விடுதலை புலிகளின் தோல்வியின் இரகசியத்தை வெளியிட்ட வைகோ!
இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பனில் ம.தி.மு.க கட்சி பிரமுகரின் திருமண விழாவில் இன்று கலந்து கொண்ட ம.தி.மு.க. பொது செயலாளர்; வைகோ மணமக்களை வாழ்த்தி மேடையில் பேசினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ச குடும்பத்தினர்.
இப்போது உயிருக்கு பயந்து பல நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோட்டபய இந்தியாவிற்கு வர முயற்சி செய்வதாகவும் தெரிய வருகிறது.
விடுதலை புலிகளின் தோல்வியின் இரகசியத்தை வெளியிட்ட வைகோ! | Waiko Revealed The Secret Of The Defeat Of Ltte
தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி பெற்றதாக சிங்கள அரசு குறிப்பாக ராஜபக்சே கொண்டாடியபோது எனக்கு தெரியும். இன்னும் சில ஆண்டுகளில் ராஜபக்ச குடும்பம் உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கையை விட்டு தப்பி செல்வார்கள் என நான் அன்று சொன்னது இன்று நடந்துள்ளதாக பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க.,பொது செயலாளர் வைகோ, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று முறை 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
மீனவர்களை பாதுகாக்கும் கடமை மத்திய அரசிடம் உள்ளது. ஆனால் அதனை மத்திய அரசு தவறவிட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
எனவே மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்