முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 761 நெருப்புடன் விளையாடவேண்டாம்

நெருப்புடன் விளையாடவேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதிக்கு சீனா ஜனாதிபதி கடும் எச்சரிக்கை விடுப்பு-!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீனா அதிபர் ஜி ஜிங்பிங் ஆகிய இருவரும் நேற்று தொலைப்பேசி மூலம் பேசினர். சுமார் 2 மணிநேரம் 17 நிமிடங்கள் இந்த உரையாடல் நடைபெற்று உள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை சீனா அதிபர் ஜியுடன் இதுவரை ஒரு முறை கூட நேரில் சந்திப்பு மேற்கொள்ளவில்லை. நான்கு முறையும் தொலைபேசி மூலம் மட்டுமே உரையாடியுள்ள நிலையில், நேற்று ஐந்தாவது முறையாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர். விரைவில் இரு நாட்டு தலைவர்களும் நேரடி சந்திப்பை மேற்கொள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்துள்ளனர்.இந்த பேச்சு வார்த்தையின் போது தைவான் பிராந்தியத்தின் கொள்கை குறித்து இரு நாட்டு தலைவர்களும் முக்கியமாக விவாதித்துள்ளனர். தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது. அதேவேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இது சீனாவை கடும் எரிச்சல் அடைய செய்கிறது. எனவே, ஜனாதிபதி பைடனுடனான பேச்சின் போது, தைவான் விவகாரம் குறித்து ஜி ஜிங்பிங் சீனாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக கூறியுள்ளார். சீனாவின் ஒரு அங்கம் தான் தைவான், எனவே சீனாவின் இறையாண்மையைச் சீண்டும் செயல்களில் அமெரிக்கா ஈடுபடக்கூடாது என கேட்டு கொண்டார். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை எடுத்து போர் தொடுத்துள்ள நிலையில், இதே போன்ற ராணுவ நடவடிக்கையை தைவான் மீது சீனா எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது. தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடவேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. More News 4U:

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?