முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 408

 வவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி :  செய்திகள்,



  வவுனியா மாவட்டமானது அதிகளவில் தனியார் கல்வி நிலையங்களையும், பல கல்வி சமூகங்களையும் கொண்டிருக்கும் சிறந்த ஓர் மாவட்டமாகும். இன்றைய சூழ்நிலையில் ஒரு சில ஆசிரியர்களாலும் ஒரு சில பெற்றோராலும் அவர்களது சில போட்டி தன்மையாலும் இன்றைய சூழ்நிலையில் பல மாணவர்கள் பெற்றோர்களின் அரவணைப்பையும், பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அழகான தருணங்களை செலவிடமுடியாமலும் போகின்றது

 என்பது முற்றிலும் உண்மை .இது தொடர்பாக சில பெற்றோர்கள் ஆதங்கங்களை எமக்கு தெரிவித்திருந்தாலும் பலர் அதை வெளியே காட்டிக்கொண்டால் தமது பிள்ளைகள் பாடசாலைகளில் பழி வாங்கப்படுவார்களோ என்ற அச்சத்தில் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்

 என்பதுவே உண்மை

 இது தொடர்பாக சற்று விரிவாக பார்ப்போமேயானால் பல பாடசாலை ஆசிரியர்கள் தமது சுயவிருப்பின் பெயரிலும் தமது சுய இலாபத்திற்காகவும் மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் தமது குடியிருப்புக்களில் வகுப்புக்களை நடாத்தி வருகின்றனர்

. இதன் நிமித்தம் அவர்களது பாடசாலை வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்களை தமது பிரத்தியேக வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுவதுடன் அதில் கலந்து கொள்ளாத மாணவர்களிடம் பாடசாலையில் காரசாரமாக ஆசிரியர்கள் நடந்து கொள்வதையும் பல பெற்றோர்கள் அவதானித்து உள்ளனர்

 என்பதுடன் தமது பிள்ளையையும் ஆசிரியர் புறக்கணிக்க கூடாது என்பதற்காக பல பெற்றோர்கள் அதிருப்தியுடன் பிள்ளைகளை வகுப்பிற்கு அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதிலும் மற்றுமோர் உழைப்பை தேடுகிறார்கள் இவ்வாறான ஆசிரியர்கள், தமது பிரத்தியேக வகுப்புகளில் பங்கெடுக்கும் மாணவர்களிடம் சில பாட புத்தகங்கள் , செயல்நூல்கள் வாங்க வேண்டும் என்று கூறுவதுண்டு சிலர் பணத்தை தாருங்கள் நானே வாங்கி தருகிறேன் எனக்கூறி அதிலும் ஒரு இலாபத்தை அடைவதுடன் மேலும் சில ஆசிரியர்கள் குறிப்பாக ஒரு புத்தக நிலையத்தை குறிப்பிட்டு அங்கு தான் வாங்க வேண்டும் என கூறி அதிலும் ஒரு தரகு கூலியை புத்தக நிலையங்களில் பெற்று இலாபம் அடைகிறார்கள்


 இவற்றுக்கெல்லாம் மேலாக ஞாயிறு தினங்களில் மாணவர்களுக்கு தொடர்ச்சியான வகுப்புக்களை நடாத்தவும் செய்கிறார்கள் இது தொடர்பாக எமது நகரபிதா செயல் வீரன் போல் கடும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும் இன்றுவரை அது வெறும் வாயில் வடை சுடும் கதையாகவே போய்விட்டது . ஞாயிறு தினங்களில் மாத்திரமே பெற்றோர்கள் பிள்ளைகளுடன் சில மணிநேரங்களுக்கு இனிமையாக கழிக்க கூடியதாக உள்ளது குறிப்பாக தந்தைமார்கள் குறித்த தினத்தில் விடுமுறையில் இருப்பதனால் தமது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடக்கூடியதாக இருக்கும் கடந்த காலங்களில் வவுனியா வர்த்தக சங்கம் இது தொடர்பாக கருத்தில் கொண்டு ஞாயிறு தினங்களில் கட்டாயம் வியாபார நிலையங்கள் பூட்டப்பட வேண்டும் என்று அறிவித்தல் விடுத்திருந்தது


 எனினும் நாளடைவில் அதுவும் புழுத்து போனது சில தந்தைமார்கள் ஞாயிறு தினங்களில் பிள்ளைகளை வகுப்பிற்கு அனுப்ப வேண்டாம் என்று கூறினாலும் பல தாய்மார்கள் இல்லை எனக்கூறி பிள்ளைகளை வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என ஒரு சில தந்தைமார்களிடம் இருந்து உள்ள குமுறல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது எனவே எமக்கு கல்வி நிச்சயம் தேவை தான் ஆனால் அதற்காக குடும்ப பாச உறவுகள் அதில் உள்ள அரவணைப்புக்கள் இவற்றை பிள்ளைகளுக்கு கற்று கொடுக்காமல் வெறும் புத்தக புழுவாக எமது பிள்ளைகளை வளர்ப்போமேயானால் நாளடைவில் இலங்கையில் முதியோர் இல்லங்கள் அதிகமாக ஆரம்பிக்கப்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை


 எனவே எம் சமூகமே , கல்விசார் அதிகாரிகளே, வடக்கு மாகாண ஆளுநர் அவர்களே, வலய கல்வி பணிப்பாளர்களே, உள்ளூராட்சி மன்ற தவிசாளர்களே, வர்த்தக சங்க நிர்வாகிகளே இது உங்களின் கவனத்திற்கு இது தொடர்பான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் குடும்பங்களின் பாச உறவுகளை வலு சேர்க்க உதவிடுங்கள் இவ்வாறான ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் இதை பார்த்தவுடன் கோபம் கொள்ளாதீர்கள் தயவு செய்து உங்கள் பிள்ளைகளுடனும் நீங்கள் நேரத்தை சற்று செலவிடுங்கள் இல்லையேல் முதியோர் இல்லம் நிச்சயம் உங்களுக்காக காத்திருக்கும் என்பதில் மாற்றம் இல்லை


 உங்கள் உழைப்பை நாம் குறை கூறவில்லை ஞாயிறு தினங்களிலாவது சற்றும் நம் குழந்தைகளுக்கு விடுமுறை கொடுங்கள் என்பதே எமது வேண்டுகோள் – நன்றி வன்னியிலிருந்து வன்னியின் செல்வன்


இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?