முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 484

 தமிழர்களுக்காக அரும்பாடுபட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்




மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இன்று யாழ் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளதாக மன்னார் ஆயரில்ல செய்திகள் தெரிவிக்கின்றன.


நல்லடக்கம் தொடர்பான செய்தி பின்னர் அறிவிக்கப் படும் எனவும் தற்போது புனித வாரம் அனுஸ்டிக்கப் படுவதனால் வருகின்ற திங்கட்கிழமை நல்லடக்கம் இடம் பெற வாய்பு உள்ளதாகவும் மேலும் தெரிக்கப் படுகிறது.


மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஓய்­வு­நிலை ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை ஆயர் பணியில் 25 வரு­டங்­களை நிறை­வு­செய்து இன்று வெள்­ளி­விழாக் காண்­கிறார்.


இவர் மன்னார் மறை­மா­வட்­டத்தின் இரண்­டா­வது ஆய­ராக 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம் திகதி திரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.


ஆயர் 16.04.1940 ஆம் ஆண்டு யாழ்ப்­பாணம் நெடுந்­தீவில் பிறந்தார். நெடுந்­தீவு றோ.க. பாட­சாலை, முருங்கன் மகா வித்­தி­யா­லயம், யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி ஆகி­ய­வற்றில் தனது பாட­சாலைக் கல்­வியைத் தொடர்ந்தார்.


கண்டி தேசிய குரு­மடம், திருச்சி புனித பவுல் குரு­மடம் ஆகி­ய­வற்றில் குருத்­துவக் கல்­வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு முன்னாள் யாழ்.ஆயர் எமி­லி­யா­னுஸ்­பிள்ளை ஆண்­ட­கை­யினால் யாழ். மரி­யன்னை பேரா­ல­யத்தில் குரு­வாகத் திரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.


1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பாப்­ப­ரசர் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்­பரால் மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஆய­ராக நிய­மனம் பெற்றார். 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம் திகதி ஓய்­வு­நிலை ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆண்­டகை உட்­பட இலங்­கையின் ஏனைய ஆயர்கள் புடை­சூழ மரு­த­மடு அன்னை ஆல­யத்தில் ஆய­ராகத் திருப்­பொ­ழிவு செய்­யப்­பட்டார்.


ஒரு கொடூ­ர­மான போர்ச் சூழலில் பல்­வேறு நிலை­களில் துன்­பங்­களைச் சுமந்­து­நின்ற மக்­களின் துய­ரங்­களைத் துடைக்க அவர் அரும்­பா­டு­பட்டார்.


சிறை­களில் வாடும் கைதி­களை அவர் அடிக்­கடி சென்று பார்­வை­யிட்டு அவர்­களின் விடு­த­லைக்­காகக் குரல் கொடுத்தார். அவர்­க­ளோடு தனிப்­பட்ட தொடர்­பா­டல்­களை வைத்­தி­ருந்தார். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் சார்­பாக நின்று அவர்­களைக் கண்­டு­பி­டிக்க அல்­லது அவர்­களின் கதியை வெளிக்­கொ­ணர ஓயாது உழைத்தார்.


யுத்­தத்தால் தமது இல்­லி­டங்­களை இழந்­த­வர்­க­ளுக்கு வீடு­களைக் கட்­டிக்­கொ­டுக்க முயற்­சி­களை மேற்­கொண்டார். முள்­ளிக்­கு­ளத்தில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கும், விடத்­தல்­தீவில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கும் அவர் காணி­களை, வீடு­களை வழங்­கி­யமை இதற்கு உதா­ர­ண­மாகும்.


யுத்­தத்தால் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வாழ்­வோ­தய நிறு­வ­னத்தின் உத­விக்­கரம் பிரிவு மூலம் உத­வி­களைப் புரிந்தார். வவு­னியா பம்­பை­ம­டுவில் அமைந்­துள்ள வரோட் நிறு­வ­னத்தின் ஊடா­கவும் இவர்­களின் புனர்­வாழ்­வுக்­காகப் பாடு­பட்டார்.


யுத்­தத்­தாலும், சுனா­மி­யி­னாலும் பெற்­றோரை இழந்து ஆத­ர­வற்று நின்ற பெண் சிறார்­க­ளுக்கு வவு­னி­யாவில் சலே­சிய அருட்­ச­கோ­த­ரி­களின் பரா­ம­ரிப்பில் இல்­லத்தை ஆரம்­பித்தார். அதேபோல் மன்­னா­ரிலும் ஆண் சிறார்­க­ளுக்­கான ஓர் இல்­லத்தை ஆரம்­பித்தார். இவ்­வாறு இன்னும் பல துயர்­து­டைப்புப் பணி­களை முன்­னெ­டுத்தார்.


2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி பேசா­லையில் கடற்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ராக இடம்­பெற்ற தாக்­கு­த­லின்­போது இரண்­டா­யி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் பேசாலை புனித வெற்­றி­நா­யகி அன்னை ஆல­யத்தில் அடைக்­கலம் புகுந்­தி­ருந்­தனர்.


ஆல­யத்தை நோக்கி துப்­பாக்கி வேட்­டுக்­களைத் தீர்த்­துக்­கொண்டு கடற்­ப­டை­யினர் செல்­கின்ற செய்­தியை அறிந்த ஆயர் ஆபத்­தான அந்தச் சூழ்­நி­லையில் அன்­றைய மன்னார் பிர­தேச செய­லாளர் திரு­மதி ஸ்ரான்லி டிமெல் சகிதம் பேசா­லைக்கு சென்று நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வந்தார். இச்­சம்­பவம் தொடர்பில் வத்­திக்­கா­னுக்கு தக­வல்­களை அனுப்­பினார்.


2007ஆம் ஆண்டு ஜன­வரி 2ஆம் திகதி இலுப்­பைக்­க­டவை பட­கு­த்துறைப் பகு­தியில் விமானக் குண்­டுத்­தாக்­கு­தலில் இரண்டு குழந்­தைகள் உட்­பட 13 அப்­பாவிப் பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­போது அந்தத் தாக்­குதல் நடந்த சில மணித்­தி­யா­லங்­களில் குரு­மு­தல்வர் விக்ரர் சோசை அடி­க­ளா­ருடன் அந்த இடத்­திற்கு சென்று அம் மக்­களின் துய­ரத்தில் பங்­கு­கொண்­ட­தோடு கொல்­லப்­பட்­ட­வர்கள் கடற்­பு­லிகள் என்ற அரசின் செய்­தியை மறுத்து பொது­மக்­கள்தான் கொல்­லப்­பட்­டனர் என்ற செய்­தியை உல­கத்­திற்குத் தெரி­யப்­ப­டுத்­தினார்.


மன்­னாரில் 2011 ஜன­வ­ரியில் இடம்­பெற்ற எல்.எல்.ஆர்.சி அமர்வில் ஆயர் ஏனைய குருக்­க­ளோடு இணைந்து மக்­களின் பிரச்­சி­னை­களை எழுத்து மூல­மாக அறிக்­கை­யாக முன்­வைத்தார். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள், தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள புலிகள் இயக்க சந்­தேக நபர்கள், சட்­டத்­திற்குப் புறம்­பான கொலைகள், போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் புனர்­வாழ்வு போன்ற உட­ன­டி­யாகத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய பல விட­யங்கள் மற்றும் அர­சியல் தீர்வின் அவ­சியம் போன்ற விட­யங்­களை அவர் இந்த அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார். வன்­னியில் இருந்த மக்­களில் 146,679 பேருக்கு என்ன நடந்­தது? என்ற கேள்­வியை கேட்டு அர­சாங்­கத்தை ஆட்­டம்­காணம் செய்தார்.


ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழும் போதும், உயிர்நீத்த பின்னரும் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இருப்பார் என்பது பொதுவான கருத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?