முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 747 தமிழர்களின் எதிர்பாற்பு.

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள்: சி.அ.யோதிலிங்கம்
ஜனாதிபதி வேட்பாளர்கள் நால்வரும் பெரும்தேசியவாதத்தின் லிபரல் பிரிவையும் இனவாதப்பிரிவையும் சேர்ந்தவர்கள் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவிலயலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்காத எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்க கூடாதென்றும்" இதன்போது வலியுறுத்தியுள்ளார். "கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். யூலை 19ம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது. 20ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமாக வாக்களித்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வர். அவர் எஞ்சியகாலத்திற்கு பதவி வகிப்பார். ஜனாதிபதி தேர்தலில் நான்குபேர் போட்டியிடுகின்றனர். ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, அநுர குமார திசாநாயக்க என்போரே அவ் நால்வருமாவர். இந்நால்வரும் பெரும் தேசியவாதத்தின் லிபரல் பிரிவையும் இனவாதப் பிரிவையும் சேர்ந்தவர்கள். ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள்: சி.அ.யோதிலிங்கம் | Demands To Be Tamil People Presidential Candidates இவர்களில் எவருமே தமிழ் மக்களின் நண்பர்கள் அல்லர். எனவே தமிழ் மக்கள் யார் தொடர்பாகவும் சார்பு நிலையை எடுக்க முடியாது. நால்வருமே தமிழ் மக்கள் நிலை நின்று கையாளப்பட வேண்டியவர்கள்.​ இந் நால்வரில் முதல் மூன்றுபேர் மத்தியிலேயே போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தமிழ்த்தரப்பு இம் மூவரிடமும் தமது கோரிக்கைகளை முன்வைத்து அதனை ஏற்றுக்கொள்பவருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி யோசிக்கலாம்.​ எனவே தமிழ் மக்கள் சார்பில் பின்வரும் கோரிக்கைகளை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள்: சி.அ.யோதிலிங்கம் | Demands To Be Tamil People Presidential Candidates தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் 1. தமிழ்த் தரப்பின் பங்களிப்பைப் பெறுவதற்கு சிங்களத்தரப்பு நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும். எனவே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் பின்வரும் விடயங்களுக்கு தீர்வு காணுதல் வேண்டும். அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் எந்தவித நிபந்தனையுமில்லாமல் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படல் வேண்டும். இதற்கேற்றவகையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும். நிலைமாறு கால நீதிக் கோட்பாட்டிற்கமைய காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தீர்க்கப்படல் வேண்டும். இந்த விடயத்தில் உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு கால அட்டவணை வகுத்தல் வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும். 2009 க்கு பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்து சிங்களக் குடியேற்றங்களும் அகற்றப்படல் வேண்டும். தொல்லியல் திணைக்களம், வனபரிபாலன தினைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை, பௌத்த விவகாரங்கள் அமைச்சு என்பன தமிழர் தாயகத்தில் மேற்கொள்கின்ற ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். தமிழ் மக்களுக்கென பொருளாதார சபை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் முன்வைத்தவாறு மீள அழிப்பு, சட்டவாக்க உரிமை என்பன மக்களுக்கு வழங்கப்படுவதோடு மக்கள் கண்காணிப்புச் சபையும் உருவாக்கப்படல் வேண்டும். 2. அரசியல் தீர்வு தொடர்பாக சிங்கள தேசத்திற்கும் தமிழ்த்தேசத்திற்கும் இடையே சமூக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படல் வேண்டும். அதில் தமிழ்த்தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய அங்கீகாரம், சுயநிர்ணய சமஸ்டி என்பன ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். இதற்கான அரசியல் யாப்புச்சட்ட வடிவம் ஆறு மாதங்களுக்குள் உருவாக்கப்படல் வேண்டும். 3.​ அரசியல் தீர்வு வரும் வரை இடைக்கால நிர்வாகம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும். அந்த நிர்வாகத்திற்கு காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் உட்பட தமிழ் மக்களின் விவகாரங்களை கவனிப்பதற்கான சுயமான அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். எல்லாவற்றிலும் முக்கியம் இந்த மூன்று செயல் திட்டங்களுக்குமான ஒப்புதல் சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் வழங்கப்படல் வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்கும் ஜனாதிபதி வேட்பாளரையே தமிழ்க் கட்சிகள் ஆதரிக்கலாம். எந்த ஜனாதிபதி வேட்பாளரும் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் வாக்களிப்பிலிருந்து தமிழ்க் கட்சிகள் விலகிக்கொள்ள வேண்டும்”என்றார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.