முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 741விமல்வின் திட்டத்தை சிங்கள அரசு பின்தொடர வேண்டும் இதுவே தமிழர்களிற் விடுதலையைப் பெற்றுத்தரும்.

வடக்கு கிழக்கை பிரிக்க மறைமுக நிகழ்ச்சி நிரல் - வெளிநாட்டு படையை களமிறக்க திட்டம்
சிறிலங்காவில் அரச கட்டமைப்பை வீழ்ச்சியடையச் செய்து, வடக்கு கிழக்கை பிரிப்பதே காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவசன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், அரசை வீழ்த்தும் திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கவே உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “நல்லதோ கூடாதோ தேசிய ரீதியான அரசு இருக்க வேண்டும். அரசை வீழ்த்துவது பாவமான செயற்பாடு. சியாரா லியோனில் அவ்வாறு இடம்பெற்றது. ஹைய்ரில் அவ்வாறு இடம்பெற்றது. வடக்கு கிழக்கை பிரிப்பதே காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணி வடக்கு கிழக்கை பிரிக்க மறைமுக நிகழ்ச்சி நிரல் - வெளிநாட்டு படையை களமிறக்க திட்டம் | Covert Agenda To Divide The North East Sl Army இந்த போராட்ட களத்தில் இருப்போர், ஐக்கிய நாடுகள் சபையிடம் சென்று சர்வதேச தலையீட்டை கோரியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வெளிநாட்டிற்கு சென்று, வடக்கு கிழக்கிற்கு வெளிநாட்டு படையினரை கோரியுள்ளார். இவ்வாறு நடந்தால், அதற்கு இடமளித்தால், இன்னும் சில நாட்களில் வடக்கில் உள்ள இராணுவ முகாமிற்கு சென்று, அனைத்தையும் அகற்றிக் கொண்டு செல்லுங்கள் எனக் கூறுவார்கள். வெள்ளா முள்ளிவாய்க்காலுக்கு சென்று முகாம்களை அகற்றுமாறு போராட்டகாரர்கள் கூறுவார்கள். அவ்வாறான போராட்டத்திற்கே சிலர் தூய்மை பட்டம் கொடுகின்றனர்.
நான் ஆவணமொன்றை சமர்ப்பிக்கின்றேன். அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனத்துடன் இணைந்த என்.ஈ.டி என்ற ஜனநாயகத்திற்கான தேசிய நன்கொடை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் 100 நாடுகளில் இயங்குகின்றது. 2020 ஆம் ஆண்டு மாத்திரம் நீதி மற்றும் சமூக விடயங்களை அடிப்படையாக கொண்டு ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 670 டொலரை வழங்கியுள்ளது. மாற்றுக் கொள்கைளுக்கான மத்திய நிலையத்திற்கு 02 இலட்சத்து 85 ஆயிரம் டொலர் நிதியை கடந்த 2020 ஆம் ஆண்டு குறித்த நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்க நிதி உதவி யு.எஸ் அய்ட், சி.எஸ்.ஐ, ஆர்.ஓ.எல் போன்ற செயற்றிடடங்களுக்கும் அமெரிக்க நிதி உதவிகளை வழங்கியுள்ளது. இந்த நிதி சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு அருகில் சென்று நீங்கள் யுத்தக் குற்றங்களை செய்திருப்பீர்கள் என கூறுகின்றனர். உங்களை விட பிரபாகரன் சிறந்தவர் என கூறுகின்றனர். இந்த இராணுவத்தை இவ்வாறு கூற முடியுமா?அனைத்து நேரங்களிலும் மக்களுடன் இருக்கும் இராணுவத்திற்கும் தற்போது தடையை ஏற்படுத்துகின்றனர். இராணுவத்தின் வீடுகளை கண்டறிந்து தீ வைக்க வேண்டும் என ஒரு மூதாட்டி கூறுகின்றார். இதன்மூலம் உளவியல் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இது அரசை வீழ்த்துவதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அரசியலமைப்புக்கு புறம்பாக அதிகாரத்தை உருவாக்க வேண்டும் வடக்கு கிழக்கை பிரிக்க மறைமுக நிகழ்ச்சி நிரல் - வெளிநாட்டு படையை களமிறக்க திட்டம் | Covert Agenda To Divide The North East Sl Army ஒரு கட்சியின் தலைவர் கூறுகின்றார் அரசியலமைப்புக்கு புறம்பாக அதிகாரத்தை உருவாக்க வேண்டும் என. அது சிறந்ததாக இருக்கும். இதுவே மறைமுகமாக இருக்கும் நிகழ்ச்சி நிரல், அரசை வீழ்த்தி, அநீதியான அதிகாரம் உருவாக்கப்படும். நாடு வீழ்ச்சி அடையும். அதன்பின்னர் வடக்கு கிழக்கை பிரிப்பார்கள். இதுவே திட்டம், இந்த திட்டத்திற்கு இடமளிக்க வேண்டாம். இந்த திட்டத்திற்கு இடமளிக்க கூடாது. அதற்காக ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு தரப்பினர் மற்றும் காவல்துறையினருக்கு ஒன்றை கூறுகின்றோம். அரசை பாதுகாக்கவும்,அதற்காக முன்நிற்கவும். நீங்கள் எம்மை பாதுகாக்க வேண்டாம். அரசை வீழ்த்தும் திட்டத்தை முறியடியுங்கள். அதற்காக நாங்கள் உங்களுடன் இருப்போம்” என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி