முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 732 பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதனால் உண்டாகும் நன்மைகள்

பேரிச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கும் பொழுது அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு தருகிறது பாலில் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது. இது நமது உடலுக்கு தேவையான ஆற்றலையும், பலத்தையும் வழங்கும். அதைப்பபோல் இரும்புச் சத்து பேரிச்சையில் உள்ள முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினின் உற்பத்திக்கு இன்றியமையாதது. அந்தவகையில் பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து குடிப்பதனால் கிடைக்ம் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதனால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமாா? | Benefits Of Soaking Dates Fruit In Milk And Eating பசும் பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால், அது அவர்களுக்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் ஏராளமான சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கின்றன. பேரிச்சம் பழம் மற்றும் பால் கலவையை தவறாமல் உட்கொள்வது கருவில் உள்ள குழந்தைக்கு உறுதியான எலும்புகள் மற்றும் அதிக அளவிலான ரத்தத்தை உருவாக்க வலி வகை செய்யும் என்று இது குறித்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள

c 731 கருணாவை பிரித்த ரணிலை விடுதலைப்புலிகள் அப்படிச் செய்யவில்லை | #interview

கருணாவை பிரித்த ரணில் தொடர்பில் விடுதலைப்புலிகள் எதுவும் செய்யவில்லை : நேரு குணரட்னம்(VIDEO) கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்திற்கு அதில் இருக்ககூடிய 10 உறுப்பினர்களும் கொண்டிருக்கவில்லையென அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் இருக்ககூடிய ஒரு பகுதியினர் ரணிலுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆகவே நீங்கள் உங்கள் மக்களுக்கு உண்மையானவர்களாக வெளிப்படையாக பேசுபவர்களாக இருக்க வேண்டும். கூட்டமைப்பில் இருக்ககூடிய அனைவருக்குமே ஒரு கடமை இருகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

c730 ஹைட்டியில் பெரும் கலவரம் - 471 பேர் வரையில் பலி

ஹைட்டியில் பெரும் கலவரம் - 471 பேர் வரையில் பலி ஹைட்டியில் குழுக்களுக்கு இடையே இந்த மாதம் நடந்த கடுமையான மோதல்களின் விளைவாக குறைந்தது 471 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் மற்றும் சிறுவர்கள் கும்பல்களால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதும் பதிவாகியுள்ளது" என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஹைட்டியில் உள்ள ஐநா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் உல்ரிகா ரிச்சர்ட்சன் தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜூலை 8 மற்றும் 17 க்கு இடையில் நடந்த வன்முறையில் இந்த சம்பவங்கள் பதவிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்டியில் பெரும் கலவரம் - 471 பேர் வரையில் பலி | At Least471 Dead In Haiti Gang Violence அவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. சுமார் 3,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர், அவர்களில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர், மேலும் குறைந்தது 140 வீடுகள

c 729 சாகும் வயதில் ஐயாவிற்கு ஞானம் பிறந்தது

ஜனாதிபதி - பிரதமரிடம் கேள்வி எழுப்பிய சம்பந்தன்! "ராஜபக்சக்களோ அவர்களது அணியினரோ எந்தவொரு காலத்திலும் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியவர்கள் அல்லர். இவ்வாறானதொரு நிலையில் அவர்களின் தயவுடன் ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கூறுவதை எந்த அடிப்படையில் நம்பலாம்?" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R.Sampanathan) கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி - பிரதமரிடம் கேள்வி எழுப்பிய சம்பந்தன்! | Sampanthan Questioned The Ranil Dinesh Gunawardena தன்னுடைய பதவிக் காலத்தினுள் அரசியல் தீர்வைக் காண்பேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அதேபோன்று, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ரணில் அரசைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பவேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், ரணில், தினேஷ் ஆகியோரின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கேட்டபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு பதிலளித்தார். ஜனாதிபதி - ப

c 728 கூட்டமைப்புக்குள் சர்ச்சையை

கூட்டமைப்புக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய ரகசிய அழைப்பு! மூடிய அறைக்குள் நடந்தது என்ன..! (காணொளி) யாரை அதிபராக தெரிவுசெய்ய வேண்டும் என்று எமது கட்சிக்குள் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. ஆனால், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, மக்களின் தேவை மற்றும் இனப் பிரச்சினை என்பவற்றை அடிப்படையாக கொண்டே தமது தீர்மானம் அமைந்திருந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் தீர்மானம் ''இலங்கையில் நடந்தது இனப்பிரச்சினை தான் என்பதை ஏற்றுக்கொள்ள வைப்பதே எமது எண்ணமாகும். இதனை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே அதிபர் தெரிவில் எமது முடிவு காணப்பட்டது. சஜித் உட்பட பலர் அதிபர் தேர்தலில் கலந்துகொள்ள இருந்து பின்னர் தங்களின் முடிவுகளை மாற்றி கொண்டனர். இதனாலேயே அதிபர் தெரிவு நடப்பதற்கு முதல் நாள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யலாம் என தீர்மானிக்கபட்டது. அண்மையில் ஐ.நா சபையிலும் இலங்கையில் நடந்தது

c 727 பொருளாதார நிலையில் உயரும் தமிழர்கள்

தமிழருக்கு கனடாவில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷடம் ஜீவகுமார் சிவபாதம் எனும் தமிழர் ஒருவருக்கு கனடாவில் அதிர்ஷட லாபச்சீட்டின் மூலம் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது. இந்தத் தகவலை Ontario Lottery and Gaming Commission வெளியிட்டுள்ளது. அஜக்ஸ் நகரைச் சேர்ந்தவர் இவருக்கு லொட்டோ மேக்ஸ் ட்ராவில் (கனேடிய டொலர் $500,000) (ரூ.13,90,25,573.10) பரிசு விழுந்துள்ளது. இது குறித்து ஜீவகுமார் சிவபாதம் கூறுகையில், தமிழருக்கு கனடாவில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷடம் | Ajax Winner Of500000 Lotto Max Prize Canada இது எனது முதல் பெரிய வெற்றி. நான் என் அதிர்ஷட லாபச்சீட்டை OLG செயலியில் சரிபார்த்த போது பரிசு விழுந்தது தெரிந்தது. ஆனாலும் நான் அமைதியாகவே இருந்தேன், ஏனென்றால் அது தான் என் இயல்பு. பரிசு விழுந்தது குறித்து என் மனைவிக்கு முதலில் சொன்னேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பரிசு பணத்தை வைத்து புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்

c 726 லெப் செல்லக்கிளி அம்மான்23.7.1983

“விடுதலைப் பாதையின் சாதனையாளனாய் விடுதலைப் புலிகளின் அடிக்கற்கற்களில் ஒன்று” 36ம்ஆண்டு நினைவுகள் _23.07.2019 சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளு