கூட்டமைப்புக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய ரகசிய அழைப்பு! மூடிய அறைக்குள் நடந்தது என்ன..! (காணொளி)
யாரை அதிபராக தெரிவுசெய்ய வேண்டும் என்று எமது கட்சிக்குள் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. ஆனால், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, மக்களின் தேவை மற்றும் இனப் பிரச்சினை என்பவற்றை அடிப்படையாக கொண்டே தமது தீர்மானம் அமைந்திருந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டமைப்பின் தீர்மானம்
''இலங்கையில் நடந்தது இனப்பிரச்சினை தான் என்பதை ஏற்றுக்கொள்ள வைப்பதே எமது எண்ணமாகும். இதனை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே அதிபர் தெரிவில் எமது முடிவு காணப்பட்டது.
சஜித் உட்பட பலர் அதிபர் தேர்தலில் கலந்துகொள்ள இருந்து பின்னர் தங்களின் முடிவுகளை மாற்றி கொண்டனர். இதனாலேயே அதிபர் தெரிவு நடப்பதற்கு முதல் நாள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யலாம் என தீர்மானிக்கபட்டது.
அண்மையில் ஐ.நா சபையிலும் இலங்கையில் நடந்தது இனப்பிரச்சினை இல்லை என கூறும் வகையில் ஜி.எல் பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார். எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு தான் எங்களுடைய யுக்தி அமைந்தது.
இலங்கையில் நடந்தது இனப்பிரச்சினை தான்
அதாவது இலங்கையில் நடந்தது இனப்பிரச்சினை தான் என அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதே எமது எண்ணம்.”எனக் கூறியுள்ளார்.
அதிபர் தெரிவின் போது கூட்டமைப்புக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய ரகசிய அழைப்பு, மூடிய அறைக்குள் என்ன நடந்தது என அவர் தெரிவிக்கும் விடயங்களை காணொளியில் காண்க,
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்