முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 747 ரணிலின் செயல்பாட்டை ஆதரிக்கும் அமைச்சர்.

பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர்
இலங்கையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறானதொரு நடவடிக்கையை மீண்டும் ஏற்படுத்தவே போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapaksa) தெரிவித்துள்ளார். பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction அத்துடன் மக்கள் பலத்துடன் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் இந்த போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பாரிய நிலைமையாகும் நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction மக்கள் ஆணைமூலம் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பங்கரமான நிலைமையாகும். மேலும், போராட்டத்துக்குள் பயங்கரவாதிகளும் நுழைந்திருக்கின்றனர். உண்மையான போராட்டக்கார்களின் தலைவர்களுடன் நான் கலந்துரையாடி இருக்கின்றேன். அவர்களுடன் இணக்கப்படாட்டுக்கு நாங்கள் வந்தோம். அவர்களின் கோரிக்கையாக இருந்தது முன்னாள் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்பதாகும். அதுவரைக்கும் அவர்களின் போராட்டம் வெற்றிபெற்றது. பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction போராட்டம் மூலம் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பதவி விலகியது அதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்படவேண்டும். அதற்கு ஏற்றவகையில் அவர்களின் போராட்டம் மாற்றமடையவேண்டும். அதற்கு அப்பாலும் அவர்கள் யாரும் வேண்டாம் என்றால் இதனை பொறுப்பேற்பது யார். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் யாரையாவது ஜனாதிபதியாக பெயரிடவேண்டும். இவ்வாறு இல்லாமல் போராட்டத்தை மேற்கொள்வதாக இருந்தால் அது நாட்டில் ஸ்திரத்தன்மையை இல்லாமலாக்கி பொருளாதாரத்தை சீரழிக்கும் செயலாகும். இதற்கு முன்னரும் இரண்டு சந்தர்ப்பங்களில் நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டன. பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை ஏற்படுத்தியது. 400 பஸ்கள் எரிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் மாற்றிகளை அழித்தார்கள். 40க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகளுக்கு தீ வைத்தார்கள். 12 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவம் மற்றும் பொலிஸாரை கொலை செய்தார்கள். இவ்வாறாதொரு நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்லவே முயற்சிப்பதாக எமக்கு விளங்குகிறது. இதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது. அத்துடன், போராட்டத்தில் மறைந்து பாரிய குற்றச்செயல்களை மேற்கொண்டவர்களையே கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction இதனை யாரும் எதிர்க்கவில்லை. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எவருக்கும் எந்தவித நெருக்கடியையோ அவர்களை கைதுசெய்யவோ கூடாது என பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவித்திருக்கின்றோம். அவர்கள் குற்றச்செயல்களை அனுமதிப்பதில்லை. அதேபோன்று இந்த போராட்டத்தின் மூலம் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கவே அவசரகால சட்டம் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் மக்களை அடக்குவதற்கு அவசரகால சட்டத்தை அமுல்படுத்தவில்லை.- என்றார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.