முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 466

 தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது கிடையாது; ஆனால் இப்போ இப்படியாகிட்டு.. ராகுல்காந்தி பேச்சு!திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார்.

 

அதனை தொடர்ந்து அடையாறில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.


பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது,


இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்து போராட நான் இங்கு வந்துள்ளேன் என்பதை எனது அனுபவம் மூலம் உங்களுக்கு கூறுகிறேன்.


சில காலங்களுக்கு முன்னர் அமேதி தொகுதியில் நான் எம்.பி.யாக இருந்த பொது ஒரு இளமையான தலைவர் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்தார். அந்த தலைவர் பாஜக தலைவர் அமித்ஷாவினை சந்திக்கும் புகைப்படத்தை நான் பார்த்தே. அந்த தலைவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தற்போது பாஜகவில் இணைந்துகொண்டார்.


அந்த புகைப்படத்தில் அமித்ஷா ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கிறார். அந்த ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர் அமித்ஷாவின் காலை தொட்டு கும்மிட்டு நின்றுகொண்டிருந்தார். இது மிகவும் அவமரியாதை நிறைந்த உறவாக இது உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அதிக அதிகாரம் மிக்கவரின் காலை தொட்டு கும்மிடுவது அவமரியாதையான நிலையில் உள்ளது. இது தான் பாஜகவின் உறவுமுறையாக உள்ளது.


நீங்கள் பாஜகவிலோ அல்லது பாஜக கூட்டணியில் இருந்தாலோ அவர்களது காலை தொட்டு கும்மிடுவது தான் அவர்களது உறவாக உள்ளது. நீங்கள் நரேந்திரமோடி அல்லது அமித்ஷா முன் தலைகுணிந்து நிற்கவேண்டும். அவர்களுக்கு வேறு எந்த உறவும் புரியாது. ஆனால், காங்கிரசை பொறுத்தவரை ஏற்றதாழ்வு அற்ற உறவு முறையாக இருக்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம்.


எங்கள் பார்வையில் தமிழ்மக்கள் அனைவரும் எங்கள் சகோதர சகோதரிகள். தமிழக மக்களுடன் சரிசமமான மரியாதை, அன்பான உறவு முறையை மட்டுமே வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.


அனைவரும் தங்களுக்கு தலைவணங்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக, நரேந்திரமோடி, அமித்ஷாவின் சித்தாந்தமாக உள்ளது. ஆனால், சகோதரத்துவம், சம உரிமை, சம மரியாதை என்பது காங்கிரசின் சித்தாந்தம்.


மிகவும் சிறந்த நாகரீகமும், சிறந்த மொழியும், சிறந்த பண்பாடும் கொண்ட தமிழகத்தின் முதலமைச்சர், பாஜக, ஆர்.எஸ்.எஸ், நரேந்திரமோடியின் காலை தொடுவதும், தலைகுனிந்து நிற்பதும் என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. இதை பார்க்கும்போது எனக்கு கோபம் வருகிறது.


இவ்வளவு தொன்மையான மக்களின் தலைவர் பாஜக மற்றும் நரேந்திரமோடியின் போன்றவர்கள் முன் தலைகுனிந்து நின்றுகொண்டிருக்கிறார். ஆகையால், தான் நான் இங்கு வந்துள்ளேன். தமிழக மக்களுடன் எனக்கு சமமான உறவு தேவைப்படுகிறது. அது மரியாதை நிறைந்ததாக இருக்கும். தமிழ்நாடு தமிழ்நாட்டில் இருந்து ஆளப்பட வேண்டுமே தவிர டெல்லியில் இருந்து இயங்கக்கூடாது என நான் விரும்புகிறேன்.


என்னைபொறுத்தவரை தமிழ்நாடு என்பது இந்தியா என்று நான் கூறினால் இந்தியா என்பது தமிழ்நாடு என்று நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை இந்தியா முன்பு தமிழ்நாடு கட்டாயப்படுத்தி தலைகுனிய வைக்கப்பட்டால் அது இந்தியா இல்லை. என்னைப்பொறுத்தவரை அனைத்து மக்களுக்கும், மொழிகளுக்கும், பண்பாட்டிற்கும் சமமான மரியாதை என்பதே இந்தியாவின் மையப்புள்ளியாகும்.


அமித்ஷா முன் தமிழக முதல்வர் தலைகுணிந்து நிற்க விரும்பவில்லை. எந்த தமிழனும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. ஆனால், அமித்ஷா முன் தலைகுணிய முதலமைச்சர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். முதலமைச்சர் செய்த ஊழல் காரணமாகவே அவர் அமித்ஷா முன் தலைகுணிந்து நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


தமிழக மக்களிடம் இருந்து முதலமைச்சர் சுரண்டிய பணத்தால் அவர் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார். அதனால் தான் நான் இங்கு வந்துள்ளேன். அதனால் தான் தமிழகத்தில் பாஜக ஆர்.எஸ்.எஸ். நுழைவதை தடுக்க நான் இங்கு வந்துள்ளேன்.


தமிழக அரசியலுக்கு பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. முந்தைய அரசுகள் போன்று கொடுக்க வேண்டிய தேவை தற்போது நிலவவில்லை. தமிழகம் சவால்களை சந்தித்துள்ளது. அருமையான மாநிலம் திறமையான அறிவுசார்ந்த இளைஞர்களை கொண்ட மாநிலம் தங்கள் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியாத சூழல் உள்ளது. இந்தியாவின் வலிமைக்கு உதவிய தமிழ்நாடு பொருளாதாரம் தற்போது அழிவை சந்தித்து வருகிறது. தமிழகத்திற்கு புதிய சிந்தனை, வழிமுறை தேவைப்படுகிறது. இதை வரும் திமுக அரசு நிச்சயம் செய்யும். தமிழக மக்களை மதிக்கும் அரசாக அது அமையும். டெல்லியால் கட்டுப்படுத்தப்பட்ட அரசாக அது இருக்காது.


தமிழக சிந்தனை மீது முழு தாக்குதல் நடத்தப்பட்டுகிறது. இதை குறைத்து மதிப்பிடாதீர்கள். இதற்கு பின் பெரிய பணபலம் உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக பின்புலமாக உள்ளது. தமிழகம் அவர்கள் முன் மண்ணியிட வேண்டும் என பாஜக, ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது.


அவர்களுக்கு தமிழர்களை பற்றி எதுவும் புரியாது. 3000 ஆண்டுகால வரலாற்றில் தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது கிடையாது. தமிழர்களை யார் மரியாதையாக நடத்துகிறார்களோ அவர்களை தமிழர்கள் மரியாதையாக நடத்துவார்கள். இந்த மண்ணுக்கு மரியாதை கொடுத்தவர்கள் யாரும் அவமதிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. 3000 வருடத்தில் யாரையும்

அவமரியாதை செய்ததில்லை.


தமிழகத்தை நீங்கள் அரவணைத்தால் தமிழகம் உங்களை அரவணைக்கும். இதை நானும் எனது குடும்பத்தினரும் புரிந்துகொண்டுள்ளோம். நாங்கள் ஒருபங்கு கொடுத்தால் நீங்கள் இருபங்கு திருப்பி கொடுப்பீர்கள். அன்பு, மரியாதையை தவிர வேறு எந்த உறவும் உங்களிடம் இருந்து நான் பெற எண்ணுவதில்லை. தமிழகம் தான் இந்தியாவின் மையப்புள்ளி. தமிழகம் இல்லாமல் இந்தியா இல்லை. இந்தியாவின் சிந்தனைக்கு அடித்தளமே தமிழகம் தான். தமிழக பண்பாடு, மொழியை பாதுகாக்க வந்துள்ளேன். ஜனநாயகம் மீது தாக்குதல் நடைபெறுகிற்து. அதனால்தான் நான் இங்கு உள்ளேன். தமிழகம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும்.


தொழில்முனைவோர், உற்பத்தி துறையின் தலைநகரம் தமிழகம். இந்த கட்டமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகுகிறது. பணமதிப்பிழப்பு இந்த கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல். சிறுகுறு தொழில் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஜிஎஸ்டி தமிழக உற்பத்தி அமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல்.


பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். இந்த தேர்தலில் வேரறுக்கப்படுவார்கள். முந்தைய தேர்தல் என்பது திமுக , அதிமுக கட்சிகளுக்கு இடையேயான மோதலாக இருந்தது. ஆனால், இது அதுபோன்றதல்ல. இது வித்தியாசமான தேர்தல். இது கட்சிகளுக்கு இடையேயான மோதலாக இல்லை. இந்த தேர்தல் என்பது அதிமுக, ஆர்.எஸ்.எஸ்., நரேந்திரமோடி, அமித்ஷாவுக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான தேர்தல் ஆகும். அதிமுக, பாஜக இந்த தேர்தலில் முற்றிலும் தூளாக்கப்படுவார்கள். இதை திமுக கூட்டணி செய்யும். திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதலமைச்சராவார். சண்டை அத்துடன் நிற்காது. தமிழக மக்கள் மீதான தாக்குதல் அத்துடன் நிற்காது. டெல்லியில் இருந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். நீக்கப்படும்போது தான் தமிழக மக்கள் மீதான தாக்குதல் நிற்கும்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.