முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 709 யாழில் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு

காலிமுகத்திடலில் கொடூர தாக்குதல்! யாழில் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு
காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் கண்டன போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீதான ரணில் - ராஜபக்சக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நாளை மதியம் 10.30மணிக்கு இந்த போராட்டம் இடம்பெறுமென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். காலிமுகத்திடலில் கொடூர தாக்குதல்! யாழில் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு | Srilanka Protest Against Government போராட்டத்திற்கு அழைப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் சுகு தோழர், மின்சார சேவைச்சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் க.இளங்குமரன், நல்லூர் சோசலிச இளைஞர் சங்க அமைப்பாளர் கே.சரவணன், பருத்தித்துறை சோசலிச இளைஞர் சங்க அமைப்பாளர் ச.கணேசரூபன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த போராட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளனர். காலிமுகத்திடல் கோட்டாகோகம பகுதிக்குள் இன்று நுழைந்த முப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருக்கும் கொட்டகைகளை அகற்றியதுடன் போராட்டகாரர்களும் தாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?