முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 757 வயது போனமையால் மன நிலை குழப்பத்தில் ஐயா விக்கி

ரணிலுக்கு கடிதம் அனுப்பிய எம்.பி விக்னேஸ்வரன்! திடீர் பல்டி
தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை இன்றைய தினம் (19-07-2022) செவ்வாய்க்கிழமை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) கையளித்துள்ளேன். அவரின் உறுதிமொழிக்கமைய நடுநிலைமை என்ற தனது முடிவு சில வேளைகளில் மாறலாம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V. Vigneswaran) தெரிவித்துள்ளார். ரணிலுக்கு கடிதம் அனுப்பிய எம்.பி விக்னேஸ்வரன்! திடீர் பல்டி | President Candidate C V Vigneswaran Mp Sudden Plan புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு புதன்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் கட்சிகளின் ஆதரவை கோரும் முயற்சிகளில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ரணிலுக்கு கடிதம் அனுப்பிய எம்.பி விக்னேஸ்வரன்! திடீர் பல்டி | President Candidate C V Vigneswaran Mp Sudden Plan இந்த நிலையில் ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் நடு நிலையாக செயற்படபபோவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பனருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனினால் ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து பிரதான எதிர்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாச விலகியதால் உங்கள் நடு நிலைமை என்ற முடிவில் மாற்றங்கள் எதாவது உண்டா என அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரணிலுக்கு கடிதம் அனுப்பிய எம்.பி விக்னேஸ்வரன்! திடீர் பல்டி | President Candidate C V Vigneswaran Mp Sudden Plan இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடித மொன்றை பதில் ஜனாதிபதியும் புதிய ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளோம். அது தொடர்பில் அவர் சில உறுதிமொழிகளை வழங்கினார். எனினும் தமது பங்காளிக்கட்சிகளுடனும் ஏனைய தமிழ் கட்சித்தலைவர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளேன். அப்போது சில வேலைகளில் நடு நிலைமை என்ற முடிவு மாற்றமடையலாம். ரணிலுக்கு கடிதம் அனுப்பிய எம்.பி விக்னேஸ்வரன்! திடீர் பல்டி | President Candidate C V Vigneswaran Mp Sudden Plan அதேவேளை ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் யாரும் எனது கட்சியின் ஆதரவை கோரவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவே என்னிடம் நேரடியாக ஆதரவு கோரினார். அதனாலேயே தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடித மொன்றை அவரிடம் நேரில் கையளித்தேன். அவர் உடனடியாகவே படித்துப்பார்த்து சில உறுதி மொழிகளை வழங்கினார். இந்தக்கடிதத்தை எதிர்கட்சித்தலைவரான சஜித் பிரேமதசாவிடமும் கையளிக்க விருந்தேன். ஆனால் அவர் இறுதி நேரத்தில் ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து விலகி விட்டதால் அவருக்கு கையளிக்கவில்லை என்றார்
.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.