பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழப்பு
முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கைக்குண்டு வீச முயன்ற சந்தேகநபர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பலாங்கொடை - மனஹேன, தலகஸ்பே பிரதேசத்தில் முறைப்பாடொன்றை விசாரிக்கச் சென்ற இரண்டு பொலிஸார் மீது நேற்று மாலை கத்தியால் வெட்டி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதன்போது தாக்குதலில் வெட்டுக்காயங்களுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிளை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர்.
இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு
பொலிஸார் மீது தாக்குதல் முயற்சி
பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழப்பு | Suspect Killed In Shootout By Police Officers Sl
மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதையடுத்து, பிட்டிகல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதன்போது, சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார்.
சந்தேகநபரைத் தடுக்க முயன்றபோது, தன்னிடமிருந்த கைக்குண்டு மூலம் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்க அவர் முயற்சி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் துப்பாக்கிச்சூடு
அதன்போது பொலிஸ் அதிகாரிகள் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேகநபர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் இன்று காலை உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்