சிட்னியில் காணாமல்போன இந்திய இளைஞன் சடலமாக மீட்பு!
சிட்னியில் கடந்த நான்கு நாட்களாக காணாமல்போயிருந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ராகுல் சிங் என்ற இந்தியப் பின்னணிகொண்ட 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
குறித்த இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி காலை 6 மணியளவில் Alchornea Crescent, Mount Annan-இல் அவதானிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரைக் காணவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்ததையடுத்து அவரைத் தேடும்பணி முடுக்கிவிடப்பட்டிருந்தது
அன்றையதினம் காலை 7 மணியளவில் ராகுல் சிங், Mount Annan தாவரவியல் பூங்காவிற்குள் சென்றுகொண்டிருப்பது cctv கமராவில் பதிவாகியிருந்ததைத் தொடர்ந்து குறித்த பகுதியில் தீவிரதேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நான்கு நாட்கள் கழித்து, நேற்று மதியம் 1.40 மணியளவில் குறித்த இளைஞனின் சடலம் Mount Annan தாவரவியல் பூங்காவிலுள்ள நீரணையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் சந்தேகத்திற்கிடமானதாக கருதப்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த இளைஞர் bipolar disorder எனும் உளவியல் சிக்கலுக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்