முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 76

 அணையாத தீபத்தின் அழியாத நினைவுகள் –அமல்ராஜ்

”திலீபண்ண” ஒரு தாயிற்கு மகனாக பிறந்தவர்,  ஆனால் மக்களின் மகனாக மரணித்தார் , அவருக்கு பிற்பட்ட காலத்தில் தாயகத்தில் எல்லாக்குடும்பங்களிலும் அவரும் ஒரு மூத்த மகன் அதனால் தான் திலீபண்ண என்று பாசமாக இன்றுவரை அவரை எல்லோரும் அழைக்கிறோம். அவரை அண்ண என்றுதான் கூப்பிட வேண்டும் என்டு யாரும் எமக்கு சொல்லி தந்ததில்லை , சாதாரண வாழ்வியல் உறவு நிலைக்குள் வரையறுத்துக்கொள்ள முடியாத உறவு நிலைக்கூடாக வந்த சொந்தம் அது.


திலீபண்ண வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவனும் அல்ல , அவர் இருக்கிறபோது இந்த மண்ணில் பிறந்திருக்கவும் இல்லை, ஆனாலும் அவரின் வாழ்வை அந்த சூழல் என் போன்ற எல்லா குழந்தைகளுக்கும் கற்று கொடுத்தது , அவரின் நினைவு என்று நெஞ்சில் தூக்கி சுமக்க அவரின் தியாக புரட்சி எப்படி அழியாமல் இருக்கிறதோ அப்படிதான் அவரை வழிபட்ட நிகழ்வுகளும் அவரின் நினைவாக இருதயத்தில் அரித்துக்கொண்டு கிடக்கிறது.


வீட்டில் , 


குடும்பத்தில் ஒருவராகி போனதால் அநேக வீடுகளில் அவரை பன்னிரு நாட்களும் வழிபடுவோம் , வீட்டு முற்றத்தில் அல்லது கண்டாயத்தில் சதுர வடிவில் சின்ன குடில் செய்து அதனை வெள்ளை சேலையால் முழுமையா அடைத்து உள்ளே கதிரையோ அல்லது சின்ன மேசையோ வைத்து அதை வெள்ளை துணியால் போர்த்தி அதில பிரேம் செய்யப்பட்ட திலீபண்ணையின் படத்தை வைப்போம் அந்த சூழலை வசதிக்கேற்ப சிகப்பு மஞ்சள் கொடியால் அலங்கரிப்போம், எண்ணெய் விளக்கொன்றும் அந்த கதிரையிலோ மேசையிலோ வைப்போம். இதையெல்லாம் பதினாலாம் திகதி பின்னேரம் செய்திருவம், பதினைஞ்சு விடிய படத்துக்கு மாலை போட்டு பூக்கள் தூவி எண்ணெய் விளகேற்றுவம். விளக்கு பன்னிரு நாளும் அணையாமல் தொடர்ச்சியாக எரியும் எண்ணெய் குறைய குறைய விடுவோம். ஒவ்வொரு நாளும் காலையில் மாலையில் பூ வைத்து வணங்குவோம், காற்று அதிகமாக இருந்தால் சில நேரங்களில் விளக்கு நூருவதுண்டு ஆனாலும் மீண்டும் அதை ஏற்றி விடுவோம்.


ஊரின் சந்தியில் , 


வீடுகளில் செய்வது போன்று கொஞ்சம் பெரிதாக அந்த குடிலை அமைப்பார்கள் , வெள்ளை துணியால் தான் அவையும் சுற்றி அடைக்கப்படும், பள்ளிக்கூடத்து உயர மேசை ஒன்று வைத்து திலீபண்ணையின் பெரிய படம் ஒன்று வைப்பார்கள். கதியால்களை ஊண்டி அந்த இடத்தை சிவப்பு மஞ்சள் கொடியால முழுமையாக அலங்கரிப்பார்கள். வீட்டில் செய்வது போலவே எல்லா ஏற்பாடுகளும் சந்நிதியிலும் செய்யப்படும், ஆனால் சந்தியில் செய்வது கொஞ்சம் எழுச்சியாக அலங்கரிக்கப்படும் , அந்த சந்தியை கடந்து தான் யார் வேண்டுமானாலும் ஊரை விட்டு வீதி வழியா போக முடியும் அதை பன்னிரு நாளும் வணங்காமல் யாரும் போறது கிடையாது காலையும் மலையும் பூக்கள் தூவி அதால போய் வருகிற எல்லாரும் வணங்குவார்கள் ஒரு வேளை விளக்கு அணைந்திருந்தால் அதை காண்பவர்கள் அதை ஏற்றிவிட்டுதான் செல்வார்கள் . முதல் நாளில் ஏற்றப்படுகிற விளக்கு பன்னிரு நாளும் எரியும்.


இதை செய்வதற்கு ஒரு நாள் கூட எங்கட ஊருக்கு ஒரு இயக்க உறுப்பினர் கூட வந்ததில்ல காரணம் அதற்கான தேவை இருந்ததில்லை, ஊரவர்கள் தாமாகவே செய்தார்கள், ஊர்ல இருந்த பல பேர் பழைய உறுப்பினரா இருந்தாங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அப்போது போராடிக்கொண்டிருந்தார்கள். உதாரணத்துக்கு கிராமத்திண்ட ஒரு பக்க எல்லையில அடுத்தடுத்து இருந்த பூசி அக்காட , வெங்கடாசலம் அன்னேட , மற்றது எங்கட வீட்ட சமகாலத்தில ஒரே நேரத்தில , பூசி அக்காவீட்ட ஒராள் போராளி , வெங்கடாசலம் அண்ண வீட்ட ரெண்டு பேர் போராளி , எங்கட வீட்ட ரெண்டு பேர் போராளி இப்பிடி ஊர்ல இருந்த அநேக குடும்பம் ஏதோ ஒரு போராட்ட தொடர்ப கொண்டு இருந்ததால யாரும் வந்து செய்ற நிலைமை ஒரு போதும் இருந்ததில்லை. அநேகமா அந்த பணிய செய்தது ஜோன்சன் அண்ண, சங்கர் அண்ண பழைய போராளிகள் அவர்கள் விலத்தி வந்து இருந்தவர்கள்.


பாடசாலையில் ,

பாடசாலையிலும் திலீபண்ணையின் நினைவு வணக்க குடில் ஒன்று செய்யப்பட்டிருக்கும், இங்கே ஒவ்வொரு நாளும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு , தேசிய கொடியேற்றப்பட்டு , விளக்கேற்றி மலர் தூவி வணங்குவோம் , யாரவது ஒரு ஆசிரியர் திலீபண்ண தொடர்பாக சிறிய உரை நிகழ்துவார். இது பன்னிரு நாளும் நிகழும். எங்கட பள்ளிக்கூடம் ஏழாம் ஆண்டுவரை தான் இருந்தது அதால ஐந்தாம் ஆண்டுக்கு மேல பன்னிரு நாட்களில் ஒரு நாளில் இரணை இலுப்பைக்குளத்தில் இருந்த ஒரு இடத்துக்கு பாடசாலையில் இருந்து எல்லாரும் செல்லுவோம். அங்கே இயக்க உறுப்பினர்கள் அந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருப்பார்கள் வணக்க நிகழ்வுகள் முடிந்த பிற்பாடு உரை நிகழ்த்தப்படும், அதுக்கு அடுத்ததாக திலீபண்ணை தொடர்பான காணொளி போடுவார்கள் , அதற்கு அடுத்து ஒளிவீச்சு. அவை முடிந்தவுடன் நிகழ்வுகள் முடிவடைந்து விடும்.


பன்னிரு நாட்கள் ஒரு விரதம் போலவே இந்த வணக்க வழிபாட்டையும் நாங்கள் எல்லோரும் செய்வோம். எனக்கு முந்தையவர்களும் என்னோடொற்றதுமான சந்ததிகள் போராட்டத்துக்குள் பிறந்து, வாழ்ந்து வளர்ந்ததால் அந்த போராட்ட தியாகங்களை யாரும் சொல்லி புரிய வைக்கவேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை , ஆனால் இன்றைய சூழலில் அதற்கான அவசியம் பலமாக உணரப்படுகிறது.


திலீபண்ண முன்வைத்த கோரிக்கைகள் வேண்டுமானால் தமிழர் , தமிழர் நிலம் சார்ந்ததாக இருக்கலாம், ஆனால் அவரின் தியாகம் தமிழர், தமிழர் தாயகம் என்னும் வட்டத்துக்குள் சுருக்கி பார்க்கப்படக்கூடாத ஒன்று , மானிட விடுதலையில் அவருக்குரிய இடத்துக்கான கதவுகளை குரூரமான இந்த உலகம் இற்றைவரை மூடியே வைத்திருக்கிறது.


விடுதலை வேட்கை என்னும் பெரு நெருப்பை பரவச்செய்த தியாக தீபம் ”திலீபண்ண”





கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?