முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 415

 தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்த உலகின் இரண்டாவது பெண் சியாமளா கோலிசியாமளா கோலி பாக் ஜல சந்தியில் நீந்திய போது


தெலங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி (48), என்கிற பெண் இலங்கை தலைமன்னார் முதல் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணை பகுதியில் கடலை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.


தமிழ்நாட்டையும், இலங்கையையும் பாக் நீரிணை கடற்பகுதி பிரிக்கிறது. ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள ராமர் பாலம் என அழைக்கப்படும் மணல் திட்டுக்களும் பாக் நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கின்றன.


முதல் இந்திய பெண்மணி

இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் அந்த கடல் நீரில் பாறைகள், ஆபத்தான கடல் பாம்புகள், ஜெல்லி மீன்கள் மற்றும் பிற ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட பாக் நீரிணை கடலை இடைவிடாமல் நீந்துவது சாதாரண செயல் அல்ல.


30 கி.மீ. நீளம் உள்ள இந்தக் கடற்பகுதியை சியாமளா கோலி கடந்து சாதனை படைத்துள்ளார். இந்தக் கடலை நீந்திக் கடந்த முதல் இந்திய பெண்மணி, உலகின் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை இதன் மூலம் பெற்றிருக்கிறார் சியாமளா.


விளம்பரம்


ஏற்கெனவே பல்வேறு நீச்சல்போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தவர் இவர்.


யார் இந்த சியாமளா கோலி

சியாமளா கோலி தெலுங்கானவில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சமூகவியல் மற்றும் இணைய தள வடிவமைப்பு மற்றும் மல்டிமீடியா (Web Designing and Multimedia) படிப்பில் பட்டம் பெற்றவர்.இவர் 'ஜி.எஸ் டிஜிட்டல் ட்ரீம் டிசைனர் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அனிமேஷனில் ஆர்வம் கொண்ட சியாமளா கோலி 'பரமநந்தாயா ஷிஷியுலு' என்ற நகைச்சுவை அனிமேஷன் சீரியலை தயாரித்து இயக்கினார். இந்த சீரியல் ஐதராபாத்தில் உள்ள தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.


இவர் 'GOWRI' கதையை எழுதி 2டி அனிமேஷனில் இயக்கியுள்ளார். இந்த படம் குழந்தைகளுக்கான கருத்துகளையும், நகைச்சுவையையும் கொண்டதாக உருவாக்கபட்டது. தற்போது சியாமளா கோலி குழு ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் 2டி அனிமேஷன் அம்ச திரைப்படத்தை உருவாக்கி வருகிறது.


13 மணி 43 நிமிடங்கள் இடைவிடாமல் கடலில் நீந்தி சாதனை

சியாமளா கோலி

படக்குறிப்பு,

சியாமளா கோலி தலைமன்னாரின் குதிக்கிறார்


பாக் நிரிணையை நீந்தி கடக்கும் சாதனையை செய்வதற்காக கடந்த வாரம் சியாமளா கோலி தெலங்கானாவில் இருந்து ராமேஸ்வரம் வந்தார். சில நாள்களாக பாக் நீரிணையில் நீந்தி பயிற்சி செய்தார். பின்னர் கடந்த வியாழக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் ராமேஸ்வரம் அடுத்த சங்குமால் கடற்கரையில் இருந்து சியாமளா, அவரது பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் என 13 பேருடன் 2 படகில் இலங்கை தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார்.


சியாமளா கோலியின் குழு இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையை கடந்து இலங்கை கடல் பகுதிக்குள் சென்றதும் இலங்கை கடற்படையின் வடக்கு பகுதி கமாண்டர் அவர்களை வரவேற்று ஆவணங்களை சரி பார்த்து பின் தலைமன்னார் கடற்படை முகாமில் தங்க வைத்தார்.


வெள்ளிக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு இலங்கை தலைமன்னார் கடற்கரையிலிருந்து சியாமாளாவின் நீச்சல் பயணத்தை இலங்கை வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வேலுபிள்ளை கந்தையா சிவஞானம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


பல்கலைக்கழக பட்டம் பெற விநோத நிபந்தனை!

விபத்து: காரை நீச்சல் குளத்தில் மூழ்கடித்த 70 வயது பெண்மணி

வங்கதேசத்தில் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி கட்டாயம் - BBC News தமிழ்

இலங்கை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை பாதுகாப்புடன், நீச்சல் பயிற்சியாளர்களின் உதவியுடன் சியாமளா 13 மணி நேரம் 43 நிமிடங்கள் இடைவிடாமல் கடலில் நீந்தி ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு மாலை 5 மணி 50க்கு வந்தடைந்தார்.


இதன் மூலம் பாக் நீரிணையை நீந்தி கடந்த 13-வது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும் ஆனார். இந்த சாதனையை செய்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.


இடைவிடாமல் நீந்தி வந்த சியாமளாவை ராமேஸ்வரம் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகள் வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.


சியாமளா கோலி

படக்குறிப்பு,

சியாமளா கோலி பாக் ஜல சந்தியை நீந்திக் கடந்து முடித்த பின் எடுத்த படம்


பாக் நீரிணை கடற்பகுதியை நீந்தி கடந்தவர்கள்


பாக் நீரிணை கடற்பகுதியை 1954ம் ஆண்டு இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக 27 மணி 8 நிமிடங்களில் நீந்திக் கடந்தார். அவரை தொடர்ந்து 1966-ல் கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் 29 மணி 25 நிமிடங்களில் இந்த கடலைக் கடந்தார்.


1994ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து வளர்ந்த குற்றாலீஸ்வரன் தனது 13 வது வயதில் 16 மணி நேரத்தில் பாக் நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்தார்.


2019-ல் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த ஆர்.ஜெய் ஜஸ்வந்த் என்ற 10 வயது பள்ளி மாணவர் பாக் நீரிணையைக் நீந்திக் கடந்தார். அதுபோல், கடந்த 2020 பிப்ரவரியில் அமெரிக்காவை சேர்ந்த எடி ஹூ என்பவர் முதல் பெண்ணாக பாக் நீரிணை கடற்பகுதியை நீந்திக் கடந்தார்.


'ராம சேது கடலில் நீந்துவது என் கனவு'


இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சியாமளா கோலி, "எனக்கு 48 வயதாகிறது, நான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்தான் நீச்சல் கற்றுக் கொண்டேன்."


'ராம சேது கடலில் நீந்துவது எனது கனவு மற்றும் லட்சியம். கடந்த ஆண்டே பாக் நீரிணை கடலை நீந்திக் கடப்பதற்கு இந்திய - இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கொரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போனது.'


"பாக் நீரிணையை ஒரு பெண்ணாக நான் நீந்தி கடந்தது, பெண்களால் அனைத்து உயர்ந்த இலக்குகளையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக இருக்கும்" என்றார்.


"இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வருவதற்கு இந்திய - இலங்கை அரசுகளிடம் முறையான அனுமதி பெற்றுள்ளேன். இதுவரை தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பலர் நீந்தி வந்து சாதனை புரிந்துள்ளனர். இருந்தாலும் இன்று நான் 13 மணி நேரம் 43 நிமிடத்தில் இடை விடாது நீந்திக் கடந்து சாதனைக்கு முயற்சி செய்தேன்" என்று கூறினார்.


"முதலில் 10 மணிநேரத்தில் நீந்தி கடந்து விட வேண்டும் என திட்டமிட்டிருந்தேன் ஆனால் இந்தியக் கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் திட்டமிட்ட நேரத்தில் கடக்க முடியவில்லை. என்னுடைய இரண்டு ஆண்டு கனவு இன்று நிறைவேறியது" என்று கூறினார் சியாமளா.கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி