முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 435

 கணவரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்த பெண், கள்ளக்காதலனுடன் தலைமறைவிலிருந்தார்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால் (வயது 33). வேன் டிரைவர். இவரது மனைவி சுஜித்ராமேரி (24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு மகள் என்று 2 குழந்தைகள் உள்ளனர்.

 

இந்தநிலையில், கடந்த மாதம் 3-ந்தேதி, சுஜித்ராமேரி, சென்னையில் உள்ள தனது மாமனார் சகாயராஜை செல்போனில் தொடா்பு கொண்டு, புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற லியோபால் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.


அப்போது நான் நேரில் வருகிறேன், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார் அவரது மாமனார்.


வீட்டு தோட்டத்தில்உடல் புதைப்பு


அதன்படி சகாயராஜ் வீட்டுக்கு வந்தபோது சுஜித்ரா மேரியை அங்கு காணவில்லை. குழந்தைகள் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் சகாயராஜிக்கு தனது மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.


இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்த போது, அவர்களது வீட்டு தோட்டத்தில் புதிதாக பள்ளம் தோண்டியபடி கிடந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த இடத்தை போலீசார், தோண்டி பார்த்த போது லியோபால் புதைக்கப்பட்டு பிணமாக இருந்தார்.


கல்லூரி மாணவனுடன் கள்ளக்காதல்


தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுஜித்ராமேரிக்கும், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.


தற்போது ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் லியோபாலுக்கு தெரியவரவே, அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு, தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.


கேரளாவில் பதுங்கல்


தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதில், ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கேரளாவில் வசித்து வருவதும், அங்கு இவர்கள் சென்று தங்கி இருப்பதும் தெரியவந்தது.


இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சுஜித்ரா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து, விக்கிரவாண்டிக்கு அழைத்து வந்தனர்.

 

கைதான ராதாகிருஷ்ணன் போலீசார் அளித்த வாக்குமூலத்தில், ‘ஏற்கனவே ஒருவரை அடித்துக் கொலை செய்த பாணியை பின்பற்றி லியோபாலை தீர்த்து கட்டினேன்’ என்று கூறியுள்ளார். அந்த கொலை குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி