளிக்காட்டி நட்புக்கான சூழலை உருவாக்கின்றோம். இன்று இந்தியாவில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.


 

சாதகமான புறச்சுழல் மீண்டும் இந்திய வல்லரசுடனான எமது உறவுகளை புதுப்பிப்தற்கு எமக்கு உற்சாகத்தை கொடுக்கின்றது”.


எதிர்காலத்தில் ஓர் ஆயுதப் போராட்டம் சாத்வீகமானதா என்பதை நாம் இங்கு ஆராய வேண்டும். முதலாவதாக, நாட்டில் வாழும் தமீழ மக்கள் பல வெளிப்படையான காரணங்களுக்காக இதை ஆதரிக்க மாட்டார்கள்.


இரண்டவதாக, முன்பு ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகிய 1970ம் ஆண்டுக்களில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் இரண்டு மூன்று இராணுவ முகாம்களும், ஒரு கடற்படை முகாமும், அத்துடன் சில காவல் நிலையங்களுமே இருந்தன.


இதே போன்ற நிலையே மற்றைய பிரதேசங்களிலும். ஆனால் இன்று நூற்றுக் கணக்கான இராணுவ, கடற்படை, ஆகாயப்படை முகாம்களுடன், முழத்துக்கு முழம் சோதனைச் சாவடிகளும் உள்ளன.


மூன்றாவதாக, ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியாவின் முழு ஆதரவும் எமக்கு இருந்தது. இன்று நான்காவதாக, அன்று ஒரு சிலரே அரசிற்கு தகவல் கொடுப்பவர்களாக இருந்தார்கள். இன்று தமிழ் ஒட்டுப்படைகள் வடக்கு கிழக்கில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.


இவ் நிலையில், எதிர்காலத்தில், ஆயுதப் போராட்டம் மீண்டும் பிறக்க முடியுமா? ஆகையால் அயல் நாடான இந்தியாவினுடன் நட்பாக இருப்பதன் மூலமே, நாம் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை காண முடியும். தற்பொழுது சிறிலங்கா அரசு, இலங்கை-இந்திய உடன்படிக்கையில் ஏற்றுக் கொண்ட சில விடயங்களை அறவே கைவிட்டுள்ளது.


ஆனால் இந்தியா அரசு, தமிழீழ மக்களுக்கு இவ் உடன்படிக்கை பற்றி, விசேடமாக வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றி பதில் சொல்லியே ஆக வேண்டும். சிறிலங்காவில் தற்பொழுது, ஜனதிபதி உட்பட அமைச்சர்களும் சொல்வது என்னவெனில், “இங்கு சிறுபான்மை இனம் என்று ஒன்றே இல்லை, நாம் தமிழ் மக்கள் பற்றி ஒன்றையும் கதைக்க விரும்பவில்லை என்கிறார்கள்”.


ஜே வி பி தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்


இந்தியாவின் நட்பு, தலையீடுகள் பற்றி மக்களுக்கு பல வெளிப்படையான சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது.


ஆனால் இறந்த காலத்து அனுபவங்களை நமது எதீர்காலத்திற்கு ஏற்ற வகையில், நாம் மாற்ற வேண்டிய அவசியம் உண்டு. ஊதரணமாக, ஜே வி பியின் முதலாவது எழுச்சியை 1971ம் ஆண்டு நசுக்குவதற்கு இந்திய முன்வந்து பல உதவிகளை சிறிலங்காவிற்கு செய்தது.


அதன் பின்னர் ஜே வி பியின் இராண்டவது எழுச்சி, இலங்கை-இந்தியா ஒப்பந்தத்திற்கு எதிரான செயலாகும். ஆனால் 1989ம் ஆண்டு ஜே வி பி தலைவர்கள் கொல்லப்பட்ட வேளையில், ஜே வி பியின் ஒரு தலைவர், இந்தியாவின் உதவியுடனேயே ஐரோப்பியா நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்தார்.


உதாரணத்திற்கு ஜப்பானையும் அமெரிக்கவையும் பாருங்கள். இரண்டாவது மாகாயுத்தம் நடத்த வேளையில் இவ்விரு நாடுகளும் எதிரி நாடுகள்.


இன்று இவை இரண்டு நாடுகள் போன்ற நட்பு நாடுகள் உலகில் வேறு இருக்க முடியாது. இதை தான் தேசிய தலைவர் பிரபாகரன் சொல்வார், “நான் பெரிது நீ பெரிதுவென வாழாது, நாடு பெரிதென வாழுமாறு”. ஆகையால் தமீழிழ மக்கள் ஆகிய நாம் தொடர்ந்து தோல்விக்கு மேல் தோல்வியை சந்திக்க முடியாது.


நாம் உடனடியாக ஒன்றுபட்டு இந்தியாவின் உதவியை நாட வேண்டும். ஆகையால் வடக்கு-கிழக்கை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் இந்தியாவிடம் முன் வைக்க வேண்டும்.


இதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்தியா தூதுவரலாயங்கள் நோக்கி நாம் அமைதியான ஊர்வலங்கள், விழிப்பு போராட்டங்களை, சுலோகங்கள, படங்களுடன் நடத்த வேண்டும். மனுக்கள், உரையாடல்கள், நியூயோர்க் ஜெனிவா போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் முற்றல்களில், பல ஆயிரக் கணக்கில் கூடி இந்தியாவிடம் வேண்டுகோளை முன் வைக்க வேண்டும்.


அல்லது பொதுநாலவாய மாகாநாடு, அணிசேர மாகாநாடு போற்றவை நடைபெறும் வேளையில், இவற்றை நடைமுறைப்படுத்தலாம். இதுவே நாம் எமது ஆரம்ப வேலையாக கொள்ள வேண்டும். வடக்கு-கிழக்கை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சிறிலங்கா மறுக்கும் கட்டத்தில், இவ் விடயத்தை உலக நீதி மன்றத்தின் முன் இந்தியா கொண்டு செல்ல நிர்பந்திக்கப்படும்.


அண்மையில் சுதந்திரம் பெற்ற பங்காளதேஷ், ஏரித்தீரியா, கிழக்கு தீமோர், தென் சுடான் ஆகியவற்றின் சரித்திரத்தை நாம் அவதானிக்கும் வேளையில், ஒவ்வொரு நாட்டுடைய சுதந்திரத்திற்கும், வேறு ஓர் நாடு துணை நின்றதை அவதானிக்க முடிகிறது.



 

பரிதாபத்திற்குரிய நாம், இன்று பன்னிரண்டு வருடங்களாகியும் ஓர் இறுக்கமான அரசியல் கட்டமைப்பு கிடையது. இது சிங்கள பௌத்த சிறிலங்காவின் புலனாய்வு பிரிவுகளின் கெட்டிதனம் என்பதை நாம் ஏற்று கொள்ள வேண்டும்.


தமிழீழ மக்களின் வெற்றிகரமான ஆயுதப் போராட்டம் இன்று மௌனித்துள்ள கட்டத்தில், அரசியல் கட்டமைப்புகளினுடாகவே நமது சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ள முடியும். ஓலிம்பிக்கில் விளையாட்டு போட்டிகளை உதாரணமாக கொள்ளுங்கள்.


ஓலிம்பிக்கில் நேரடிய எந்த விளையாட்டு வீரனும் பங்கு கொள்ள முடியாது. ஓலிம்பிக்கில் பங்கு கொள்ள விரும்பும் ஒருவர், அதற்கு முன் பல போட்டிகளில் வெற்றி கொள்ள வேண்டும். இது போன்றே, ஓர் ஒடுக்கபட்ட மக்களின் விடுதலை போராட்டம்.


எடுத்த வீச்சில், தற்போதைய நிலையில், நாம் எண்ணுவதை அடைய முடியாது. அதற்கு முன் பல படிகளை வெற்றிகரமாக தாண்ட வேண்டியுள்ளது. ஆகையால் நாம் மேலும் தவறுக்கு மேல் தவறுகள் செய்யாது, எமது அயல் நாடானா இந்தியவினுடனான தொடர்பை மீண்டும் புதுப்பிப்பதற்கு இதுவே சாரியான சந்தர்ப்பம்.


நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்க முடியும்


சிறிலங்கா தொடர்ந்து சர்வதேத்திற்கு கரடி விடுவதை வெளிப்படையாக காணக்கூடியதாகவுள்ளது. இவ் சந்தர்பத்தில் நாம் தொடர்ந்து எமக்குள் சர்ச்சை படுவதனால், இன்னும் சில வருடங்களில் இலங்கை தீவில் எமது இனத்தின் அடையாளம் முற்றாக அழிவதற்கான வாய்ப்பு பெருமளவில் உள்ளது.


தற்பொழுது எமது நிலை ஓர் பேச்சுவார்த்தையை உருவாக்கும் அளவிற்கு கூட பலமானதாகவில்லை. ஆகையால் நாம் ஐக்கியப்பட்டு, ஓர் அரசின் துணையுடன் எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டும்.


தற்போதைய இந்தியா அரசின் நிலைபாடு; சிறிலங்காவிற்குள் சீனாவின் பிரவேசம்; கடந்த மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமை சபையில் ஏற்று கொள்ளபட்ட சிறிலங்கா மீதான தீர்மானம்; ஐரோப்பிய யூனியானின் சிறிலங்கா மீதான கடும் போக்கு; அமெரிக்கா காங்கிரஸில் முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு தமிழீழ மக்களின் தாயாக பூமி போன்றவை யாவும் எமக்கு ஓர் ஊத்து சக்தியை கொடுக்கிறது.


உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மூலையில் வாழும் தழிழன், இந்தியவின் ஆதரவிற்காக குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவின் ஆதரவை தேடுவதன் மூலமே, ஈழத் தமிழன் ஒர் நிரந்தர தீர்வுக்கும், வாழ்வுக்கும் வழிவகுக்க முடியும்.


இது தவிர்ந்த வேறு எந்த செயற்படும், எமது எதிர்காலச் சந்ததியினரையும், மிஞ்சியுள்ளவற்றையும் அறவே அழிக்க வழிவகுக்கும். ஆகையல் தொடர்ந்து மேலும் தவறுகளை செய்யாது, கால நேரம் தாழ்த்தாது, எமது இனத்தை இன்னல்களிலிருந்து காப்பாற்ற வேண்டும்.


நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒடுக்கு முறையாளன், இந்தியாவினுடைய உதவியை பெற்று எம்மை அங்கும் இங்கும் எங்கும் அழிப்பான். ஆகையால் “புத்திமான் பலமான் என்பதை நாங்களும் நிரூபிப்போம்! வாருங்கள், இந்தியாவிடம் செல்லுங்கள், சொல்லுங்கள், வெல்லுங்கள்! ”


 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?