முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 95 சிங்களவர் மத்தியில் கொதிநிலை

 

தாதியர்களின் அலட்சியபோக்கு -பிறந்த குழந்தை தரையில் விழுந்து உயிரிழப்பு

 By Sumithiran 29 நிமிடங்கள் முன்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

  அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாதியர்களின் அலட்சியத்தால் குழந்தை தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமது சிசு இன்று (13ஆம் திகதி) காலை உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 அநுராதபுரம் போதனா வைத்தியசாலை

தாதியர்களின் அலட்சியபோக்கு -பிறந்த குழந்தை தரையில் விழுந்து உயிரிழப்பு | During Childbirth A Baby Falls To The Ground

அநுராதபுரம் ரவொவ கல்லஞ்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக கல்லஞ்சிய வைத்தியசாலையில் கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். எனினும் அன்றைய தினமே அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மகப்பேறு விடுதிக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால், பிரசவத்தின்போது தாதியர்களின் அலட்சியத்தால் தங்களின் குழந்தை தரையில் விழுந்ததாக அவரும் அவரது கணவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

உயிரிழந்த குழந்தையின் தாய் தக்சிலா உதயங்கனி தெரிவிக்கையில், “எனது குழந்தை பிறந்த நிலையில், தரையில் விழுந்தது.அருகில் இருந்தும் குழந்தையை யாராலும் பிடிக்க முடியவில்லை.குழந்தை தரையில் விழுந்ததும், குழந்தையை எடுத்துச் சென்றனர்”.

தரையில் விழுந்த குழந்தை 

தாதியர்களின் அலட்சியபோக்கு -பிறந்த குழந்தை தரையில் விழுந்து உயிரிழப்பு | During Childbirth A Baby Falls To The Ground

உயிரிழந்த குழந்தையின் தந்தை குமாரசிங்க திஸாநாயக்க, "குழந்தை பிறந்தவுடன் அதனை பிடிக்க யாரும் இல்லை. குழந்தை தரையில் விழுந்தது. குழந்தையின் தலையில் அடிபட்டது. பின்னர் ஒரு தாதி வந்து குழந்தையை கொண்டு ஓடினார் .அம்மாவிடம் காட்டவே இல்லை.அந்த இரண்டு விடுதிகளில் இருந்தவர்களும் குழந்தை தரையில் விழுந்ததாகச் சொன்னார்கள்.

சம்பவத்தையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தமது குழந்தை இன்று காலை உயிரிழந்துள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த குழந்தையின் தாய் தக்சிலா உதயங்கனி, "குழந்தை கவலைக்கிடமாக இருப்பதாக சொன்னார்கள். இதயம் குறைவாக வேலை செய்கிறது என்று சொல்கிறார்கள். அவர்கள் அதை ஏற்கவில்லை. குழந்தை போதுமான அளவு வளரவில்லை என்று சொன்னார்கள்." 

அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட தாயின் நோயறிதல் குறிப்பிலும் பிரசவத்தின் போது குழந்தை தரையில் விழுந்து குழந்தையின் தலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை பிறக்கும் போது அழவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதயக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?