கோவிட்: மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! மேலும் 100 பேர் மரணம்!!
விக்டோரியாவில் 40 பேர், குயின்ஸ்லாந்தில் 21 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 30 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 100 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மருத்துவமனைகளில் கோவிட் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திங்களன்று புதிய உச்சம் தொட்டது.
திங்களன்று 5,429-ஆக காணப்பட்ட இவ்வெண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்து 5,571 ஆக பதிவாகியுள்ளது.
சிகிச்சைப் பொருட்கள் நிர்வாகம் (TGA) 12-17 வயதுடைய நபர்களுக்கான புரத அடிப்படையிலான Nuvaxovid கோவிட்-19 தடுப்பூசியை தற்காலிகமாக அங்கீகரித்துள்ளது.
Nuvaxovid கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டல செல்கள் ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு, அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தொடங்குகின்றன. தடுப்பூசியில் நேரடி வைரஸ் இல்லை மற்றும் கோவிட்-19 தொற்றை இது உருவாக்காது.
டெல்டா, ஓமிக்ரான் திரிபுகள் மற்றும் கவலைக்குரிய பிற வளர்ந்து வரும் திரிபுகளைக் கண்டறிவதில் ஆய்வக ஆன்டிஜென் சோதனைகள் மற்றும் RATகளின் செயற்றிறன் தொடர்பில் TGA மதிப்பாய்வு செய்கிறது.
2019 ஆம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்டதில் இருந்து வைரஸ் பலமுறை மாற்றமடைந்துள்ளதால், இந்த சோதனைகள் தவறான எதிர்மறையான முடிவைக் காட்டக்கூடும் என்பதை TGA மறுக்கவில்லை.
5-11 வயதுடைய குழந்தைகள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைவாக இருப்பதாக சமீபத்திய தரவு காட்டுகிறது. ஜூலை 24 நிலவரப்படி, 53 சதவீதம் பேருக்கு ஒரு சுற்று தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு இரு சுற்று தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 14,067 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 30 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 12,339 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 40 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 8,612 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 21 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,409 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நால்வர் மரணமடைந்தனர்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,773 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 1328 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.
ACT- இல் புதிதாக 949 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NT- இல் புதிதாக 530 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்