முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 77

 “”திலீபா நீ முன்னால் போ நான் பின்னால் வருகின்றேன்””




அண்ணே ரெண்டே ரெண்டு நிமிடம் அண்ணே ப்ளீஸ்…..

-தியாக தீபம் திலீபன்

உயிரை திரியாக்கி உடலை நெருப்பாக்கி நான்காம் நாளாக எரிந்து கொண்டிருந்த தியாக தீபத்திற்க்கு எம் தேசியத் தலைவர் ஒதுக்கினது நேரம் வெறும் இரண்டு நிமிடமே..


திலீபன் அண்ணா உண்ணா நோண்பிருந்த மேடைக்கு அருகிலுள்ள மேடையில் பொதுமக்கள்,மாணவர்கள்,மாணவிகள்,மகளிர் குழு தலைவிகள் போராளிகள் என்று தொடர்ச்சியாக திலீபன் அண்ணாவைப் பற்றியும் ஈழத்தை பற்றியும் கவிதைகள் கட்டுரைகள் என்று எழுச்சியாக வாசித்து கொண்டிருந்தார்கள் அதில் ஒரு இளம் மாணவியின் கவிதை ஈர்க்கவே தான் படித்து கொண்டிருந்த புத்தகங்களை மூடிவைத்துவிட்டு தன் கவனத்தை அந்த மாணவியின் பாக்கமாக திருப்பி கண்களில் நீர்வழிய அதைக் கேட்க்கின்றார்.


“அண்ணே நானும் பேசப்போறேன் மைக்கை வேண்டி தாங்கோ”என்று கேட்கின்றார் என்னது பேசப்போறியளா நான்கு நாட்கள் ஆகிவிட்டது சாப்பாடும்மில்லை நீரும் அருந்தவில்லை இப்ப பேசினியள் எண்டால் நா வறண்டுவிடும் களைத்து போய்விடுவியள் வேண்டாம்.””அண்ணே கணக்க கதைக்கல்லே சுருக்கமாக முடித்துவிடுகின்றேன் ப்ளீஸ் அண்ணே மைக்கை வேண்டி தாங்கோ”” நீண்ட யோசனைக்கு பின் “”ரெண்டே ரெண்டு நிமிடம்தான் பேசனும்”என்ற நிபந்தனையோடு மைக் திலீபன் அண்ணைக்கு கொடுக்கப்படுகின்றது.திலீபன் அண்ணா பேசத் தொடங்குகின்றார்.


“”எனது அன்பிற்க்குரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேசமுடியாத நிலையிலிருப்பதால் இருந்துகொண்டு பேசுகின்றேன்.நாளை நான் சுயநினைவோடு இருப்பேனோ தெரியாது அதனால் நான் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம் 650பேர் வரையில் இன்றுவரை மரணித்துள்ளோம். மில்லர்(முதல் தரைக் கரும்புலி)இறுதியாக போகும் போது என்னிடம் ஒரு வரி கூறினான் நான் இறுதிவரை அவனுடன் இருந்தேன்.” “நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகின்றேன். எம் மக்கள் விடுதலையடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது என்பதே என் ஒரே ஏக்கம்” “என்று கூறிவிட்டு வெடி மருந்து நிரப்பிய லொறியை எடுத்துச்சென்றான். மரணித்த 650பேரும் அனேகமாக எனக்கு தெறிந்துதான் மரணித்தார்கள் அதனை நான் மறக்கமாட்டேன். உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்க தலைவரிடம் நான் அனுமதி கேட்டபபோது தலைவர் கூறிய வரிகள் எனக்கு நினைவில் உள்ளன.


“திலீபா நீ முன்னால் போ நான் பின்னால் வருகின்றேன்” என்று அவர் கூறினர் இத்தகைய தெளிவான ஒரு தலைவனை  தனது உயிரை சிறிதும் மதிக்காத தலைவனை நீங்கள் பெற்று இருக்கின்றீர்கள் அந்த மாபெரும் வீரனின் தலைமையில் இங்கு மக்கள் புரட்சி வெடிக்கட்டும் அது நிச்யமாக தமிழீழத்தினை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுதரும். இதை வானத்திலிருந்து மற்ற போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன்.


நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலையடைவார்கள் என்று உணருகின்றேன்.மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.விடுதலைபப் புலிகள் உயிரிலும் மேலாக சிறுவர்களை,சகோதரிகளை,தாய்மார்களை,தந்தையர்களை நினைக்கின்றார்கள்.உண்மையான உறுதியான இலட்சியம் அந்த இலட்சியத்தினை எம் தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள் எனது கடைசி ஆசையும் இதுதான்.என்று பேசி முடிக்கின்றார்.

மு.வே.யோ

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

-பிரபாசெழியன்.






கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?