கடவுள் என்பது இருக்குதுதோ இல்லையோ அது எமக்குத்தேவையில்லை ஆனால் கடவுள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு குழந்தை என்பதை தனி மனிதர்கள் கருத்தில் எடுத்துச் செயல்பட வேண்டும் இல்லையெனில் அவர்கள் சமுகத்தில் இருந்து ஒதுக்கப்படுவார்கள்.
கனடாவில் அச்சத்தில் வாழும் தமிழ்ப்பெண் - ஆயிரக்கணக்கில் வன்புணர்வு, கொலைமிரட்டல்கள்
வன்புணர்வு, கொலைமிரட்டல்கள்
கனடாவில் வாழும் தமிழ்ப்பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான வன்புணர்வு, கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், வீடு திரும்ப அச்சம் வெளியிட்டுள்ளார்.
இந்துக்கடவுள்களை இழிவுபடுத்திய குற்றச்சாட்டுக் காரணமாக, யார்க் பல்கலை மாணவியும் சுயாதீன திரைப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை இந்த நிலையை எதிர்கொண்டுள்ளார்.
இவர் தான் உருவாக்கியுள்ள, காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் ஒன்றை அண்மையில் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
அந்த போஸ்டரில், காளி வேடத்தில் இருக்கும் லீனா, கையில் சிகரெட்டுடன் இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
வீட்டுக்குத் திரும்ப அச்சம்
அதைத் தொடர்ந்து, இந்துக்கடவுள்களை அவர் இழிவுபடுத்திவிட்டதாக கடும் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், அந்த போஸ்டர் வெளியான இரண்டே வாரங்களில் தனக்கும், தன் குடும்பத்துக்கும் கொலை மற்றும் வன்புணர்வு உட்பட ஆயிரக்கணக்கான மிரட்டல்கள் வந்துள்ளதாக லீனா தெரிவித்துள்ளார்.
இதனால், இந்தியாவிலுள்ள தன் வீட்டுக்குத் திரும்ப தான் அஞ்சுவதாக லீனா தெரிவித்துள்ளார்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்