இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு!
கோட்டா கோ கம போராட்டக்களத்தில், இருந்த கூடாரங்களை இரவோடு இரவாக இராணுவத்தினர் அடித்து நொருக்கியுள்ளதுடன் அங்கிருந்த இளைஞர்களையும் விரட்டியடித்துள்ள நிலையில் தென்னிலங்கையர் ஒருவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு! | How Did The Isai Hurt You Viral Record
கோட்டாகோ கம வில் தாக்கப்பட்ட பெண் ஒருவரது புகைப்படத்தையும் , இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தால் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் ஊடக பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் புகைப்பட்டத்தையும் பகிர்ந்த தென்னிலங்கையர் ஒருவர், இசை உனக்கு எப்படி வலித்திருக்கும் என முகநூலில் வெளியிட்ட பதிவு ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களை மீண்டும் ரணமாக்கியுள்ளது.
இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு! | How Did The Isai Hurt You Viral Record
ஆம் சிங்கள காடையர்களால் மிக கொடூரமான முறையில் பெண் என்றும் பாராது துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டமையை எந்தவொரு ஈழதமிழராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
அன்று ராஜபக்க்ஷ குடும்ப வெறியர்களால் தமிழ் மக்கள், பெண்கள் , குழந்தைகள் என பாராது கொல்லப்பட்டபோது அவர்களின் அழுகுரல் எந்தவொரு சிங்களரின் செவிகளிற்கும் எட்டவில்லை. ஆனால் இன்று தென்னிலங்கையர்கள் தாக்கப்படுகையில் தமிழ் மக்களின் கண்களில் ஈரம் வருகின்றது.
இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு! | How Did The Isai Hurt You Viral Record
ஏனெனில் தன் வலியை உணர்ந்தவர்களால் தான் அடுத்தவர்களின் வலியை உணர முடியும். ஒருவேளை இன்று தென்னிலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புறப்பட்டதுபோல , தமிழ் மக்கள் செத்து மடிகையில் , இதேபோல் கிளர்ந்தெழுந்திருதார்களானால் இலங்கையர்கள் எனும் ஒற்றுமை என்றோ மலர்ந்திருக்கும்.
இசை உனக்கு எப்படி வலித்திருக்கும்; தென்னிலங்கையரின் வைரலாகும் பதிவு! | How Did The Isai Hurt You Viral Record
எத்தனையோ உறவுகள் இன்றும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள். இனியேனும் இன மத மொழி பாராது இலங்கையர்கள் என்கின்ற உணர்வு வரட்டும்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்